உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை பிளேக் மாரியம்மன் கோவிலில் சிலை உடைப்பு: அண்ணாமலை கண்டனம்

கோவை பிளேக் மாரியம்மன் கோவிலில் சிலை உடைப்பு: அண்ணாமலை கண்டனம்

கோவை: கோவை சின்னியம்பாளையம் பிளேக் மாரியன் கோவில் சிலைகள் உடைப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அண்ணாமலை அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mxbi5ohf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புகழ்பெற்ற கோவை சின்னியம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில், நேற்று இரவு, சமூக விரோதிகள் புகுந்து, நூற்றாண்டு கால பழமையான சிலைகளை உடைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தப் பகுதி மக்கள் காலங்காலமாய் வணங்கி வரும் அம்மன் ஆலயத்தின் சிலைகளை உடைத்து, சமூகப் பதற்றம் ஏற்படுத்துவதே நோக்கமாகத் தெரிகிறது.https://www.facebook.com/100063732519367/posts/1305764374891301/?rdid=9UVDvOScI2PIn4sL# உடனடியாக, கோவில் சிலைகளை உடைத்த சமூக விரோதிகளை கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதையும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

nagendhiran
ஜூன் 18, 2025 19:44

விடியலில் இது மாதிரி நடக்கவில்லைன்னா தான்" ஆச்சரியமே? நடப்பது இயல்பு தான்?


Nellai Ravi
ஜூன் 18, 2025 17:13

உடைத்தவருக்கு மனாநிலை சரியாக இருக்காது.


ஜெய்ஹிந்த்புரம்
ஜூன் 18, 2025 21:47

அப்போ ஒடைச்சது நிச்சயம் பாஜாக்காகாரன் தான்னு அடிச்சி சொல்றது அப்படித் தானே?