உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமரிடம் மண்டியிட்டு நிதி பெற்றவர் ஸ்டாலின்

பிரதமரிடம் மண்டியிட்டு நிதி பெற்றவர் ஸ்டாலின்

கடந்த கால அ.தி.மு.க., அரசு, மத்திய அரசிடம் தமிழகத்தை அடமானம் வைத்து விட்டதாக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். ஆனால், அ.தி.மு.க., அரசு தான் தமிழகத்தின் மதிப்பை உயர்த்தியது. அதனால் தான் மத்திய அரசு, பல்வேறு துறைகளில் தமிழகத்திற்கு முதலிடம் வழங்கியது.ஆனால், தி.மு.க., அரசு அப்படியில்லை. முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசு குறித்து, மேடையில் வீராப்பாக பேசிவிட்டு, தனியறையில் மோடியிடம் மண்டியிட்டு, மெட்ரோ திட்டத்திற்கு நிதி பெற்றுள்ளார். மத்திய அரசு ஆணையின்படியே, அமைச்சர் பொன்முடியின் துறை மாற்றப்பட்டது. கடந்த காலங்களில், ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி பிரம்மாண்ட மாநாடு நடத்தி கட்சி துவங்கினார். தற்போது நடிகர் விஜய் அதேபோன்று மாநாடு நடத்துகிறார். என்ன நடக்கும் என்பதை இப்போதே கணிக்க முடியாது.முனுசாமி, துணை பொதுச்செயலர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை