மேலும் செய்திகள்
கறைபடியும் கல்வித்துறை; அரசுக்கு இல்லை அக்கறை!
03-Apr-2025
மதுரை:தமிழகத்தில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்தும் நடவடிக்கைகள் முடங்கியுள்ளதால் முன்வைப்பு தொகை செலுத்தியும் நுாற்றுக்கணக்கான பள்ளிகள் தரம் உயர்வுக்கு காத்திருக்கின்றன.ஒவ்வொரு ஆண்டும் கல்வித்துறை சார்பில் அரசு நடு, உயர், மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். 2018 க்கு முன் வரை ஒவ்வொரு முறையும் 100 உயர், 100 மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வந்தன. பின் இதன் எண்ணிக்கை தலா 50 ஆக குறைக்கப்பட்டன. 2019 ல் 50 உயர்நிலை பள்ளிகள் மட்டுமே தரம் உயர்த்தப்பட்டன. அடுத்து 2022 - 2023 ல் அறிவிக்கப்பட்ட 50 பள்ளிகள் இதுவரை தரம் உயர்த்தப்படவில்லை. 2023 - 2024, 2024- 2025 க்கு இதுவரை தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பும் வெளியாகவில்லை.இந்நிலையில், உயர்நிலையாக தரம் உயர்த்த முன்வைப்பு தொகை ரூ.1 லட்சம் செலுத்தி 150க்கும் மேற்பட்ட பள்ளிகளும், மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த ரூ.2 லட்சம் செலுத்தி 200க்கும் மேற்பட்ட பள்ளிகளும் 2 ஆண்டுகளாக காத்திருக்கின்றன. இத்தொகை பள்ளி - மக்கள் பங்களிப்புடன் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.இதுகுறித்து தலைமையாசிரியர்கள் கூறியதாவது:பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டால் தான் ஆசிரியர், அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவர். இதன் மூலம் கிராமங்களில் குறிப்பாக மாணவிகள் இடைநிற்றல் தவிர்க்கப்படும். 5 கி.மீ.,க்குள் ஒரு உயர்நிலையும், 7 கி,மீ.,க்குள் ஒரு மேல்நிலை பள்ளியும் இருக்க வேண்டும் என்பது விதி. 2011 முதல் 2015 வரை தகுதியில்லாத பள்ளிகளை எண்ணிக்கைக்காக தரம் உயர்த்தப்பட்டதாக புகார் எழுந்தது. தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என முதல்வர், அமைச்சர் புள்ளி விபரம் வெளியிட்டு வரும் நிலையில் தரம் உயர்த்தும் நடவடிக்கை ஏன் முடங்கியுள்ளது. மாணவர்கள் நலன் கருதி பள்ளி தரம் உயர்வுக்காக பலர் தங்கள் நிலங்களை தானமாக வழங்கி காத்திருக்கின்றனர். இதுபோல் புதிய தொடக்க பள்ளிகளை துவக்கும் நடவடிக்கையும் முடங்கி வருகிறது. இதுபோன்ற சூழல் அரசு பள்ளிகள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்றனர்.
03-Apr-2025