உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் ஊழல் அச்சத்தில் ஸ்டாலின்: அ.தி.மு.க., பழனிசாமி குற்றச்சாட்டு

டாஸ்மாக் ஊழல் அச்சத்தில் ஸ்டாலின்: அ.தி.மு.க., பழனிசாமி குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி : ''டாஸ்மாக் ஊழலில் குடும்ப உறுப்பினரை காப்பாற்றவே முதல்வர் ஸ்டாலின் டில்லி சென்றார்,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது:தமிழகத்தில் அ.தி.மு.க.,வை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவர். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களை தி.மு.க., அரசு முடக்கியது. தமிழகத்தில் மன்னராட்சி, வாரிசு அரசியல் நடக்கிறது. அ.தி.மு.க., இருக்கும் வரை அவர்களின் கனவு நிறைவேறாது. வாரிசு அரசியலுக்கு வரும் சட்டசபை தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்.தேர்தலில், தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். முதல்வராக அவர் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில் மக்களுக்கான திட்டங்கள் எதையும் சிந்தித்து செயல்படுத்தவில்லை.அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தபின், தி.மு.க., முடக்கி வைத்த மக்கள் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும். அனைத்து துறைகளிலும் தி.மு.க.,வினர் ஊழல் செய்து கோடி கோடியாக கொள்ளையடித்து வருகின்றனர். விஞ்ஞான முறையில் ஊழல் செய்யும் கட்சி தி.மு.க.,வாகும்.டாஸ்மாக் ஊழலுக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றுள்ளனர். தடை ஆணை நீக்கப்பட்டால் பல பேர் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே பாதுகாப்பாக வைக்கப்படுவர்.அ.தி.மு.க., எப்படி பா.ஜ., உடன் கூட்டணி வைக்கலாம் என ஸ்டாலின் கேட்கிறார். இது எங்கள் கட்சி, நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். உங்களுக்கு ஏன் பயம்.தி.மு.க., கூட்டணி பலம் வாய்ந்தது என்கிறார். ஒரு கட்சி கூட்டணிக்கே உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பொறுத்திருந்து பாருங்கள். இன்னும் பல கட்சியினர் வந்து எங்களுடன் சேரும் போது நடுங்கி போவீர்.தமிழகத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதால் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போதையால் சீரழிந்து வருகின்றனர். மூன்று ஆண்டுகளாக நிடி ஆயோக் கூட்டத்திற்கு டில்லி செல்லாத ஸ்டாலின், தற்போது டாஸ்மாக் ஊழலால் குடும்ப உறுப்பினருக்கு பாதிப்பு வந்து விடும் என்ற அச்சத்தில் பங்கேற்றுள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி மலரும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

venugopal s
மே 27, 2025 16:41

ஊழல் பயத்தில் பாஜகவின் சேலை முந்தானையை பிடித்துக் கொண்டு ஒளிந்து கொண்டு உள்ளது யார் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்!


நிவேதா
மே 27, 2025 11:47

அமலாக்கத்துறை டாஸ்மாக் உள்ளே வந்ததே உங்கள் ஆட்சியில் 2017-2021 ஊழலை விசாரிக்கத்தான், எடப்பாடியரே. அந்த ஊழல் அளவு இன்னும் திமுக ஆட்சியில் அதிகமானதால் திமுக பதறுகிறார்கள். நீங்கள் இப்படி பேசுவதால் மட்டும் யாரும் நீங்கள் உத்தமர் என சொல்லப்போவதில்லை. அமலாக்கத்துறை உண்மையிலே குறி வைத்தால் திமுக சைடுல நாலு விக்கட்டு போச்சுன்னா உங்க சைடுல ரெண்டு விக்கட்டாவது போகும்


Kjp
மே 27, 2025 13:42

கருத்து போட்டிருக்கு டாஸ்மாக் ஊழலில் திமுகவின் ஊழல் தான் அதிகம் என்று நன்கு தெரிந்தும் திமுகவை எதிராக கருத்து போடாமல் எடப்பாடியை குற்றம் சொல்வதிலேயே குறியாக இருக்கிறார்.எனக்கு ஒரு கண் போனால் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என்ற கொள்கை இருந்தால் நாடு எப்படி திருந்தும்.


ராமகிருஷ்ணன்
மே 27, 2025 11:30

இப்பத்தான் எடப்பாடி சரி பாதையில் செல்கிறார். திமுக அரசை கண்டித்தும் தினமும் புதிதாக குற்றச்சாட்டு வைத்து கொண்டே இருக்கனும் வாரம் ஒரு முறை எல்லா குற்றங்களையும் தொகுத்து குற்றம் சாட்ட வேண்டும். ஒரு நாள் கூட விடியல் நிம்மதியா தூங்க கூடாது.


அப்பாவி
மே 27, 2025 10:35

கொடநாடு பிரச்சனையெல்லாம் சட்டரீதியாக எதிர்கொண்டு குளிர்விட்டுப் போயாச்சு. டாஸ்மாக் வெறும் துட்டு மேட்டர்.


புதிய வீடியோ