உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குவாரியில் கற்கள் சரிந்து விபத்து; தொழிலாளர் 5 பேர் பலி

குவாரியில் கற்கள் சரிந்து விபத்து; தொழிலாளர் 5 பேர் பலி

சிவகங்கை: சிவகங்கையில் கல்குவாரியில் கற்கள் சரிந்து தொழிலாளிகள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் மேகா புளூ மெட்டல் என்ற தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு வெளியில் இருந்து கொண்டு வரும் கற்களை கொண்டு எம்.சாண்ட் மணல் தயாரிக்கப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i8fw3kqt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0குவாரி உள்ளேயும், பெரிய பள்ளம் தோண்டப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. குவாரிப்பள்ளத்தில் இன்று (மே 20) காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கற்கள் சரிந்து தொழிலாளர்கள் சிக்கினர். 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். இரண்டு பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மைக்கேல் என்பவர் படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ளார்.உயிரிழந்தவர்கள் கணேஷ், முருகானந்தம், ஆறுமுகம், அர்ஜித், ஆண்டிச்சாமி என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தாமரை மலர்கிறது
மே 20, 2025 21:15

திராவிட குவாரி முதலாளிகள் தமிழக பொதுச்சொத்துக்களை திருட, ஏழை தொழிலாளிகள் பலிகடா.


sundarsvpr
மே 20, 2025 13:40

விபத்து விதியால் ஏற்பட்டவை. அதாவது பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களை கணக்கிட்டு ஆண்டவனால் கொடுக்கப்பட்டது. பலத்த பாதுகாப்பு செய்து இருந்தாலும் இதுவும் விதிதான். விபத்தினால் சாவு நிகழ்ந்தால் நஷ்டஈடு வழங்குகிறோம். காரணம் அகால மரணம். இயற்கையால் நிகழ்ந்த சாவிற்கு கொடுப்பதில்லை காரணம் அகால மரணம் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை