உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுருதியிலும் ராகத்திலும் அசத்திய ஸ்ரீரஞ்சனி

சுருதியிலும் ராகத்திலும் அசத்திய ஸ்ரீரஞ்சனி

பட்டணம் சுப்பிரமணிய அய்யரின் 'எரா நாபை' எனும் தோடி ராக வர்ணத்தை, ஆதி தாளத்தில் பாடி, சபையில் நிரம்பியிருந்தோர் மனதில் வர்ணம் பூசினார் ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன்.பின், மனதை வருடக்கூடிய ராகமாக திகழும், காபி நாராயணி எனும் ராகத்தில் சில கற்பனை ஸ்வரங்கள் பாடி, 'சரஸ ஸம தான' எனும் தேசாதி தாள கிருதியை, தியாகராஜரின் முத்திரையோடு பாடி, மனதினில் நிலைக்கச் செய்தார்.சபையினருக்கு, 'ராக சுருதி மாளிகை' என்ற புதுவித தலைப்பின் வாயிலாக, கச்சேரியை விறுவிறுப்பாக்கினார் ஸ்ரீரஞ்சனி.சுருதி மாறி கொண்டே இருக்க, சுருதிக்கு இணையாக ராகமும் மாறி கொண்டே இருக்கும்.இவ்வாறான புது முயற்சியால், அவர் பாடிய ராக சுருதி மாளிகை, ரசிகர்களால் வரவேற்கப்பட்டது மட்டுமின்றி, பெரிதும் பாராட்டப்பட்டது.வராளி ராகத்தை, ஆலாபனையாக தொடுத்து, பின் முத்துசுவாமி தீட்சிதரால் இயற்றப்பட்ட 'மாமவ மீனாட்சி' எனும் கிருதியை மிஸ்ர சாபு தாளத்தில், ராக முத்திரையையும், தீட்சிதரின் முத்திரையையும் குரலிசை செவ்வனே அடையாளப்படுத்தினார்.தியாகராஜரின் கடைசி படைப்புகளுள் ஒன்றான, 'பரமாத்மூடுவு தெளியே' கிருதியை, ராக ஆலாபனையில் துவங்கினார். அதற்கு இசைந்தார்போல், கமலகிரண், தன் வயலினை மீட்டி, நடுநாயகிக்கு பக்கபலமாக திகழ்ந்தார்.வாகதீஸ்வரி ராகத்தில் அமைந்த இக்கிருதியின் சரண பகுதியில் நிரவல் பாடி முடித்ததும், தனி ஆவர்த்தனம் ஆரம்பிக்கப்பட்டது. பத்ரி சதிஷ்குமார் மிருதங்க நடைக்கு தகுந்த தளக்கட்டுகளை, தன் கடத்தில் சந்தரசேகர சர்மா அமைத்து மெருகேற்றினார்.பின் 'யேய் ஹோ விட்டலே' பாடலை பாடி, 'ராமனை புஜித்தால்' என்ற மாண்டு ராகப்பாடலையும் தொடுத்தார். இறுதியில் முருகப்பெருமானை நினைத்து இயற்றப்பட்ட 'அமுதமூறு சொல்லாகிய தோகையர்' எனும் திருப்புகழுடன் கச்சேரியை முடித்தார். மயிலாப்பூர் பாரதிய வித்யாபவனில் கூடியிருந்த ரசிகர்கள், மன நிறைவுடன் கிளம்பினர்.-ரா.பிரியங்கா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ