உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கச்சத்தீவை மீட்க நடவடிக்கை இல்லை: மத்திய அரசு மீது ஸ்டாலின் காட்டம்

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை இல்லை: மத்திய அரசு மீது ஸ்டாலின் காட்டம்

மயிலாடுதுறை: ''கச்சத்தீவு பிரச்னையில் பிரதமர் நேரடியாக தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டல், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது:

மீனவ மக்களின் நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசால் எடுக்கப்படுகிறது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதற்கு, நிரந்தர தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று, பிரதமரிடம் வலியுறுத்தி வருகிறேன். கடந்த ஏப்., 2ம் தேதி சட்டசபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீட்க, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழர்கள் மீதும், தமிழக மீனவர்கள் மீதும் சிறிதும் அக்கறையில்லாத மத்திய பா.ஜ., அரசு கச்சத்தீவை தாரை வார்த்தது யார் என்று அரசியல் மட்டும் தான் செய்கிறது.மற்றொரு நாட்டுடன் ஒப்பந்தம் போடுவது, மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்டது. 10 ஆண்டுகளுக்கு மேல் பா.ஜ.,தான் மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இதுவரை கச்சத்தீவை மீட்க, மத்திய பா.ஜ., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதை தடுக்கவோ, படகுகளை மீட்கவோ முயற்சி எடுக்கவில்லை.'கச்சத்தீவு கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைகின்றனர். கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம்' என, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பேசி இருக்கிறார். அதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இதுவரை எந்த பதிலும் தரவில்லை. பிரதமர் இப்பிரச்னையில் நேரடியாக தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்காக தமிழக அரசும், தி.மு.க.,வும் தொடர்ந்து போராடும்.தமிழக எதிர்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு, 2019ம் ஆண்டிலிருந்து தமிழக மக்கள் தொடர்ச்சியாக 'டாட்டா பை பை' சொல்லிக்கொண்டு உள்ளனர். வரும் சட்டசபைத் தேதலிலும் பை பைதான் அவருக்கு பரிசாகக் கிடைக்கும். இனி ஒருபோதும், பழனிசாமியை மக்கள் நம்ப மாட்டார்கள். ஏன், அவருடைய கட்சிக்காரர்களே அவரை நம்பத் தயாரில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

சுந்தரா டிராவல்சில் காமெடி

ஒரு திரைப்பட காமெடியில் வருவதுபோன்று, 'அதற்கெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்டப்பா, அது போல மக்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள். இதை தெரிந்து கொண்டு போலியாக ஒரு பிம்பத்தை உருவாக்க சுந்தரா டிராவல்ஸ் மாதிரி ஒரு பஸ்சை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார் பழனிசாமி. அந்த பஸ்சிலிருந்து புகை வருவது மாதிரி, இப்போது அவருடைய வாயிலிருந்து பொய்யும், அவதூறுமாக வந்து கொண்டே இருக்கிறது.- ஸ்டாலின், தமிழக முதல்வர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

vijai hindu
ஜூலை 17, 2025 17:56

வயதான காலத்தில் உளறல் இவர் தகப்பன் தான் கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்ததில் முன்னோடி


அசோகன்
ஜூலை 17, 2025 17:39

இப்படி திமிராக பொய் பேச காரணம் அவர்கள் விலைக்கு வாங்கிய ஊடகங்கள்....... 24 மணி நேரமும் இதையே சொன்னால் போதும்.... மோடி தான் கட்ச தீவை தூக்கி கொடுத்தார் என்று தமிழ் மக்கள் எல்லோரும் சொல்லும் அளவுக்கு மாற்றி விடுவார்கள்...... காலத்தின் கொடுமை


Ragupathy
ஜூலை 17, 2025 11:00

அடப்பாவிகளா...கொடுத்ததே உங்க ஆட்சியில் தானே...


sankaranarayanan
ஜூலை 17, 2025 10:54

தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதற்கு, நிரந்தர தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றுகூறும் திராவிட மாடல் அரசின் முதல்வரே, தகப்பனார் செய்த கொடுமையை மறந்துவிட்டு பேசுகிரிறா இப்போது காலம் காலமாக அவர் தமிழர்களுக்கு செய்த கொடுமைகள் கணக்கிலடங்காது அவைகளில் கச்ச தீவை தாரை வார்த்து கொடுத்ததும் ஒன்று. தகப்பனார் செய்த தவறை மறைக்க முயன்றாலும் சரித்திரம் காட்டிவிடும் என்ன செய்வது


PR Makudeswaran
ஜூலை 17, 2025 10:47

ஸ்டாலின் அவர்களே தி மு க வினருக்கு மனச்சாட்சி இல்லை என்று தெரியும் மு க விற்கும் இல்லை. சரித்திரம் மன்னிக்காது. உமது பரம்பரையே உருப்படாது. தூக்கி கொடுத்துவிட்டு பேச்சை பாரு.


ஆரூர் ரங்
ஜூலை 17, 2025 10:45

உங்க வசதிக்கு பேரனின் 3 கோடி ரூபாய் சொகுசு காரில் போறீங்க. அவர் வசதிக்கு சுந்தரா வண்டியில் போறாங்க. பங்காளிய குறை கூறக் கூடாது.


Rengaraj
ஜூலை 17, 2025 10:42

இது ஏதோ வயல் வரப்பு பிரச்சினை மாதிரி கிடையாது. இருநாட்டு எல்லை சம்பந்தப்பட்டது. இதற்கு வெகு காலம் பிடிக்கும். பஞ்சாயத்து என்று வந்தால் நமக்கு சர்வதேச அளவில் மற்ற நாடுகளின் ஆதரவு தேவை. இங்கே உக்காத்துகொண்டு நாட்ட்டமை தீர்ப்பு மாதிரி எதுவும் சொல்லிவிடமுடியாது. எங்கே, இதே முதல்வர் இதற்கு எப்படி தீர்வு காணலாம் என்று ஒரு அறிக்கையை விடச்சொல்லுங்கள் பார்க்கலாம். அவருக்கு சர்வதேச அரசியல் தெரியாது. மைக் கிடைச்சா வாய்ப்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று வாய்க்கு வந்ததையெல்லாம் பேசவேண்டியதோ.?? மத்திய அரசை குறை சொல்லி பேசிட்டா இவர் பெரிய ஆளா ??


Mohanakrishnan
ஜூலை 17, 2025 09:56

What the thirutuu kootam did between 2004 to 2014 other than looting the money


vbs manian
ஜூலை 17, 2025 09:07

கொடுத்தது யார்.


உ.பி
ஜூலை 17, 2025 08:59

காங்கிரஸ் தாரை வார்த்த போது நியாயம் கேட்குற வாய்யி தயிர் வட சாப்பிட்டதோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை