திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சுத்தமான சுற்றுலா தலம் விருது
சென்னை: சு ற்றுலாத்துறை சார்பில், சிறந்த உணவகங்கள், தங்கும் விடுதிகள், பயண ஏற்பாட்டாளர்கள் உட்பட, 17 பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டு வரும், 31 நிறுவனங்கள் மற்றும் இடங்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, சுப்பிரமணியன் ஆகியோர் விருதுகளை வழங்கினர். இதில், திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு, சுத்தமான சுற்றுலா தலம் விருது வழங்கப்பட்டது. விழாவில், சுற்றுலாத்துறை செயலர் மணிவாசன் பேசுகையில், ''தமிழக பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறையின் பங்கு 5 சதவீதமாக உள்ளது. இதை 12 சதவீதமாக, வரும் 2030ம் ஆண்டுக்குள் உயர்த்த வேண்டும் . ' 'மற்ற துறையுடன் ஒப்பிடுகையில், சுற்றுலாத்துறையில் கிடைக்கும் முதலீடுகளுடன் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். ' 'எனவே தான், தமிழக அரசு இத்துறையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது,'' என்றார்.