உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெயிலியர் ஆன ஸ்டாலின் மாடல் அரசு: இ.பி.எஸ்.,

பெயிலியர் ஆன ஸ்டாலின் மாடல் அரசு: இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகை : '' ஸ்டாலின் மாடல் அரசு பெயிலியர் மாடல் அரசாக மாறிவிட்டது,'' என நாகையில் அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., கூறினார்.

மக்கள் எண்ணப்படி

'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' பிரசாரப் பயணத்தில் நாகையில் அவர் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு ஊராக செல்கிறார். எதற்காக போகிறார் என தெரியவில்லை. ஏதாவது செய்திருந்தால் மக்கள் வரவேற்பார்கள். தி.மு.க., ஆட்சிக்கு வந்து 50 மாதங்களில் நாகை மாவட்டத்திற்கு ஏந்தவொரு பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. இதனால், மக்களை பார்க்காமல் முதல்வர் சென்றுவிட்டார். மக்கள் எண்ணப்படியும், அவர்கள் விரும்பியபடியும் அ.தி.மு.க., ஆட்சி இருந்தது.ஒரு ஆட்சி வருவது சாதாரண விஷயம் கிடையாது. ஆட்சியில் அமர்ந்த பிறகு, மக்களை சிந்திக்க வேண்டும். ஆனால், முதல்வருக்கு வீட்டு மக்களை பற்றி மட்டுமே சிந்தனை உள்ளது. எப்போதும், வீட்டு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும். எப்படி செய்ய வேண்டும். என்ன அதிகாரம் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை உள்ளதே தவிர, நாட்டு மக்களை பற்றி கவலைப்படவில்லை. ஓட்டு போட்ட மக்களை சந்திக்கவில்லை.

அதிகார மையங்கள்

ஸ்டாலின் குடும்பத்தில் நான்கு அதிகார மையங்கள் உள்ளன. ஒரு அதிகார மையம் இருந்தாலே தாக்கு பிடிக்க முடியாது. ஒன்று முதல்வர். இரண்டாவது அவரது மனைவி,. மூன்றாவது மகன். நான்காவது மருமகன். நான்கு பேரும் தமிழகத்தை 50 மாதமாக தமிழகத்தை ஆட்டி படைத்து வருகின்றனர். இதற்கு முடிவு கட்டும் வகையில் 2026 சட்டசபை தேர்தல் இருக்கும். 4 அதிகார மையத்தின் கீழ் தான் ஆட்சி நடக்கிறது. அ.தி.மு.க., ஆட்சியில் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட்டனர். நிர்வாகம் சிறப்பாக இருந்தது. மக்களுக்கான திட்டங்கள் உடனுக்கு உடன் கிடைத்தன.தி.மு.க., ஆட்சிக்கு வரும் போது எல்லாம் விலைவாசி உயரும். இன்று விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. மக்களுக்கு வருமானம் குறைந்துவிட்டது. செலவு அதிகரித்துவிட்டது. மக்கள் துன்பப்படுகிறார்கள். இதைப் பற்றி முதல்வருக்கு கவலையில்லை. இதுவெல்லாம் முதல்வருக்கு தெரியாது.

என்ன ஆனது

நிர்வாக திறமையற்ற முதல்வரால் விலைவாசி உயர்ந்துவிட்டது. நாட்டில் நடப்பது தெரியாதவராக முதல்வர் ஸ்டாலின் உள்ளார். அ.தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயரவில்லை. நான்கு வருடங்கள் கழித்து தான் மக்களை சிந்தித்துள்ளார். நான்கு வருடம் உங்களுடன் இல்லை. குடும்பத்துடன் இருந்துள்ளார். மக்களை ஏமாற்றுகிறார்.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது, மனுக்கள் வாங்கினார். அது என்ன ஆனது.

முற்றுப்புள்ளி

மாணவர்கள் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு சோதனை வரும் போது எல்லாம் துணையாக இருந்துள்ளோம். அ.தி.மு.க., ஆட்சியில் 11 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 7 சட்டக்கல்லூரி,21 பாலிடெக்னிக்,67 கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேளாண்மை கல்லூரி மற்றும் ஐடி ஏற்படுத்தி கொடுத்தோம். மாணவர்கள், இளைஞர்கள் எங்களை நினைக்க வேண்டும். ஸ்டாலின், நடித்தது போதும், மக்களை ஏமாற்றியது போதும். சட்டசபை தேர்தலில் உங்கள் நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஸ்டாலின் மாடல் அரசு பெயிலியர் மாடல் அரசாகி விட்டது. இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Saran
ஜூலை 19, 2025 22:33

Tamilians are intelligent … they have voted for DMK last time because they don’t like ADMK. This time they will vote for ADMK because they don’t like DMK. In 2031 they will certainly vote for DMK because they will hate ADMK… it will continue ……but both of them corrupted totally.


Ayyasamy
ஜூலை 19, 2025 20:30

Fail or pass both DMK and admk are our CM on rotational basis.


முருகன்
ஜூலை 19, 2025 19:58

அதிமுக பொதுச்செயலாளர் ஆனதில் இருந்து இதுவரை ஒரு தேர்தலில் கூட ஜெயிக்காத இவர் இதை பேசுவது சாரியா


GMM
ஜூலை 19, 2025 19:29

எடப்பாடி பிஜேபி போன்ற கட்சியுடன் சேர்ந்து சரியான கூட்டணி அமைக்கா விட்டால், வீழ்ச்சி உறுதி. சொற்ப ஓட்டு தான் வெற்றியை தீர்மானிக்கும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தவிர்க்க முடியாது. ? திமுக இந்தமுறை கூட்டணி ஆட்சி அமைக்க சம்மதிக்கும். ? தனிப்பட்ட செல்வாக்கு யாருக்கும் இல்லை.


Santhakumar Srinivasalu
ஜூலை 19, 2025 19:20

அனைத்துமே இவருடைய கொரானா காலத்தில் நடந்தது. ஆட்சி முடியும் போது சகாக்கள் ஆதாயம் சம்பாதிக்கட்டும் என்று விட்டு விட்டு இப்போ மேடை ஏறி பேசுகிறார்


பாரத புதல்வன்
ஜூலை 19, 2025 18:37

1.சாராயம் விற்பதில் பாஸ் 2.பாட்டிலுக்கு10 ரூ அதிகம் வாங்குவதில் பாஸ் 3.பாலியல் குற்ற செயல்களில் பாஸ் 4.கிட்னி திருடுவதில் பாஸ் 5.மணல் கொள்ளையில் பாஸ் 6.நில அபகரிப்பு செயல்களில் பாஸ் 7.மதுரை மாமன்ற வரி வசூல் 200 கோடி ஊழல் செய்து பாஸ் 8.மதுபான ஊழலில்30,000 கோடி செய்து பாஸ், 9.அரசு பேருந்துகள் ஓடாமல் நடுவழியில் நிற்பதில் பாஸ், 10.ஆபாச பேச்சு அமைச்சர்கள் அதிகம் உள்ள கட்சி என்பதில் பாஸ், 11.படித்து வேலைக்கு போகும் நபர் இறந்துவிட்டார் எனில்1 லட்சம் குடித்து விட்டு இறந்தால்10 லட்சம் என முறையற்ற நிதி வீணடிப்பதில் பாஸ்... 12.தரமற்ற பள்ளி, கல்வியில் அரசியல் செய்து மாணவர்களின் எதிகாலத்திற்கு முட்டு கட்டையாக இருப்பதில் பாஸ் 13.அதிக கடன் வாங்குவதில் பாஸ்... இப்படி நிறைய விஷயத்தில் பாஸ் மார்க் வாங்கிய ஆட்சிக்கு மக்கள் பெயில் மார்க் வரும் தேர்தலில் மக்கள் வழங்குவர்.


Oviya Vijay
ஜூலை 19, 2025 18:33

ஐயா எடப்பாடியாரே... எதற்கும் ஆம்புலன்ஸ் ஒன்றை வாடகைக்கு எடுத்து வைத்துக்கொண்டு அதில் படுத்தவாறே 2026 தேர்தல் முடிவுகள் நியூஸ் கேட்பது உங்கள் உடல்நலத்திற்கு நல்லது... இதயம் பத்திரம்... திமுக எதிரணியில் இருப்பவர்கள் அனைவரும் அதீத கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்... இது எங்கு போய் முடியப்போகிறதோ...


Arunkumar,Ramnad
ஜூலை 19, 2025 19:45

திமுகவுக்கும் ஜோசப் விஜய்க்கும் நீங்க கொடுக்கும் ஓவியமான முரட்டு முட்டு ஓவரா போய்கிட்டு இருக்கு பாத்து மண்டை பத்திரம்...


vivek
ஜூலை 20, 2025 05:50

ஓவிய சொம்பு...உன் மூளை பத்திரம்....நீ வெறும் காலி அண்டா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை