உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் அசைன்மென்ட்!

தி.மு.க., எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் அசைன்மென்ட்!

சென்னை : சட்டசபை தேர்தல் பணிகளில், தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு புதிதாக, 'அசைன்மென்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. எம்.பி.,க்கள் ஒவ்வொருவரும் தங்கள் தொகுதிகளில், வாரத்தில் நான்கு நாட்கள் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும், 15 நாட்களுக்கு ஒருமுறை அதுதொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். சட்டசபை தேர்தலில் தோல்வியே காணக்கூடாது என்றும் கட்டளையிட்டு உள்ளார். சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க.,வின் லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள் கூட்டம் நடந்தது; 31 எம்.பி.,க்கள் பங்கேற்றனர். பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, பார்லிமென்ட் குழு தலைவர் கனிமொழி பங்கேற்றனர். மக்கள் பணிகள் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளதாவது: 'உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின்' போன்ற முகாம்களில் பங்கேற்று, மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகத் துடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். மகளிர் உரிமை திட்டத்தில், விடுபட்டோரை சேர்க்க வேண்டும். நலத்திட்ட முகாம்களில், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தகுதியுள்ள மகளிர் அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கடந்த, 2024-ல் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 40-க்கு 40 தொகுதிகளை வென்று, வரலாற்று சாதனை படைத்தது. அதற்கு எம்.எல்.ஏ.,க்கள் அரும்பாடுபட்டனர். அதேபோல, வரும் சட்டசபை தேர்தலில், லோக்சபா எம்.பி.,க்களும் வெற்றிக்கு உழைக்க வேண்டும். எம்.பி.,க்கள் அனைவரும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதி மக்களை தொடர்ச்சியாக சந்திக்க வேண்டும். அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைந்து, கட்சி பணிகளை செய்ய வேண்டும். விழிப்புணர்வு பார்லிமென்ட் கூட்டம் நடக்கும் நாட்களை தவிர்த்து, குறைந்தது வாரத்தில் நான்கு நாட்கள், எம்.பி.,க்கள் தங்கள் தொகுதியில் தங்கி, மக்கள் பணிகளை செய்ய வேண்டும். தங்கள் தொகுதியில் ஆற்றிய மக்கள் பணிகள், பார்லிமென்டில் எடுத்துரைத்த கருத்துகள் பற்றிய அறிக்கையை, 15 நாட்களுக்கு ஒருமுறை ஒப்படைக்க வேண்டும். மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதுவரை சந்தித்த தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்று வந்துள்ளோம். வரும் சட்டசபை தேர்தலிலும், அதை தக்கவைக்க வேண்டும். நாம் தோல்வியே காணக்கூடாது. இவ்வாறு ஸ்டாலின் பேசியுள்ளார். களமிறங்கும் எம்.பி.,க்கள் 'ஒவ்வொரு எம்.பி.,க்கும், மூன்று அல்லது நான்கு சட்டசபை தொகுதிகளை கண்காணிக்கும் பொறுப்பு ஒதுக்கப்படும். அவற்றில், தி.மு.க.,வின் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். வாக்காளர்கள் பட்டியல் திருத்தம் போன்ற பணிகளை முழுவீச்சில் செய்து முடிக்க வேண்டும். தேர்தலில் பொறுப்பேற்கும் எம்.பி.,க்கள் ஒவ்வொருவரும் வெற்றியை தேடி தர வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் பேசியதாகவும் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Nathansamwi
செப் 24, 2025 22:41

தவெக படுத்தும் பாடு


Modisha
செப் 24, 2025 18:41

இவர்கள் தொகுதியில் ‘ பணி ‘ ஆற்றாவிட்டால் கொஞ்சம் கூடுதல் வோட்டு கிடைக்க வாய்ப்புண்டு .


Baskar
செப் 24, 2025 18:14

There is no bright future for TamilNadu.


ராமகிருஷ்ணன்
செப் 24, 2025 16:48

சுருட்டியதை வெளியே எடுத்து விடுங்க. ஓரு ஓட்டுக்காக 5000 ரூபாய் வரை கொடுத்து திருமங்கலம் பார்முலா படி பால்டம்ளர் மேலே சத்தியம் வாங்கிவிடலாம்.


தமிழன்
செப் 24, 2025 16:06

5 வருஷத்தில 4 நாள் வேலை ஆனால் 365 நாளுக்கு சம்பளம் சாப்பாட்டு படி போக்கு வரத்து படி சூப்பர் இதுல பென்ஷன் வேற


ManiK
செப் 24, 2025 15:49

மத்திய அரசால் மக்கள் நிம்மதியாக இருக்காங்க தலீவா. உங்க எம்பி கூட்டம் பார்லி கேன்டீன்லயே இருக்கட்டும்.


சத்யநாராயணன்
செப் 24, 2025 14:40

முழு நான்கரை ஆண்டுகளும் ஊழலில் திளைக்கலாம் கடைசி ஆறு மாதத்தில் மக்கள் பணி என்ற பெயரில் கண்துடைப்பு செய்யலாம் என்ற இந்த திமுகவின் சித்தாந்தம் கண்டிப்பாக தோற்கடிக்கப்பட வேண்டும் சிறிதளவு யோசித்துப் பார்க்கும் திறன் உடையவர்கள் எவரும் திமுகவிற்கு ஓட்டு அளிக்க மாட்டார்கள் ஓட்டளிக்கவும் கூடாது


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 24, 2025 14:37

திமுக சிட்டிங் எம் பி க்கள் தொகுதி மக்களை கூல் பண்ணிட்டா திமுக சட்டப் பேரவைத் தேர்தலில் வென்றுவிடுமா


hariharan
செப் 24, 2025 14:23

தேர்வு வரும்வரை குறட்டை விட்டு தூங்கி விட்டு, தேர்வு அன்று விழுந்து விழுந்து படித்து, பிட் தயார் செய்யும் ஆட்சி.


hariharan
செப் 24, 2025 14:20

தென்காசி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி டாக்டர் ராணி வெற்றிபெற்ற பிறகு புளியரை, புதூர் போன்ற கிராமங்களுக்கு மக்களுக்கு நன்றி சொல்லக்கூட வரவில்லை. இதுவே உண்மையான நிலவரம். இவரை தேர்ந்தெடுத்ததே வீண். எங்கு பார்த்தாலும் குப்பை, குளங்களில் குப்பை. தென்காசி பழைய பேருந்து நிலையம் பாழடைந்து கிடக்கிறது. இவர் தன்னுடைய வீட்டை விட்டே வெளி வருவதில்லை, பிறகு எங்கே இவர் தொகுதி முழுவதும் வலம் வந்து மக்களை சந்தித்து அறிக்கை அளிக்கப்போகிறார்? அடுத்த தேர்தலில் இவர் கண்டிப்பாக வெற்றிபெற முடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை