உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மாணவர் கைது

வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மாணவர் கைது

பண்ருட்டி, :முந்திரி வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கல்லுாரி மாணவரை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், மாளிகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி, 46; முந்திரி வியாபாரி. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு இவரது வீட்டின் மீது மர்ம நபர்கள், பெட்ரோல் குண்டை வீசினர். குப்புசாமி புகாரின்படி, காடாம்புலியூர் போலீசார், தாழம்பட்டு கிராமத்தை சேர்ந்த 16 வயது பாலிடெக்னிக் கல்லுாரி மாணவரை பிடித்து விசாரித்தனர். இதில், குப்புசாமியின் உறவினர் பாஸ்கர் என்பவர், மாளிகம்பட்டு பகுதியில் பெட்டி கடை வைத்துள்ளார். அங்கு, 20 நாட்களுக்கு முன் சென்ற அந்த மாணவர், பொருட்கள் வாங்கி, 100 ரூபாய் பாக்கி வைத்ததால், பாஸ்கர் தட்டி கேட்டார். இதில், ஆத்திரமடைந்த மாணவர், தன் நண்பர்களான பள்ளி மாணவர்கள் இருவருடன் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசி யதை ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்த போலீசார், மற்றவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை