உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொகுதி சீரமைப்பு பிரச்னையில் ஸ்டாலின் மன மாற்றம்

தொகுதி சீரமைப்பு பிரச்னையில் ஸ்டாலின் மன மாற்றம்

சென்னை,: தொகுதி மறுசீரமைப்பு பிரச்னையில், முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிகிறது. போராட்டம், சட்ட நடவடிக்கை என வேகம் காட்டிய முதல்வர், தற்போது தமிழக எம்.பி.,க்களை அழைத்து சென்று, பிரதமரை சந்தித்து பேச முடிவு செய்துள்ளார்.அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், தொகுதி மறுசீரமைப்பு செய்தால், தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் தொகுதி களின் எண்ணிக்கை குறையும். எனவே, மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்ய, முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

யோசனை

தனக்கு ஆதரவாக அண்டை மாநில முதல்வர்களையும், மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநில கட்சிகளின் தலைவர்களையும் அணி சேர்த்து, கூட்டு நடவடிக்கை குழு அமைத்துஉள்ளார். அந்தக் குழுவின் முதல் கூட்டம், கடந்த, 22ம் தேதி சென்னையில் நடந்தது. கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் மாநில முதல்வர்கள், கர்நாடக துணை முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், லோக்சபா தொகுதிகளின் மறுசீரமைப்பு தள்ளி வைக்கப்பட வேண்டும்; தற்போதைய எம்.பி.,க்கள் எண்ணிக்கையே மேலும், 25 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என வலியுறுத்தப்பட்டதுடன், பார்லிமென்ட் கூட்டத்தொடரில், இக்கோரிக்கை முன்வைக்கப்படும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முக்கியமாக, இவ்விவகாரத்தில், அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அடுத்த நடவடிக்கைகளை வரையறுக்க, வல்லுனர் குழு அமைக்கப் போவதாகவும், முதல்வர் ஸ்டாலின், இக்கூட்டத்தில் முன்மொழிந்திருந்தார். அதன் வாயிலாக, மத்திய அரசுக்கு எதிராக அரசியல் ரீதியான போராட்டம், சட்ட ரீதியான வழக்குகள் என, அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.அதற்கு மாறாகவும், அவரது அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றமாகவும், முதல்வரின் அறிவிப்பு அமைந்துள்ளது. அதற்கு காரணமாக, 'இண்டி' கூட்டணி தலைவர்களின் அறிவுறுத்தலும், யோசனையும் அமைந்ததாகவும் சொல்லப்படுகிறது.

சட்டசபையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், 2026ல் நடக்கவுள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால், தமிழகத்தின் ஜனநாயக உரிமை, அரசியல் பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படும். மக்கள் நல்வாழ்வு திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்திய, தமிழகம் போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்படும்.இதைச் சுட்டிக்காட்டி, முன்கூட்டியே எச்சரிக்கை மணியடித்து, நாட்டிலேயே முதன்முதலாக தமிழக சட்டசபையில், கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த கட்டமாக, தமிழக அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை கடந்த 5ம் தேதி கூட்டினோம்.இதன்பின், 22ம் தேதி, கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் கூட்டம், சென்னையில் நடந்தது. கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் உள்ளிட்ட முக்கிய கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்றார். விரிவான ஆலோசனைக்கு பின், லோக்சபா தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்து, மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்து வெளிப்படை தன்மையுடன் நடக்க வேண்டும். கடந்த 1971ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு, மேலும், 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்.மக்கள்தொகை கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது. உரிய அரசியல் சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் மாநிலங்களில் உள்ள சட்டசபைகளிலும், இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். நடக்கும் லோக்சபா கூட்டத்தொடரில், இதுகுறித்து பிரதமரிடம், கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கடிதம் அளித்து முறையிட வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விசாரணை

ஜனநாயக உரிமை, அரசியல் பிரதிநிதித்துவ உரிமை போன்றவற்றை பாதுகாப்பதில், வரலாற்று சிறப்புமிக்க தீர்மானமாக இது நிறைவேற்றப்பட்டது.தமிழகம் முன்னெடுத்து செல்லும் தொகுதி மறுசீரமைப்பு குறித்த விழிப்புணர்வு, தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கான இந்த முன்னெடுப்புக்கு துணைநின்ற பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும், கூட்டு நடவடிக்கை குழுவில் பங்கேற்ற அனைத்து கட்சிகளுக்கும், தமிழக மக்கள் சார்பில் இதயபூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.'தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்' என்ற முழக்கத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்று, நம் உரிமைகளையும், நம்மை போல பாதிக்கப்படும் மாநிலங்களின் உரிமைகளையும் மீட்டெடுக்க வேண்டும். நியாயமான தொகுதி மறுசீரமைப்பை பெறுவதற்கு, தமிழகத்தில் இருந்து பார்லிமென்டில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பி.,க்களை எல்லாம் அழைத்து சென்று, பிரதமரை சந்திக்க இருக்கிறோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 56 )

Nagarajan S
மார் 25, 2025 20:09

The 1st Lok Sabha was constituted on 17 April 1952 and had 489 constituencies, thereby first set of elected members of parliament of Lok Sabha in India. இப்போது 534 எம்பிக்கள் constituencies. அப்போது இருந்த ஜனத்தொகை என்ன 50 கோடி. இன்று இந்திய ஜனத்தொகை 143.53 கோடி, அதனால் எம்பிக்கள் எண்ணிக்கையை 790 ஆக்கினால் இதனால் தமிழகத்திற்கு, மக்கள் தொகை அடிப்படையில் கூடுதலாக 4 அல்லது 5 எம்பி க்கள் கிடைப்பார்கள். அதை ஏன் வேண்டாமென்கிறார்கள்?


எவர்கிங்
மார் 25, 2025 18:43

தனியாக உள்ளே செல்ல/சந்திக்க பயம்


M Ramachandran
மார் 25, 2025 18:12

வேலையில்லாமல் தான் திட்டும் ஒன்றிய அரசை போய் சந்திக்க வாய்பில்லை. திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி தெரியுது. வைத்தியத்திற்காக பயணம். அமித்ஷா ஏமாந்த சோணகிரி அல்ல. மோடியாவது சிறிது கனிவுடன் பார்ப்பார். செய்த விஷயம் பெரிது. உறைய்ய என மற்றுவது போது மக்களின் பணத்தை சூறையாடுவது திருடுவதற்கு சமம். இந்த விஷயம் அங்கு செல்லுபடியாகாது. அப்படி எதற்காவது அவர்கள் செய்தால் அவர்கள் ஏமாளிகள் ஆக்கப்படுவார்கள். பிறகு வேதாளம் மரத்தில் ஏறி ஆட்டம் போடும். அதெல்லாம் அவர்களுக்கு நிச்சயம் தெரியும். அரசியலிலிருந்து திருட்டு கும்பலை விலக்க சொல்வார்கள். சாதாரன விஷயமில்லை. எடுத்தேன் கவுத்தேன் என்று முடிவெடுக்க. நாமே இவ்வளவு யோசிக்கும் போது அவர்கள் யோசிக்காமல் இருப்பார்களா. சாணக்கியத்தனம் விரைவில் வெளிபடும்.


என்றும் இந்தியன்
மார் 25, 2025 17:50

The 1st Lok Sabha was constituted on 17 April 1952 and had 489 constituencies, thereby first set of elected members of parliament of Lok Sabha in India. இப்போது 534 எம்பிக்கள் constituencies. அப்போது இருந்த ஜனத்தொகை என்ன 50 கோடி. இன்று இந்திய ஜனத்தொகை 143.53 கோடி, அதற்காகத்தான் இந்த தொகுதி சீரமைப்பு. இதைக்கூட புரிந்து கொள்ளாத ஒரு கட்சி முதல்வர்..


venugopal s
மார் 25, 2025 17:27

அன்பாக நியாயத்தை எடுத்துச் சொல்லி காரியத்தை சாதிக்கலாம், முடியாவிட்டால் தடியை கையில் எடுக்கலாம் என்று நினைப்பது சரியான வழிமுறை தானே!


எஸ் எஸ்
மார் 25, 2025 18:27

எதிராளியும் தடியை கையில் எடுத்தால்?


M Ramachandran
மார் 25, 2025 17:24

மறை முக அஜெண்டா என்னப்பா?. மயிர் நீங்கின் வாழா உயிர்நீக்கும் கவரிமான். அது தமிழ அமிழனக்கு


theruvasagan
மார் 25, 2025 17:18

இந்த தொகுதிகள் மறுவரையறை ஒத்திவைப்பு தீர்மானம் நொண்டி கூட்டணியில் இருக்கும் வடக்கத்தி கட்சிகளுக்கு எரிச்சலை கிளப்பி விட்டுவிட்டதாம். மக்கள்தொகைக்கு ஏற்ப அங்கே தொகுதிகள் உயரும் வாய்ப்பை தடுத்தால் நொண்டிக் கூட்டணியில் தொடர முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும். அப்படி நடந்தால் அகில இந்திய அளவில் ஆதரவு இல்லாமல் போய் தனித்துவிடப்படும் அபாயம் பின்னடைவை ஏற்படுத்தும். அந்த பயம் கூட இருக்கலாம்.


M S RAGHUNATHAN
மார் 25, 2025 16:37

படுத்தே விட்டான்யா .


ponssasi
மார் 25, 2025 15:16

இருக்குற 39 பேர் ஒன்னும் பண்ணல இன்னும் கூடுதலா 12 அல்லது 15 MP போயி என்ன செய்யப்போறாங்க? இவங்களுக்கு பஞ்சபடி, பயணப்படி, கேன்டீன், டெல்லியில் வீடு, ஓசி டெலிபோன், ஓசி மின்கட்டணம் இத்தியாதிகள் மேலும் சம்பளம் பென்ஷன், பேமிலி பென்ஷன் இவ்வளவும் மக்கள் வரிப்பணத்துல. ஒருவர் MP ஆனால் அவர் வாழ்நாள் முழுவதும் அவருக்கு பின் அவர் மனைவி அல்லது கணவர் இறக்கும்வரை மக்கள் வரிப்பணம் சுமார் 10 கோடிக்குமேல் ஊதியமாகவும் ஓய்வூதியமாகவும் வழங்கப்படுகிறது.


Sridhar
மார் 25, 2025 14:44

இந்த பிரச்னையை கிளப்பி நாலு மாநில முதல்வர்களோட ஆதரவை காமிச்சாரா, இப்போ பாருங்க மீதி இருக்குற மாநிலங்கள் எல்லாம் சேர்ந்து அவங்களோட உரிமைக்குரலை எழுப்பப்போறாங்க. நாங்க இவ்வளவு பேர் இருக்கும்போது எங்களுக்கு ஏன் உரிய பிரதிநிதித்துவம் இல்லை, என்ன ஜனநாயகம் இதுனு போர்க்குரல் எழுப்பப்போறாங்க. இந்தி கூட்டணி காரனுங்க மண்டைய பிச்சுக்கப் போறானுங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை