உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலின் மீண்டும் முதல்வர்: லயோலா கருத்து கணிப்பு

ஸ்டாலின் மீண்டும் முதல்வர்: லயோலா கருத்து கணிப்பு

சென்னை: தமிழகத்தில், வரும் 2026 தேர்தலில் முதல்வர் வாய்ப்பு யாருக்கு என்ற தலைப்பில், 'இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு' சார்பில் நடந்த கருத்துக்கணிப்பில், 77.83 சதவீதம் பேர், மீண்டும் முதல்வராக ஸ்டாலினுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு நேற்று அளித்த பேட்டி:சென்னை லயோலா கல்லுாரி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட, இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு சார்பில், 2026 தேர்தலில் யார் முதல்வராவார் என்பது குறித்து, 234 தொகுதிகளில் கருத்து கேட்கும் பணி, கடந்த பிப்., 5ம் தேதி துவங்கியது.70,922 பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பின் முதற்கட்ட ஆய்வு, இம்மாதம் 17ம் தேதி நிறைவு பெற்றது. தற்போதைய தமிழக அரசின் செயல்பாடுகள், மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் கட்சிகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிரதான கேள்விகளை மையமாக வைத்து, கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.அதன்படி, தமிழகத்தில் அடுத்த முதல்வராக அதிக வாய்ப்புள்ள தலைவர்கள் என்ற கேள்விக்கு பெற்றப்பட்ட கருத்துகள் அடிப்படையில், 77.83 சதவீதம் பேர், ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். அடுத்து, 73.30 சதவீதம் பேர் பழனிசாமிக்கும், 67.99 சதவீதம் பேர் உதயநிதிக்கும், 64.58 சதவீதம் பேர் அண்ணாமலைக்கும், 60.58 சதவீதம் பேர் விஜய்க்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்றைய அரசியல் சூழலில் யாருக்கு ஓட்டுப் போடுவீர்கள் என்ற கேள்விக்கு, 17.7 சதவீதம் பேர் தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்துள்ளனர். அ.தி.மு.க., - 17.3 சதவீம் பேர்; த.வெ.க., - 12.20 சதவீதம் பேர்; பா.ஜ.,வுக்கு 5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 3.3 சதவீதம் பேர், 'நோட்டா' என தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 100 )

a.ramamurthy
ஜூலை 22, 2025 14:37

100% உண்மை ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்


S.V.Srinivasan
ஜூலை 21, 2025 10:58

ஏம்பா சீமானை விட்டுட்டீங்க . கோவிச்சுக்கப்போறாரு.


MUTHU
ஜூலை 21, 2025 08:49

ஆமாமாம். திராவிடன் கோடி கோடியாய் கொடுத்திட்டுதான் வேறு வேலை பார்ப்பான்?. அவனே நப்பி. லயோலா கல்லூரிக்கு இந்த கருத்து கணிப்பின் மூலம் அரசிடம் கிடைக்கும் அனுகூலமே போதுமானது.


GoK
ஜூலை 19, 2025 07:07

லயோலா விலை போன பெயர் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் .....1970kku முன்னாலே படித்தவர்கள் ...இந்தக்கல்லூரியில் படித்தோம் என சொல்லவே தயக்குப்படுகிறார்கள் ...இது உண்மை


Srinivasan M
ஜூலை 18, 2025 09:34

லயோலா கல்லூரி வேறு எப்படி சொல்லும் ? மக்கள் தி மு க மேல் கடும் கோபத்தில் உள்ளனர். 1991 போல் ஆக வாய்ப்பு இருக்கிறது.


Jack
ஜூலை 11, 2025 15:15

இன்னும் ஆறு மாசத்துக்கு இந்த மாதிரி படம் காட்டினா காசு பாக்கலாம் ...


Palaniraj Seeniappan
ஜூலை 10, 2025 11:40

this time better DMK to come to speed on SIPCOT projects on various district in tamilnadu,


மயிலை தொண்டன்
ஜூலை 09, 2025 14:33

அதிமுக-பாஜக கூட்டணி என்பதால் இரண்டு கட்சிகளின் கணிப்பு சதவீதத்தை கூட்டி பார்த்தால், அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சியே வரப்போகிறது என்பதை மக்கள் கூறியுள்ளனர்.


Siva Subramaniam
ஜூன் 30, 2025 22:38

Few years ago, The leaders of China and Russia, self d, that they will be rulers of their country till death. Mr. Stalin should follow this, and stay as CM of Tamil Nadu for ever - till death


Chandhra Mouleeswaran MK
ஜூன் 30, 2025 21:03

அட வந்துட்டீங்களா? எத்தனை பெட்டிங்க அக்கா கெடச்சுது? எங்க உங்க அஜிஸ்மெண்டு கரந்த கணிப்புக்காரவங்க எத்திராஜக் காணமே


சமீபத்திய செய்தி