உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநில சுயாட்சி : மீண்டும் கையில் எடுத்தது தி.மு.க.,

மாநில சுயாட்சி : மீண்டும் கையில் எடுத்தது தி.மு.க.,

சென்னை, ஏப். 16- 'மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி' என்ற பழைய கோஷத்தை, தி.மு.க., மீண்டும் கையில் எடுத்திருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த இரண்டு ஆண்டுகளில் துவங்கப்பட்ட தி.மு.க., ஆரம்பத்தில் இருந்தே தனிநாடு கோஷத்தை எழுப்பி வந்தது. சீனாவுடன் நடந்த 1962 போருக்கு பின், அரசியல் சாசனத்தில் 16வது திருத்தம் செய்யப்பட்டு, தனிநாடு கேட்பது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. அதோடு தனிநாடு கோஷத்தையும், சுய நிர்ணய உரிமை முழக்கத்தையும், தி.மு.க., கைவிட்டது.அண்ணாதுரை மறைவை தொடர்ந்து, 1969ல் முதல்வர் பொறுப்பை ஏற்ற கருணாநிதி, மத்திய - மாநில உறவு குறித்து ஆராய, ராஜமன்னார் குழுவை நியமித்தார். இரண்டு ஆண்டுகளில் அந்தக் குழு அறிக்கை அளித்தது. அதை தொடர்ந்து, 1974ல் மாநில சுயாட்சி கோரும் தீர்மானம், முதல் முறையாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகியவற்றுடன், தி.மு.க., கூட்டணி அமைக்க துவங்கிய பின், சுயாட்சி கோஷம் அமுங்கி போனது. இப்போது, மத்திய அரசுடனும், கவர்னருடனும் தினமும் ஒரு பிரச்னை உருவாகி, சட்டப் போராட்டம் வரை செல்வதை அடுத்து, பழைய கோஷத்துக்கு புத்துயிர் கொடுத்துள்ளது அக்கட்சி. “மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கவும், மத்திய, மாநில உறவுகளை மேம்படுத்தவும், சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. ''இக்குழு ஜனவரி மாதம் இறுதிக்குள், இடைக்கால அறிக்கையையும், இரண்டு ஆண்டுகளில் இறுதி அறிக்கையையும் அரசுக்கு வழங்கும்,” என, முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் நேற்று தெரிவித்தார்.

சபை விதி 110ன் கீழ், முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:

அம்பேத்கர் தலைமையில், அரசியல் அமைப்பை உருவாக்கியவர்கள், கூட்டாட்சி கருத்தியலை கொண்ட மாநிலங்களின் ஒன்றியமாக நாட்டை உருவாக்கினர். ஆனால் இன்று, மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு, மாநில மக்களின் அடிப்படை உரிமைகளையே, மத்திய அரசிடம் போராடி பெற வேண்டிய நிலை உள்ளது.மாநிலங்கள் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவையாக இருந்தால் தான், அவை வளர்ச்சி அடையும்; இந்தியாவும் வலிமை பெறும். இதை உணர்ந்தே, 'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்ற கொள்கை முழக்கத்தை முழங்கி வருகிறோம்.எனினும், மாநில பட்டியலில் உள்ள முக்கிய அதிகாரங்களான மருத்துவம், சட்டம், நீதி போன்றவற்றை, மத்திய அரசின் பொதுப்பட்டியலுக்கு மாற்றும் வேலையே அடுத்தடுத்து நடக்கிறது. அதன் தொடர்ச்சியே, 'நீட்' தேர்வு, மருத்துவ கல்வி சேர்க்கை, தேசிய கல்விக் கொள்கை, மும்மொழி கொள்கை திணிப்பு போன்றவை. தொடர்ந்து மாநில உரிமைகள் பறிக்கப்படும் நிலையில், மத்திய - மாநில அரசுகளின் உறவுகளை மேம்படுத்த, அரசமைப்பு சட்டத்தின் விதிகளை ஆராய்ந்து மறுமதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி, மாநில திட்டக்குழு முன்னாள் துணை தலைவர் நாகநாதன் ஆகியோர் இப்பணியை செய்வர். குழு, தன் இடைக்கால அறிக்கையை ஜனவரிக்குள்ளும், இறுதி அறிக்கையை, இரண்டு ஆண்டுகளிலும் அரசுக்கு வழங்கும். அனைத்து மாநிலங்களின் உரிமைகளை காத்திடவே, இந்த முயற்சியை எடுத்துள்ளோம். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி எனும் முழக்கத்தை செயல்படுத்தி, மக்களாட்சி தத்துவத்தை, இந்திய நாட்டில் முழுமையாக மலரச் செய்வோம்.இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

அ.தி.மு.க., புறக்கணிப்பு

பா.ஜ., வெளிநடப்பு முதல்வர் அறிவிப்பு வெளியிடும் போது, அ.தி.மு.க.,வினர் சபையில் இல்லை. சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் எழுந்து, அமைச்சர்கள் மூன்று பேரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தும் கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேச முயன்றார். அதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்கவில்லை. எனவே, அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர். முதல்வர் அறிவிப்பை வரவேற்று, த.வா.க., - வேல்முருகன், கொ.ம.தே.க., - ஈஸ்வரன், ம.ம.க., - ஜவாஹிருல்லா, இந்திய கம்யூ., - ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் - நாகை மாலி, வி.சி., - சிந்தனைச்செல்வன், ம.தி.மு.க., - சதன் திருமலைகுமார், பா.ம.க., - ஜி.கே.மணி, காங்கிரஸ் - செல்வப்பெருந்தகை, அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் பேசினர். பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளிநடப்பு செய்வதாக அறிவித்து, வானதி, காந்தி, சரஸ்வதி ஆகியோருடன் வெளியேறினார்.

'பிரிவினைவாதத்தை துாண்டுகிறார் முதல்வர்'

“தனித் தமிழ்நாடு, தனிக்கொடி வேண்டும் என முதல்வர் நினைக்கிறார். பிரிவினைவாதத்தை துாண்டுகிறார்,” என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நேற்று அவர் அளித்த பேட்டி:மாநிலங்களை பிரிக்க வேண்டும் என, பிரிவினைவாதத்தை முதல்வர் துாண்டுகிறார். இந்திய நாடு வல்லரசாக வேண்டும், ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை. தனித் தமிழ்நாடு வேண்டும்; தனிக்கொடி வேண்டும் என, முதல்வர் நினைக்கிறார். அதனாலேயே சட்டசபையில் மாநில சுயாட்சியை வலியுறுத்துவது போல, பிரிவினை வாதத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதை பா.ஜ., கண்டிக்கிறது.இந்தியா வல்லரசாக, அனைத்து மாநிலங்களும் ஒன்றாக இருக்க வேண்டும். இந்திய நாடு நிர்வாக வசதிக்காக, பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. சட்டசபை தேர்தலை முன்னிறுத்தி, ஏதேனும் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, தி.மு.க., நினைக்கிறது.இது மக்களுக்கும், நாட்டுக்கும் விரோதமான செயல். மக்கள் இதை சிந்தித்து, வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும். பெண்களை அவதுாறாக, அமைச்சர் பொன்முடி பேசி உள்ளார். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதுகுறித்து, கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 68 )

Matt P
ஏப் 18, 2025 09:57

அமெரிக்காவில் மாநிலங்களில் மந்திரிகளே கிடையாதே. எல்லாமே ஆளுநரும் துறை சார்ந்த செயலாளர்களும்தான். ஓவ்வொரு துறை செயலாளர்களும் யார் என்ற பந்தாவும் இல்லாமல் யார் என்று யாரும் நினைக்காமல் நகர் கடை வீதிகளில் Q வில் நிற்க வேண்டுமானால் Q வில் நின்றேதேவையானதை வாங்குவார்கள். அவர்கள் எந்த கட்சியின் முழு ஆதரவாளர்களும் அல்ல. திறமைக்காக தான் பதவி. இங்கே ஆளுநரே இருக்க கூடாது என்கிறார்களே.


sundarsvpr
ஏப் 17, 2025 11:30

மோசமான தவறு செய்த பொன்முடியை அமைச்சர் பதவியில் நீக்க திறன் இல்லாத கோழை அரசிடம் மாநில சுய ஆட்சி அதிகாரம் வழங்கினால் மக்களும் பொன்முடிபோல் பேச ஆரம்பித்து விடுவார்கள்.


ES
ஏப் 16, 2025 22:49

Good decision


RAMESH
ஏப் 16, 2025 19:58

ஆட்சியை பிடிக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம்... எலும்பு துண்டுக்கு ஆசை படும் நபர்கள் இருக்கும் வரை சர்க்கஸ் ஓடும்...என் ரிங் மாஸ்டர் அப்பா


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 16, 2025 18:43

நியாயமா பார்த்தா பிரிவினை பேசும் கிம்ச்சையின் அரசை காங்கிரசும் கண்டிக்கணும் .... ஏன்னா காங்கிரசும் ஒரு தேசியக்கட்சி .....


Muralidharan S
ஏப் 16, 2025 15:42

கள்ளக்குறிச்சி - கள்ளச்சாராயம் குடித்ததால் 65 பேர் உயிரிழந்தனர்.. ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். தஞ்சாவூர் - லாவண்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு அவர் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டினர். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான மூத்த குடிமக்கள் கொலைகள் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளன, மாநிலத்தில் மூத்த குடிமக்களுக்கு எதிரான ஒட்டுமொத்த குற்றங்கள் 2021 இல் 1,841 வழக்குகளிலிருந்து 2022 இல் 2,376 ஆக உயர்ந்தன. கொலைகள், கொள்ளைகள், பாலியல் குற்றங்கள் போன்ற கொடிய குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாமல், சீரழிந்த கல்வி முறையை மட்டுமே தொடர்கிறது. 24 மணி நேரமும் சாராயக் கடைகள் இயங்குவதால், தெருக்களில் சாராய வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அரசியல்வாதிகளின் கஜானா நிரம்பி வழிகிறது. டாஸ்மாக் வருமானம் உயர்ந்து உள்ளது. மாநில அரசின் அனைத்து வரிகளையும் பல மடங்கு உயர்த்தியது ஆனாலும், மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று ஆளும் அரசு கூச்சலிடுகிறது – ஆனால் செலவுகளுக்கான கணக்கு அறிக்கையை பகிரங்கமாக வெளியிட தயாராக இல்லை.. ஆனாலும் அரசு கஜானா காலி. மத்திய அரசின் ஒவ்வொரு சீர்திருத்தத்தையும் எதிர்த்து, அனைத்து வளர்ச்சிகளையும் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதை விட என்ன சுயாக்‌ஷி ? இவ்வளவு பத்தாதா??


ராமகிருஷ்ணன்
ஏப் 16, 2025 15:41

திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தங்களது இஷ்டப்படி சுருட்ட விட்டு விட வேண்டும் இல்லை என்றால் இப்படித்தான் நீட், மானங்கெட்ட மாநில சுயாட்சி என்ற பைசா பிரோசனம் இல்லாத பிரச்சனை எல்லாம் பேசி மக்களை சிந்திக்க விடாமல் தடுத்து நிறுத்துவார்கள்


Narayanan
ஏப் 16, 2025 15:24

குழுக்கள் அளிப்பதில் வல்லவன் . மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் வேலை .


Muralidharan S
ஏப் 16, 2025 15:09

இப்பொழுது மாத்திரம் என்ன நடக்கிறது திராவிஷ ஆட்சியில்.. இவர்கள் இஷ்டம்போல ஆட்சி என்ற பெயரில், சுயமாகத்தானே தமிழகத்தை நாசமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.. இதற்க்கு மேல் என்ன இருக்கிறது இன்னும் தமிழகத்தை நாசம் செய்ய...


sankar
ஏப் 16, 2025 14:20

மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது முதல் தவறு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை