உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்திலிருந்து கடல் வழியாக கடத்திய 75 கிலோ கஞ்சா இலங்கையில் பறிமுதல்

தமிழகத்திலிருந்து கடல் வழியாக கடத்திய 75 கிலோ கஞ்சா இலங்கையில் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம்: இலங்கை, கிளிநொச்சி சிறப்பு அதிரடி படையினருக்கு, தமிழகத்தில் இருந்து கடல் வழியாக கஞ்சா கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. கவுதாரிமுனை கடற்கரை அருகே உள்ள தொடுவாய் பகுதியில் மறைந்திருந்த போது, டூ வீலரில் சந்தேகப்படும்படி மர்ம நபர் ஒருவர் மூட்டைகளுடன் வந்தார்.சிறப்பு அதிரடிப்படையினர் அவரை தடுத்து நிறுத்த முயன்ற போது, அந்த நபர் டூ வீலரை விட்டு அங்கிருந்து தப்பினார். வாகனத்தில் இருந்த மூட்டையில் 38 பொட்டலங்களில், 75 கிலோ கஞ்சா இருந்தது. டூ வீலர் பதிவு எண் அடிப்படையில் போலீசார், சிறப்பு அதிரடி படையினர் விசாரிக்கின்றனர். பிடிப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 6 லட்சம் ரூபாய்.இந்நிலையில், தமிழகத்தில் இருந்து கடல் வழியாக கடத்திச் சென்ற 40 மூடைகளில் 1287 கிலோ பீடி இலை பண்டல்கள் மன்னார் மாவட்டம் கீரி கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி கிடந்தன. இலங்கை கடற்படையினர் பீடி இலை பண்டல்களை மன்னார் கடற்படை தளத்திற்கு எடுத்துச் சென்று விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

KRISHNAN R
நவ 05, 2024 09:42

இளைஞர்களே.. உங்கள்....பாதை வளரட்டும்....


இப்படிக்கு குக்கர் குண்டு
நவ 05, 2024 07:50

தமிழ்நாட்டுல போதை சுத்தமா இல்லைங்க அதை நல்லா பாருங்க மூலிகை தடை எல்லாம் காஞ்சி போனது நல்ல அது கஞ்சா மாதிரி தெரியும் கஞ்சா மாதிரி வாசம் வரும் கஞ்சா மாதிரி போதை தரும் அதை பார்த்து ஏமாறாதீங்க


pandit
நவ 05, 2024 07:18

இதுதான் அவர் சொன்ன போதை இல்லா தமிழகமோ


Duruvesan
நவ 05, 2024 06:15

மீனவர்களுடன் இணைந்து ஜோசப் போராட்டம்


இறைவி
நவ 05, 2024 05:11

தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப் படுவது, எல்லை கடந்து மீன் பிடிப்பதால் மட்டும் அல்ல. பீடி இலை, டீசல், கஞ்சா, மற்றும் பல வித பொருட்கள், போதை மருந்து உள்பட, சில மீனவர்களால் கடத்தப் படுவதால்தான் . இங்கிருக்கும் அரசியல் வியாதிகள் இவைகளைப் பற்றி பேச மாட்டார்கள். மீனவர்கள் கைது, இலங்கை அட்டூழியம் என்று மக்களைவ்தொண்ண் விட கூவுவார்கள். மத்திய அரசும் இதனை வெளிப்படையாக அறிவிக்க முடியாது. காரணம், தன் நாட்டு மக்களை தானே கட்டிக் கொடுத்த மாதிரி ஆகி விடும். யாழ்ப்பாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பது போல சுருக்கு மடி வலைகளை கொண்டு அவர்கள் எல்லையில் மீன் பிடிக்காமல் இருந்தால், இம்மாதிரி கடத்தல்களுக்கு உடந்தையாக இல்லாமலிருந்தால் இலங்கை கடற்படை நம் மீனவர்களை தேவையின்றி கைது செய்யாது.


Kasimani Baskaran
நவ 05, 2024 05:01

மீனவர்கள் என்ற போர்வையில் இப்படிப்பட்ட தொழில் செய்கிறவர்கள் அயலக அணிகளாக இருக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆக மீனவர்கள் அயலாக்தார்களின் முதலாளிகளை கேள்வி கேட்க ஆரம்பிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை