உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசு திட்ட நிதியில் முறைகேடு; பெரியார் பல்கலை மீது மாணவர்கள் புகார்

மத்திய அரசு திட்ட நிதியில் முறைகேடு; பெரியார் பல்கலை மீது மாணவர்கள் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம் : சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலையில் மத்திய அரசின் தீன்தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்ட நிதியுதவியுடன் செயல்படும் 'டி.டி.யு. ஜி.கே.ஒய்.' மையத்தில் 'டிசைனிங்' உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதில் படித்த ஏழு மாணவர்கள் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனு:

பெரியார் பல்கலையில் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும் மையத்தில் 2021ல் 140 மாணவர் 60 மாணவியர் பயிற்சியில் இணைந்தோம். அதன் இயக்குனராக பதிவாளர் தங்கவேலு (பொ) ஊழியர்களாக சசிக்குமார் சாஜித் பரமேஸ்வரி உள்ளனர்.எங்களுக்கு இலவச கல்வியுடன் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதாக உறுதி அளித்தனர். அனைவரும் பட்டியலின பழங்குடி சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள். அனைத்து கல்வி சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர். கடந்த 27ல் பயிற்சி முடிந்த நிலையில் சான்றிதழ்களை தர மறுக்கின்றனர். தேர்வு எழுதினால் மட்டுமே தர முடியும் என்கின்றனர். அத்துடன் வங்கி கணக்கு புத்தகம் ஏ.டி.எம். கார்டை பெற்றுக்கொண்டனர். மத்திய அரசு சார்பில் மாதந்தோறும் வழங்கப்படும் 3000 ரூபாய் ஊக்கத்தொகையையும் எடுத்துக்கொண்டனர். இந்த முறைகேட்டை வெளியே தெரிவித்தால் சான்றிதழ்களை தர மாட்டோம் என மிரட்டுகின்றனர். எங்களுக்கு ஒதுக்கிய நிதியில் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

DVRR
ஜன 01, 2024 17:16

பெரியார் பல்கலை - அதன் உண்மையான அர்த்தம் "பெரிய ஊழல் பல் கலையின் (காலையில் மாலையில் இரவில் உள்ளே வெளியே என்னும் பல கலைகளின் மூலமாக) மூலமாக என்று எடுத்துக்கொள்ளுங்கள்


Barakat Ali
ஜன 01, 2024 16:44

மத்திய அரசை இகழ்ந்து பேசுவோம் ...... கட்டிங் அடிக்க முடியாதபடி கேள்வி கேட்பதால் சீறி எழுவோம் .....


Barakat Ali
ஜன 01, 2024 18:53

ஆனா அவங்க கொடுக்கற நிதியை சுருட்டுற அசிங்கமான காரியத்தை செய்ய கூச்சப்பட மாட்டோம் ......


K.L.ESWARAN
ஜன 01, 2024 11:30

திராவிட மாடல் பவுண்டர் பெயரில் பல்கலைக்கழகம் என்பதால் ஊழலுக்குக் குறையில்லையோ என்னவோ?


Sathyam
ஜன 01, 2024 10:56

எப்படியும் நீங்க எல்லாம் படிச்ச்சு உறுபட்டமாதிரி தான்


Sampath Kumar
ஜன 01, 2024 10:44

இவர்களை யாரோ தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் என்று


தமிழ்வேள்
ஜன 01, 2024 12:45

ஏண்டா ,அப்பாவி மாணவர்களிடம் காசை திருடுவீர்கள் ...அதை தட்டி கேட்டால் , தூண்டி விடுகிறார்கள் என்பதா ? திருட்டு திராவிட மாடல் குக்கல்களை கண்ட இடத்தில் கல்லால் அடிக்கும்போதுதான் திருந்துவார்கள் போல ...


NicoleThomson
ஜன 01, 2024 16:05

மாணவர்களிடம் ATM கார்டினை எடுத்துக்கொள்வது உங்களுக்கு எப்படி படுகிறது சம்பத்?


RAMAKRISHNAN NATESAN
ஜன 01, 2024 19:16

திராவிடம் ஊழல் முடை மாற்றம் எடுத்து நாறுது ....... அதை எதிர்க்க தூண்டி வேற விடணுமாக்கும் ???? மாணவர்களுக்கு சுய அறிவு இல்லைன்னு சொல்ல வர்றியா டீம்கா கொத்தடிமையே ????


அப்புசாமி
ஜன 01, 2024 10:10

ஏ.டி.எம்.கார்டையே குடுத்துட்டீங்களா? உங்களை.மச்திரி தத்திகள்.இருக்குற வரைக்கும் திருட்டு திராவிடனுங்க பிழைப்பு ஜோரா போகும். திருந்த வேண்டியது நீங்கதான்.


Palanisamy Sekar
ஜன 01, 2024 09:50

ஆட்சியாளர்களே உத்தமர்கள் இல்லை என்கிறபோது பிறரிடம் இவர்கள் எப்படி யோக்கியதையை எதிர்பார்க்க முடியும்? இதில் பிறர் தூண்டுதலும் இருக்க கூடும். எல்லாமே பணம் பணம் பணமே பிரதானம் என்பதால் எல்லோருமே இதில் ஏதோ ஒரு வகையி ஆதாயம் தேடவே முயற்சிக்கின்றார்கள்.


duruvasar
ஜன 01, 2024 09:30

இந்த நல்ல வாய்ப்பளித்த முத்தமிழ் வித்தகர் முத்துவேல் கருணாநிதி வாழ்க, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வாழ்க, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி வாழ்க, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி அன்பு நிதி வாழ்க என பிழையில்லாமல் ஒரே மூச்சில் மூன்று முறை சொன்னால் உங்கள் கோரிக்கை நிறைவேறிவிடும். இதுதான் எளிய முறை.


VENKATASUBRAMANIAN
ஜன 01, 2024 08:38

இந்த லட்சணத்தில் வேந்தர் பதவியை ஆக்கிரமிக்க முயல்கின்றனர்.


sridhar
ஜன 01, 2024 10:15

பெயரை மாற்றினால் சரியாகி விடும்.


vbs manian
ஜன 01, 2024 08:10

மாணவர் வயிற்றிலும் அடிக்க வேண்டுமா.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை