உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விடுதி கழிப்பறையில் மாணவி தற்கொலை

விடுதி கழிப்பறையில் மாணவி தற்கொலை

செம்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே தனியார் தோட்டக்கலை கல்லுாரி விடுதி கழிப்பறையில் மாணவி கலை நித்யா 21, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.செம்பட்டி -பழநி ரோட்டிலுள்ள இந்த தனியார்தோட்டக்கலை கல்லூரியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியைச் சேர்ந்த பால்கனி மகள் கலை நித்யா 21, பி.எஸ்.சி., தோட்டக்கலை பிரிவில் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று காலை கழிப்பறைக்குச் சென்ற இவர் ஜன்னல் துப்பட்டா மூலம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மாணவிகள் சிலர் கூறியதாவது: சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததால்தாயார் பர்வத தேவி கடந்த வாரத்தில் 3 நாட்கள் தங்கியிருந்தார். அவருடன் சொந்த ஊருக்கு சென்ற கலைநித்யா பிப்., 20-ல் கல்லுாரி திரும்பினார். நேற்று காலை கழிப்பறைக்கு சென்றவர் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. தோழியர் கதவை உடைத்து பார்த்தபோது ஜன்னலில் துாக்கிட்டப்படி இறந்து கிடந்தார் என்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை