உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2533 ஆண்டு பழமையான காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியானார் ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்

2533 ஆண்டு பழமையான காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியானார் ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்

சென்னை: 2533 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, ஸ்ரீசத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு நேற்று (ஏப்.30ம் தேதி), அட்சய திருதியை நாளில் சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, சன்யாச தீட்சை வழங்கி ஆசி வழங்கினார். அதன்பின், இளைய மடாதிபதிக்கு சன்யாச தீட்சை வழங்கி, ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற பெயர் சூட்டப்பட்டது.

Gallery

தீட்சை வழங்கும் நிகழ்ச்சி

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70வது மடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இளைய பீடாதிபதிக்கு தீட்சை வழங்கும் வழிபாடுகள் நேற்று காலை 5.30 மணிக்கு ஆரம்பமாகியது. காலை 6:00 மணியில் இருந்து, 7:30 மணிக்குள் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் உள்ள பஞ்சகங்கை தீர்த்தத்தில், இளைய மடாதிபதியான, சத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மாவிற்கு 71வது மடாதிபதியாக சன்யாச தீட்சை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

தீர்த்த அபிஷேகம்

தீட்சை பெறுவதற்கு முன்பு திருக்குளத்தில் இறங்கிய கணேச சர்மா தனது கடுக்கண், மோதிரம், பூணூால், அரைஞாண் கயிறு ஆகியவற்றை துறந்து, மகிழ்ச்சியுடன் சந்நியாசத்தை ஏற்றார். அதன் பின் வேத மந்திரம் முழங்க காலை 6:30 மணிக்கு சன்யாச தீட்சை வழங்கினார் சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். தீட்சை வழங்கிய பிறகு காவி வஸ்திரம், கமண்டலம், தண்டத்தை ஸ்ரீகணேச சர்மாவுக்கு விஜயேந்திரர் வழங்கினார். தொடர்ந்து இளைய மடாதிபதி தலையில் சாளக்கிராமம் வைத்து, சங்கு தீர்த்ததால் அபிஷேகம் செய்து, பல்வேறு மந்திர உபதேசங்கள் செய்தார். காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்றுள்ள கணேச சர்மாவுக்கு, ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்று, பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நாமம் சூட்டினார். பின் இருவரும் இணைந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.

சந்நிதியில் தரிசனம்

தொடர்ந்து காலை 8.00 மணி முதல் 9.00 வரை ஸ்ரீ காமாட்சி அம்பாள் சந்நிதி மற்றும் ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் சந்நிதியில் தரிசனம் மற்றும் விஷேச பூஜைகள் நடந்தன. காலை 9 மணிக்கு ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் இருந்து ஸ்ரீமடத்திற்கு ஊர்வலம் துவங்கியது. மடம் வந்தடைந்ததும் ஸ்ரீ மஹா திரிபுர சுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வர சுவாமி சந்நிதியில் தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து பீடாதிபதிகள், ஸ்ரீ சங்கராச்சாரியார் மற்றும் ஸ்ரீ சுரேஷ்வராச்சாரியார் சந்நிதி, ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹா சுவாமிஜி மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் பிருந்தாவனத்தில் தரிசனம் செய்தனர்.பிருந்தாவன் மண்டப மேடைக்கு சுவாமிகள் வருகை தந்தனர். வேத மந்திரம் முழங்க காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றார் ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். அவருக்கு சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசி வழங்கினார்.

பக்தர்களுக்கு தரிசனம்

தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களின் பல்வேறு கோவில்களில் இருந்து வந்த பிரசாதங்களை இளைய பீடாதிபதி பெற்றுக்கொண்டார். காலை 11.30 மணி முதல் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர பூஜை, பிக்ஷாவந்தனம் மற்றும் பாத பூஜை சமர்ப்பணம் நடந்தது.மாலை 5 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம் நடைபெறும், இரவு 7.30 மணிக்கு சந்திரமவுலீஸ்வர பூஜை நடைபெறுகிறது. விழாவில் தமிழக கவர்னர் ரவி, ஆதீனங்கள், மடாதிபதிகள், சன்னியாசிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச அய்யர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.Gallery

சிறப்பு ஏற்பாடுகள்

சன்யாச தீட்சை வழங்கும் நிகழ்ச்சியை காண வந்தவர்கள் கோவில் தெற்கு வாசல் வழியாக வந்து, நவராத்திரி மண்டபம் வழியாக மாடத்துக்கு வந்து, அங்கிருந்து திருக்குளத்தில் நடந்த நிகழ்ச்சிகளை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பார்வையாளர் மாடத்தில் 3 அகண்ட திரைகள் வாயிலாகவும் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆதீனங்கள், மடாதிபதிகள், சன்னியாசிகள் ஆகியோருக்கு திருக்குளத்துக்கு நடுவில் அமைக்கப்பட்டிருந்த நகரும் தெப்பத்தில் அமந்து நிகழ்ச்சிகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் பூக்கடை சத்திரம், பேருந்து நிலையம், கச்சபேஸ்வரர் கோவில், பஜனை மண்டபம், காமாட்சி அம்மன் கோவில் மற்றும் சங்கர மடம் உள்ளிட்ட இடங்களில் இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பெயரில் டிராவிட் ஏன்?

புதிய பீடாதிபதிக்கு பெற்றோர் வைத்த பெயரின் கடைசியில் டிராவிட் என்ற வார்த்தை இருக்கிறது. பொதுவாக தமிழகத்தில் இருந்து வட இந்தியாவிற்கு குடி பெயர்பவர்கள், தங்கள் பெயருடன் டிராவிட் என்ற வார்த்தையையும் சேர்த்துக்கொள்வர். இவரது முன்னோர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் வலங்கைமான் பகுதியில் இருந்து ஆந்திராவுக்கு குடி பெயர்ந்தவர்கள். அதனால் தான் அவரது பெயரிலும் டிராவிட் என்ற வார்த்தை இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 76 )

sivaraja
மே 06, 2025 16:29

2500 வருட பழமை என்பது எவ்வளவோ பெரிய பொய். தமிழர்களின் 2500 ஆண்டுகள் முந்தைய கல்வெட்டுக்கள் மண்பாண்டங்கள் தான் பழமையை குறிக்கும் சான்றுகள் இதில் சங்கர மடம் 2500 வருட பழமை என்பது எப்படி சாத்தியம்....


M.Sam
மே 05, 2025 17:59

இவர்களால் நாட்டுக்கும் நாடு மக்களுக்கும் என்ன பயன் ? எஸ் கோட்கார்ட் சொல்லுது கருமாவின் கனத்தை இவர்கள் குறிப்பார்களாம் ஏப்ப சாமீ முடியலடா உங்க உருட்ட உங்களோட வச்சுக்கோங்கடா மக்களை மடையர்கள் ஆக வவேண்டாம் ங்களுக்கு புனியமாக போகட்டும்


M.Sam
மே 05, 2025 17:54

இந்த நகர மடத்தில் மக்களுக்கு என்ன ஏன் என்று சொல்லுவீர்களா ? அந்த ங்கரனுக்கேதெரியது


Chess Player
மே 01, 2025 19:46

காஞ்சி ஆச்சார்யர்கள் பாரம்பரிய அறிவு, தர்மம், பாரம்பரியம், நீதி, உண்மை, மக்களின் நன்மைக்காக சுய தியாகம் ஆகியவற்றின் களஞ்சியமாக உள்ளனர். இந்து மதத்தில் மட்டுமே நாம் லோக ஷேமத்திற்காக பிரார்த்தனை செய்கிறோம். மற்ற மதத்தினர், "நீங்கள் எங்களைப் பின்பற்றவில்லை என்றால், நீங்கள் நரகத்திற்குச் செல்வீர்கள்" என்று கூறுவார்கள். அதனால்தான் சனாதன தர்மம் தனித்து நிற்கிறது.


அப்பாவி
மே 01, 2025 17:33

அராவது நம்ம கல் தோன்றி மண் தோன்றா முன் கையில் வேலோடு முன் தோன்றிய மூத்த குடி மாதிரி..


India our pride
மே 01, 2025 16:17

வேத உபநிஷதங்களை பற்றி படிக்க விரும்புவோர் மத்திய அரசு இணைய தளத்தில் படிக்கலாம்.


India our pride
மே 01, 2025 16:10

வெள்ளை காரன் பொய் சொல்லமாட்டான் நமது மெத்த படித்த போலி திராவிட கலாச்சாரம். ஆதி சங்கரர் நிறுவிய பூரி மடம் ஆதிசங்கரரின் பிந்திய மடாதிபதிகள் 145 பெரையும் அவர்கள் வாழ்ந்த காலத்தையும் மிக விளக்கமாக இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. s://govardhanpeeth.org/en/about-us-en/adi-shankaraya-successor அதேபோல காஞ்சி மடம் இஸ்லாமிய படை எடுப்பின் பொது காஞ்சியில் இருந்து வெளியேறி, கும்பகோணம் சென்றதும் அவர்களுக்கு சோழர்களோடு உறவு கொண்ட பிச்சாவரம் ஜமீன்தார் உதவி செய்ததும் வரலாறு.


India our pride
மே 01, 2025 15:56

பூரி ஷங்கராச்சார்ய மடம் சொல்லும் தகவல். Bhagavatpada Adi Shankaraya established the Govardhana Peetha at Jagannath Puri on the Kartika Shukla Panchami of Yudhishtira Saka Samvat 2651 or 486 BC. There’s an unbroken chain of Shankarayas from 2489 years.


Srinivasan Krishnamoorthy
மே 01, 2025 15:41

jaya jaya Sankara, hara hara Sankara. long live Kanchi matam and acharyas. their guidance required for the prosperity of our nation


Murthy
மே 01, 2025 12:57

திராவிடம் என்பதுதான் ட்ராவிட்........எல்லாம் சமஸ்கிருத வார்த்தை.....


புதிய வீடியோ