உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "சமூகநீதி குறித்து பேச ஸ்டாலினுக்கு யோக்கியதை இல்லை" - முருகன் தாக்கு

"சமூகநீதி குறித்து பேச ஸ்டாலினுக்கு யோக்கியதை இல்லை" - முருகன் தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஊட்டி: சமூகநீதி குறித்து பேச முதல்வர் ஸ்டாலினுக்கு யோக்கியதை இல்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார். நீலகிரியில் போட்டியிடும் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்த தொகுதியில் எனக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. திமுக வேட்பாளர் ராசா செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு கிளம்புகிறது. கடந்த 10 ஆண்டுகளில் வாக்காளர் அட்டையை கூட நீலகிரிக்கு மாற்றவில்லை. ராசா, சமுதாயத்தை அவமானமாக பேசுகிறார்.தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியாயமாக இருக்க வேண்டும். அதிகாரிகள் ஒரு சார்பாக நடந்து கொள்கின்றனர். தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் என்னையே சுற்றி சுற்றி வருகின்றனர். ராசாவை கண்டுகொள்வதில்லை. அவரது வாகனத்தை முறையாக சோதிப்பதில்லை. திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் சமூக நீதி குறித்து பேச யோக்கியதை கிடையாது. அருந்ததி மக்களுக்காக இருக்கின்ற ஒரே ரிசர்வ் தொகுதி இந்த நீலகிரி. இங்கு கூட இந்த சமுதாய வேட்பாளரை நிறுத்த முடியவில்லை. இவர் சமூக நீதி குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது. ஆன்மிகத்தில் மக்கள் நம்பிக்கை உள்ளவர்கள். ஆனால் திமுகவினர் அவமானப்படுத்துகின்றனர்.

2 ஜிக்கும், மோடிஜிக்கும்

இந்த தேர்தல் 2 ஜிக்கும், மோடிஜிக்கும் இடையில் நடக்கும் தேர்தல். இப்பகுதி மக்கள் மீது திமுகவினருக்கு அக்கறை இல்லை. பிரிவினைவாதிகளுக்கு இங்கு இடமில்லை. தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலான தேர்தல . இவ்வாறு முருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

பேசும் தமிழன்
ஏப் 12, 2024 19:13

சமூக நீதி பற்றி பேச அவர்களுக்கு தகுதி இல்லை என்று எல்லோருக்கும் தெரியும்.... பழங்குடியின பெண் திரவுபதி முர்மு அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது..... இவர்கள் எல்லாம் அவருக்கு ஓட்டு போடாமல்.... யஷ்வந்த் சின்ஹா என்ற பிராமணருக்கு ஓட்டு போட்டார்கள்.... அப்போதே இவர்களின் சமூக நீதி நாடகம் காணமல் போய் விட்டது.


Easwar Kamal
ஏப் 12, 2024 17:13

சமூக நீதி ஸ்டாலின் பேசாமல் வேறு யார் பேசுவார் மதம் /ஜாதி பாராமல் தன தன மகன் மற்றும் மகளுக்கு மனம் முடித்து உள்ளார் மேடை விட்டு இறங்கினால் வீட்டில் பேசும் மொழி தெலுங்கு வேற்று மொழி பேசும் அரசியல்வாதிகள் உள்ள இந்த தமிழ்நாட்டில் எதனை பேர் தமிழ் பெணையோ /பயங்களையோ மனம் முடித்து உள்ளனர் முதலில் நீயே கீழ் ஜாதி என்று சொல்லித்தான் இந்த அமைச்சர் பதவி கிடைத்தது நீயே தமிழ் பெண்ணையே மனம் முடித்து இருப்பாய் தமிழ்நாட்டை விட்டு டெல்லி சென்றால் தெலுங்கு மக்களோடு லாபி பண்ற நீரீல்ம் பேச வேன்டாம்


Lion Drsekar
ஏப் 12, 2024 16:35

தற்போது இவர் இந்தியாவின் பிரதிநிதி இவரது மூச்சு இந்தியா வளர்ச்சி பெறவேண்டும் என்பதே தேர்தல் அறிக்கை முதல் எல்லா நிலைகளும் இந்தியா , இந்தியா என்ற பேச்சே வாழ்த்துக்கள், வந்தே மாதரம்


P. SRINIVASALU
ஏப் 12, 2024 16:29

அத சொல்ல உங்களுக்கு என்ன யோகிதை இருக்கு முருகன் அவர்களே?


Indian
ஏப் 12, 2024 14:02

நீங்க முதலில் ஒட்டு வாங்கிட்டு பேசுங்க பின்னர் நீங்க பேசுவதை நாங்க கேட்போம்


venugopal s
ஏப் 12, 2024 13:25

உங்களுக்கு முதலில் யோக்கியதை இருக்கிறதா என்று பாருங்கள்!


ஆரூர் ரங்
ஏப் 12, 2024 11:38

திமுக சமூகநீதி பற்றி பேசும் முன் ஒரு ஏழை பட்டியலின ஊழியரை கட்சித் தலைவராகவோ முதல்வராகவோ தேர்ந்தெடுக்கட்டும்.


MADHAVAN
ஏப் 12, 2024 11:25

உங்க மோடி இப்போ எதுக்கு இத்தனை தடவ இங்க அலையுது, தமிழகத்துக்கு வர மோடிக்கு என்ன இருக்கு ?


MADHAVAN
ஏப் 12, 2024 11:24

உங்களுக்கும் உங்க கட்சிக்கு என்ன யோக்கியதை இருக்கு முதல்வர்ப்பத்தி பேசரத்துக்கு,


Ramesh Sargam
ஏப் 12, 2024 11:09

ஸ்டாலின், அவர் மகன் நிதியை பற்றி பேசட்டும் சமூக நீதியை பற்றி பேச ஸ்தாலினுக்கு அறுகதையே இல்லை


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ