உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறையில் இருந்து வெளியே வந்தார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன்

சிறையில் இருந்து வெளியே வந்தார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன்

சென்னை:நீதிமன்றம் ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து, சென்னை புழல் சிறையில் இருந்து, ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் விடுவிக்கப்பட்டார்.திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். 'நமது கோவில்கள்' என்ற, 'யுடியூப்' சேனலை நடத்தி வருகிறார். கோவிலில் உள்ள சிலைகள் உள்ளிட்ட சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என, நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து, சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த மாதம், தன், 'யுடியூப்' சேனலில், ஜீயர்கள் குறித்து சில கருத்துகளைக் கூறி, வீடியோ வெளியிட்டார்.இது, ஜீயர்கள் மற்றும் மடாதிபதிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஜீயர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரங்கராஜன் நரசிம்மனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.அவர் மீது அடுத்தடுத்து, ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அனைத்திலும் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. அதைத் தொடர்ந்து, நேற்று காலை, 11:30 மணிக்கு, புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரை அவரது நண்பர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sridhar
ஜன 02, 2025 10:33

உதவா நிதி பிராமணர்கள் காலில் விழுந்த கதையை சொல்வதற்கு ஊடகங்களுக்கு எவ்வளவு பயம் பாருங்கள்


vbs manian
ஜன 02, 2025 10:10

தவறுக்கு மேல் தவறு. விமர்சனத்துக்கு தண்டனை. சமூக அவலங்களுக்கு சுதந்திரம்.


Dharmavaan
ஜன 02, 2025 07:30

செய்தியே ஹவரானது மடாதிபதிகளிடம் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள் புகார் கொடுக்க மிரட்டப்பட்டார்கள், வற்புறுத்தப்பட்டார்கள் என்பதே உண்மை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை