உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெஞ்சல் புயல் பாதிப்புக்கு ரூ.2,000 ஆயிரம் நிவாரணம்; முதல்வர் அறிவிப்பு

பெஞ்சல் புயல் பாதிப்புக்கு ரூ.2,000 ஆயிரம் நிவாரணம்; முதல்வர் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9yrmobcc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் நவம்பர் 30 முதல் வீசத் தொடங்கிய பெஞ்சல் புயலின் காரணமாக பரவலான மற்றும் கடுமையான மழைப் பொழிவு தமிழகத்தின் வடமாவட்டங்களில் பெறப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது.இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் மழைப் பொழிவு ஏற்பட்டு, பொது மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழகத்தின் வடமாவட்டங்களில் பெரும் பகுதி விளைநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. அத்துடன், மேற்படி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பாலங்கள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள், பொதுக் கட்டடங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கு பெஞ்சல் புயலின் தாக்கத்தையும், பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, பொதுமக்கள் மற்றும் அலுவலர்களிடம் பாதிப்பு விவரங்களையும், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து, தேவையான அறிவுரைகளை வழங்கினார். துணை முதல்வர், அமைச்சர்களும் இம்மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்றும் நேரடியாகச் சென்று நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்தி வருகின்றார்கள். இந்நிலையில், இன்று (3-12-2024) தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வரும் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களை காணொலி வாயிலாகத் தொடர்பு கொண்டு தற்போதைய நிலையைக் கேட்டறிந்தார். பின்னர், பெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் தலைமையில் இன்று (3-12-2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பின்வரும் நிவாரண உதவிகள் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது: * புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக 5 லட்சம் ரூபாய்* சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக 10 ஆயிரம் வழங்கிடவும்; முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை* மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 17 ஆயிரம்* பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 22,500/- * மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500/-* எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.37,500/-* வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000/- வழங்கிடவும்; கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100/-*அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கிடவும்; * மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கிடவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நிவாரணம் வழங்குவது தொடர்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட கலெக்டர்கள் தங்கள் மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்களை அரசுக்கு அனுப்பி வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தாமரை மலர்கிறது
டிச 03, 2024 23:54

வரிப்பணத்தை வைத்து முறையான கட்டுமான சாலைகள், பாலங்கள் அமைக்காமல், ஓட்டுக்கு பணம் கொடுக்க மட்டும் தெரியுதோ? இப்போது ரெண்டாயிரம் கொடுக்க வேண்டும் யார் கேட்டார்கள்? மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றாமல், அரசு மழை தண்ணீர் தேங்காத ரோடு அமைக்க வேண்டும்.


M Ramachandran
டிச 03, 2024 20:23

அமா விஜயிர்க்கு 32% ஒட்டு கிடய்ய்கு மென்று உஙகள் ஜால்ரா பத்திரிக்கையில் வந்துள்ள தாமெ. அப்போது கவலை இல்லை. நிரந்தர முதல்வர் தான்


Mohanakrishnan
டிச 03, 2024 19:44

4000 கோடிக்கு கரையான், எலி, கணக்கு காட்டிவிட்டு எடுத்து செல்லவும் இப்படிக்கு நிதி மந்திரி


VENKATASUBRAMANIAN
டிச 03, 2024 18:52

எப்பவும ஆத்தா வையும் காசு கொடு கதையாக மத்திய அரசிடம் காசு கொடு என்று கேட்க மட்டுமே தெரியும். கொடுத்த 4000 கோடி எங்கே போனது தெரியாது இதுதான் திராவிட மாடல்


kalyanasundaram
டிச 03, 2024 17:37

GOOD> THIS AMOUNT TO BE PAID DIRECTLY TO THOSE AFFECTED ONLY AND NOT THROUGH THIS CORRUPT POLITICIANS. VERY GREAT PART OF THIS AMOUNT WILL GO TO THEIR PERSONAL ACCOUNTS ONLY. INCASE GOVT RECEIVES THIS AMOUNT.


pv, முத்தூர்
டிச 03, 2024 17:06

வீடே இல்லியாம், இதுல வீட்டுக்குல்ல இருக்கிர ரேசன் அட்டைக்கு 2000?? எதனடிப்படையில் இழுப்பீடு நிர்ணயிக்கப்பட்டது? அடிப்படைகட்டமைப்பை நாசமாக்கிவிட்டு, பணத்தால் சரிகட்டிடிவிடமுடியும? ஏமாற்று அரசு கோமாளி மக்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 03, 2024 14:26

ஏங்கோவாலு...... வெள்ள நிவாரணம் க சாராய நிவாரணத்தை விட ரொம்ப கம்மியா இருக்குதே ????


தம்புராஜ்,கள்ளக்குறிச்சி
டிச 03, 2024 15:24

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அதிக அளவில் மழை பெய்த போதும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லைன்னு நேத்துதான் சொன்னாரு? நீங்க என்னடான்னா பெஞ்சல் புயல் மழையால் ஒன்னரை கோடி மக்கள் பாதிப்புன்னு சொல்லி மத்திய அரசுகிட்ட 2000 கோடியை உடனே வேணும்னு கேக்குறீங்க யார் சொல்றது உண்மை? போன வருடம் மாதிரியே ஆளாளுக்கு ஒரு கணக்கை சொல்றீங்க! அப்படியே இருந்தாலும் 2000 ரூவா எப்படி பத்தும் இந்த தடவ 8000 ரூபாயாவது வேண்டும்..


Anand
டிச 03, 2024 15:51

வெள்ள நிவாரணம் தேவையில்லாத செலவு, க சாராய நிவாரணம் என்பது முதலீடு.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 03, 2024 14:24

நிவாரணம் ன்னும் சொல்லலாம்... குடும்பத்துக்கு நிதி ன்னும் சொல்லலாம்... ஏற்கனவே நாலாயிரம் கோடி கொடுத்தோமே... என்ன ஆச்சு, கணக்கென்ன ன்னு கேட்டா ஆரிய, அராஜக, அடாவடி, மக்கள் விரோத ஒன்றிய அரசு ன்னு நீட்டி முழக்கி சொல்லுவோம்.. மண்ணு வாரி தூத்துவோம் .... எங்க சனங்க எங்களை அப்படியே நம்பி மீண்டும் எங்களை ஆட்சியில் அமர்த்துவாங்க .....


Sundar R
டிச 03, 2024 14:19

மழை வெள்ளம் & புயல் நிவாரண நிதி உதவியை மத்திய/மாநில அரசு நேரடியாக பொதுமக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தினால் தான் நிவாரணத்தொகை முழுவதும் மக்களை நேரடியாக சென்றடையும். ரேஷன் கடை மூலமாக கொடுப்பது அசல் கேப்மாரித்தனம். மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வீட்டு வேலை செய்வார்களா? அல்லது ரேஷன் கடையில் நீண்ட வரிசையில் நிற்பார்களா? மேலும், வெள்ளம் மற்றும் புயல் நிவாரண தொகையை ரேஷன் கடையில் வினியோகம் செய்வது உலக மகா ஊழலும் அசல் கேப்மாரித்தனமும் ஆகும்.


Venkateswaran Rajaram
டிச 03, 2024 15:40

ரேஷன் கடை மூலமாக கொடுத்தால்தான் இவர்கள் மத்திய அரசிடம் இருந்து பெற்று இவர்களே கொடுத்தது போல் நமக்கு பிச்சை போடுவார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை