உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேஜஸ், வந்தே பாரத் ரயில்களின் சமஸ்கிருத பெயர்களை தமிழில் மாற்றுங்கள்; ஸ்டாலின் வலியுறுத்தல்

தேஜஸ், வந்தே பாரத் ரயில்களின் சமஸ்கிருத பெயர்களை தமிழில் மாற்றுங்கள்; ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை; பிரதமருக்கு தமிழ்மீது பற்று இருப்பதாக பா.ஜ., கூறுவது உண்மை என்றால் தேஜஸ், வந்தே பாரத் ரயில்களின் சமஸ்கிருத பெயர்களை தமிழில் மாற்றுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவின் விவரம்; பிரதமர் தமிழ் மீது அதீத அன்பு கொண்டவர் என்று பா.ஜ., கூறுவது உண்மை என்றால் அது ஏன் செயலில் பிரதிபலிக்கவில்லை? பார்லி.யில் செங்கோலை நிறுவுவதை விட தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இருந்து ஹிந்தியை நீக்கவும், வெற்று புகழுக்கு பதிலாக ஹிந்திக்கு இணையாக தமிழை ஆட்சி மொழியாக்குங்கள். சமஸ்கிருதம் போன்ற மொழிக்கு ஒதுக்குவதை விட கூடுதல் நிதி ஒதுக்குங்கள்.திருவள்ளுவரை காவி நிறமாக்கும் அவநம்பிக்கையான முயற்சிகளை நிறுத்தி, அவரது காலத்தால் அழியாத உன்னதமான திருக்குறளை நாட்டின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.மத்திய பட்ஜெட்டின் போது குறள்களை மேற்கோள் காட்டுவதுடன் நின்றுவிடாமல், சிறப்பு திட்டங்கள், பேரிடர் நிவாரண நிதி, புதிய ரயில்வே திட்டங்களை உறுதி செய்ய வேண்டும்.தமிழகத்தில் இயங்கும் அந்த்யோதயா, தேஜஸ், வந்தே பாரத் போன்ற ரயில்களுக்கு சமஸ்கிருத பெயர்களை திணிப்பதை நிறுத்துங்கள். தமிழகத்தின் ரயில்களில் செம்மொழி, முத்துநகர், வைகை, மலைக்கோட்டை, திருக்குறள் போன்ற தமிழ் பெயர் வைக்கும் நடைமுறைக்கு திரும்ப வேண்டும். தமிழ் மீதான பற்றை செயல் மூலம் நிரூபிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 67 )

Gangadharan
மார் 11, 2025 05:12

தமிழை வளர்க்க விரும்பினால் இந்து ஆன்மீகத்தை கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.கடவுள் மறுப்பு கொள்கை தமிழுக்கும் தமிழர் கலாச்சாரத்துக்கு எதிரானது.தேவாரம் திருவாசகம் திருப்புகழ், நாலாயிர திவ்ய பிரபந்தம்,ஆண்டாள் பாசுரம் கட்டாயப் படிக்க வேண்டும்.போர்டுல மை ஹிந்தி அழிஞ்சு விளையாடாம நெற்றியில் திருநீறு திருமண் பூசி மேற்சொன்ன ஆன்மீக பாசுரங்களை பாடிக்காட்டி அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக மாறினால் தமிழ் கட்டாயம் வளரும்.


RAMESH
மார் 10, 2025 15:27

முதலில் உங்கள் பெயரை தமிழில் மாற்றுங்கள்... நாவடக்கம் என்ற சொல்லின் பொருளை உங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் க்கு சொல்லி கொடுங்கள்....இதை கேட்பாரா


Palanipandi Natarajan
மார் 08, 2025 20:29

First CM should change his name in Tamil


Senthilkumar
மார் 08, 2025 13:31

ஸ்டாலின் உதயநிதி சன் டிவி என்பது அது அவர்களது சொந்த பெயர். மோடியும் அவரது சொந்த ட்ரெயின் இருந்தால் அவர் விருப்பம்போல் பெயர் வைத்து கொள்ளலாமே. ட்ரெயின் பொது சொத்து அல்லவா


Badrinarayanan
மார் 08, 2025 06:28

ஸ்டாலின் உதயநிதி சன் டிவி சன் ஷைன் திராவிட மாடல் என் தங்களை சுற்றி இருக்கும் தமிழ் அல்லாத பெயர்களை தமிழாக்கம் செய்து விட்டு பிறகு கோரிக்கை விடுங்கள்.


Badrinarayanan
மார் 08, 2025 06:21

ஸ்டாலின், உதயநிதி, சன் சைன், சன் டிவி, திராவிட மாடல் என தங்களை சுற்றி இருக்கும் அனைத்தையும், தமிழாக்கம் செய்து விட்டு பின் கோரிக்கை வையுங்கள்.


Subash BV
மார் 07, 2025 12:51

BE ALERT.


S.V.Srinivasan
மார் 07, 2025 09:22

ரயில்வே மத்திய அரசின் கீழ் இயங்கும் துறை. நீங்க என்ன சொல்றது அவங்க என்ன கேக்கறது. உங்கள் பெயரை முதலில் தமிழில் மாற்றுங்கள் என்று மக்கள் கூறுவது உங்கள் செவிகளில் விழவில்லையா முக்கிய மந்திரி அவர்களே .


S.Govindarajan.
மார் 07, 2025 06:55

உதய சூரியன், திராவிடம், கருணாநிதி, ஸ்டாலின், தயாநிதி, கலாநிதி, உதயநிதி, தயாளு, ராஜாத்தி, அழகிரி இவையெல்லாம் தமிழ் பெயர்களா ?


M.S.Jayagopal
மார் 06, 2025 12:17

தமிழர்கள் தங்கள் மொழி பற்றி அளவிற்கு அதிகமாக தற்பெருமை பேசிப்பேசியே, மற்ற அனைத்து மொழி மக்களின் வெறுப்பை சம்பாதித்து உள்ளனர் என்பதையும் நாம் அறிய வேண்டும். அனைத்து மொழிபேசும் மக்கள் இடையே ஒற்றுமை மற்றும் நல்லுணர்வு வளர்க்கப்பட வேண்டும்.நம் நாட்டிற்கு இது மிகவும் அவசியம். சுயநலம் கொண்ட அரசியல்வாதிகளை எக்காரணம் கொண்டும் மக்கள் தேர்ந்து எடுக்கக்கூடாது.


S.V.Srinivasan
மார் 07, 2025 09:25

தற்பெருமை பேசி மற்ற அணைத்து மொழி மக்களின் வெறுப்பை சம்பாதிப்பது தமிழர்கள் இல்லை. இங்குள்ள பாழா போன திராவிட மாடல் அரசியல் வாதிகள்தான்.


முக்கிய வீடியோ