வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த தங்க நகையெல்லாம் எந்த உலோகத்தில் செய்வீர்கள்?
கோவை:கோவையில் தங்க நகை தொழிலாளர்கள் 2 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள், உக்கடம், காந்திபார்க், தடாகம்சாலை, பூமார்க்கெட் பகுதிகளில் தங்க ஆபரணங்களை தயாரித்து வருகின்றனர். இவர்களது தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு சர்வதேச அளவில் புகழ்பெற்றது.நேற்று கோவை வந்த முதல்வர் ஸ்டாலின் உக்கடம், கெம்பட்டி காலனி, தர்மராஜகோவில் வீதியில் உள்ள நடராஜன் என்பவருக்கு சொந்தமான தங்கநகை தயாரிக்கும் பட்டறைக்கு சென்றார். அவருடன் அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமை செயலர் முருகானந்தம், கோவை கலெக்டர் கிராந்திகுமார் சென்றனர். பட்டறையில் அமர்ந்து தங்கநகை தொழிலாளர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும், அவர்களுக்கு தேவையான வசதிகள், ஒருங்கிணைந்த தங்கநகை பூங்கா அமைப்பதால் ஏற்படும் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார்.அப்போது ஒருங்கிணைந்த நகைத்தொழில் வளாகம், என்.ஏ.பி.எல்., டெஸ்டிங் லேப், நகைப்பட்டறைகளுக்கு 1,000 யூனிட் மின் மானியம், தங்க நகை தொழிலாளர்களுக்கென தனி வாரியம், ரா மெட்டீரியல் பாங்க், பிணையில்லா வங்கிக்கடன், தனியாக கூட்டுறவு சங்கம், கோவையில் தயாரிக்கும் நகைக்கென காப்புரிமை.அரசு சார்பில் நகை கண்காட்சி நடத்துதல், மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை பெயர் மாற்றம் செய்த பின், திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர்.அதை பெற்றுக்கொண்ட முதல்வர், பரிசீலிப்பதாக அவர்களிடம் உறுதியளித்து விடை பெற்றார். குறுகிய சாலையில் உள்ள பட்டறைகளுக்கு, திடீரென நேற்று முதல்வர் சென்றது நகை தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தங்க நகையெல்லாம் எந்த உலோகத்தில் செய்வீர்கள்?