உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் இருந்து கடத்தல்; ரூ.9.6 கோடி கஞ்சாவை பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை

தமிழகத்தில் இருந்து கடத்தல்; ரூ.9.6 கோடி கஞ்சாவை பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

யாழ்ப்பாணம்: தமிழக கடலோரப் பகுதியில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 9.60 கோடி ரூபாய் மதிப்பிலான 320 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், 4 பேரை கைது செய்தனர்.நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு கடலோர மாவட்டங்களின் கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் சமீப காலமாக கடத்தல் அதிகரித்து வருகிறது. கஞ்சா, சமையல் மஞ்சள், இஞ்சி, ஐஸ், போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்திலிருந்து அதிகப்படியாக இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.இன்று (ஏப்ரல் 30) அதிகாலை தமிழக கடலோரப் பகுதியில் இருந்து இலங்கை பருத்தித்துறை கடற்கரைக்கு கஞ்சா கடத்தி வர இருப்பதாக இலங்கை கடற்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இலங்கை காங்கேசன்துறை, பருத்திதுறை, நெடுந்தீவு உள்ளிட்ட கடற்பரப்பில் வழக்கத்தை விட இலங்கை கடற்படையினர் தீவிர சோதனை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது இந்திய கடற்பரப்பிலிருந்து இன்று அதிகாலை இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித் துறை கடற்கரையை நோக்கி வந்த 2 பைபர் படகை கடற்படையினர் பிடித்தனர்.சோதனை செய்த போது அதில் சுமார் 320 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா பொட்டலங்களுடன் படகில் இருந்த இலங்கையை சேர்ந்த 4 பேரையும் கைது செய்த இலங்கை கடற்படையினர் பருத்தித் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்முதல் கட்ட விசாரணையில் இலங்கையர்கள் 4 பேரும் இரண்டு பைபர் படகுகளில் தமிழக கடற்கரைக்கு வந்து இந்த கஞ்சா பொட்டலங்களை பெற்று கொண்டு வந்தது தெரிய வந்தது.கஞ்சா ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய் என மொத்தமாக ரூ.9.60 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னர் பைபர் படகு, கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட 4 பேரும் பருத்தித்துறை போலீஸிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இலங்கை கடற்படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

S Sivakumar
ஏப் 30, 2025 15:12

தமிழ் நாடு மீனவர்கள் என்ற முகவரியில் இப்படி போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கண்டிப்பு மற்றும் நடவடிக்கைகள் உடனடியாக செயல் படுத்துவது மேலும் இரும்பு கரங்கள் கொண்டு தப்பு செய்பவர்கள் தண்டிக்க படவேண்டும்


S.V.Srinivasan
ஏப் 30, 2025 15:11

போதையில்லா தமிழகம் ஆக்க வேண்டும் என்று காவல்துறையை உறுதிமொழி எடுக்க சொன்னதனால் போதை பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வச்சுட்டாங்களா??


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஏப் 30, 2025 14:56

இலங்கை அரசாங்கத்திற்கு எனது வேண்டுகோள்: இந்தியாவிலிருந்து இதுபோன்று சட்டவிரோத கடத்தலில் ஈடுபடுபவர்களை நடுக்கடலில் தடுத்து, சுட்டுக்கொல்வதை விட, இந்த கடத்தல்காரர்களை உங்கள் எல்லைக்குள் அனுமதித்து, சுற்றிவளைத்து கைதுசெய்து, ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டு, தண்டனை கொடுங்கள். எவனும் கேள்வி கேட்க முடியாது. உங்களின் சர்வதேச இமேஜும்


Barakat Ali
ஏப் 30, 2025 13:11

தேசவிரோத மாநிலம் இச்செயலுக்கெல்லாம் கேந்திரமா ????


அன்பே சிவம்
ஏப் 30, 2025 12:32

பெரும்பாலும் உண்மை நிலவரம் இதுதான். இதனால்தான் ஶ்ரீலங்கன் அரசாங்கம் கைது செய்கிறது.


Ramesh Sargam
ஏப் 30, 2025 12:02

தமிழகத்தில் யார் யார் வீடுகளில் இவைகள் பதுக்கப்பட்டிருந்தன என்பதை கண்டறிந்து அவர்களை கடுமையாக தண்டித்து, பிறகு சிறையில் அடைக்க வேண்டும். அநேகமாக திமு கழக கண்மணிகள் வீட்டில்தான் பதுக்கி வைத்திருப்பார்கள்.


சமீபத்திய செய்தி