உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு ஒரே ரத்தினக்கல்லில் கிரீடம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு ஒரே ரத்தினக்கல்லில் கிரீடம்

திருச்சி:திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு, பக்தர்கள் வழங்கிய நன்கொடையை பெற்று உருவாக்கப்பட்ட கிரீடத்தை, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோரிடம் பரத நாட்டிய கலைஞரான ஜாகிர் உசேன், நேற்று வழங்கினார்.திருச்சி, சமயபுரம் கோவில், மகா பெரியவர் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த கணேசன் போன்றவர்களுக்கு கிரீடம் செய்து கொடுத்துள்ள திருச்சி கோபால்தாஸ் நிறுவனத்தினர், ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு கிரீடம் செய்வதற்கான ஆர்டரை பெற்றனர்.அந்நிறுவனத்தினர், ஆறு தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு, 34 கேரட்டில் 619 வைரங்கள், கொலம்பியாவில் இருந்து வரவழைத்த 140 கலர் ஸ்டோன்களில் கடைசல் வேலை செய்தும், எமரால்டு இன்கிரீமிங் செய்து, கலை நயத்துடனும் அழகிய வேலைபாடுகளுடனும், 40 நாட்களில் கிரீடத்தை தயார் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

srinivasan
டிச 12, 2024 06:12

இந்த ஜாஹிர் ஹுசைன் தான் ஶ்ரீரங்கம் கோவிலில் வரக்கூடாது என்று ஒருவர் கேஸ் போட்டு இருந்தார். மற்ற மதத்தினர் எப்படி கோயில் உள்ளே போக முடிகிறது.


Indhuindian
டிச 12, 2024 05:20

இவரு பெட்டியிலே நான் நடத்தும் நிகஸ்ச்சிகளுக்கு பணம் வாங்காம இதுக்கு குடுக்க சொல்லி அப்படி செய்ததுதான் இந்த க்ரீடம்ன்னு சொல்லியிருக்காரு வருமான வரி அதிகாரிகள் கவனிக்கணும் இதை வருமான வரி சட்டத்துலே -Diversion of income by overriding title னு ஒன்னு இருக்கே அதுலே விஜாரியுங்க. There is a saying - When Greeks give gift, be cautious and aware- remember the Trojan Horse அப்பிடின்னு. இந்த ஆசாமி ஏற்கனவே ஸ்ரீரங்கம் கோயிலுக்கு போயி தகராறு பண்ணினவர்தானே. அரசியல் பின்புலம் இருக்கு அப்புறம் என்ன. இந்து அறமற்ற துறை ஆணைப்படி கொடிமரத்துக்கு உள்ளே இந்துக்கள் தவிர மற்றவர்கள் நுஷய அனுமதி இல்லேன்னு போர்டு வைக்கறாங்களே. இவரை உள்ளே விட்டார்களா இல்லே வெளியிலேயே வாங்கிகிட்டு போயிட்டாங்களா?


J.V. Iyer
டிச 12, 2024 04:59

இது எங்கே போய் முடியும்? இவன் எதற்கு அனாவாஸ்யமாக பிரச்சினை செய்கிறான்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை