உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‘ஸ்டார்ட் அப்’ தலைவர் குஜராத் பயணம்

‘ஸ்டார்ட் அப்’ தலைவர் குஜராத் பயணம்

சென்னை: தமிழகத்தில், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களை மேம்படுத்த, ஸ்டார்ட் அப் டி.என்., தலைவர் சிங்கை ராமச்சந்திரன், குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு சென்றுள்ளார். தமிழகத்தில் உள்ள, ‘ஸ்டார்ட அப்’ நிறுவனங்களுக்கு நிதியுதவி, முதலீட்டு வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை, தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் வழங்குகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அந்நிறுவனத்தின் தலைவராக, சிங்கை ராமச்சந்திரன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவர், தமிழகத்தில் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு வழங்கப்படும் திட்டங்களை மேம்படுத்தவும், புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப விபரங்களை தெரிந்து கொள்வதற்காக, குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு சென்றுள்ளார். குஜராத்தில், புத்தாக்க முயற்சிகளை ஆதரித்து வரும், ‘ஐகிரீயேட்’ மையம், மும்பை ஐ.ஐ.டி.,யில் செயல்படும் எஸ்.ஐ.என்.இ., புத்தொழில் வளர்ப்பு மையம் போன்றவற்றுக்கு சென்று, அங்கு மேற்கொள்ளும் பணிகளை கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி