உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதிப்பில்லாத பட்டங்களுடன் துயரப்படும் மாணவர்கள்; ராமதாஸ் கவலை

மதிப்பில்லாத பட்டங்களுடன் துயரப்படும் மாணவர்கள்; ராமதாஸ் கவலை

சென்னை: தமிழகத்தில் 30 மாதங்களாக புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப் படவில்லை. மதிப்பில்லாத பட்டங்களுடன் மாணவர்கள் துயரப்படுகின்றனர் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். அவரது அறிக்கை: தமிழகத்தின் உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்களுக்கு கடந்த 30 மாதங்களாக புதிய துணைவேந்தர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. இதேநிலை தொடர்ந்தால் வரும் ஆகஸ்ட் மாதத்தில் 85 சதவீதம் பல்கலைகளில் துணைவேந்தர்கள் இல்லாத நிலை உருவாகி விடும். ஆளுனருக்கும், அரசுக்கும் இடையிலான மோதல் தான் இதற்குக் காரணம் எனும் நிலையில் அதற்கு தீர்வு காண ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது கண்டிக்கத்தக்கது.தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழகம் கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், திருச்சி பாரதிதாசன், தமிழகம் விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆகிய 8 பல்கலைக் கழகங்களும் துணைவேந்தர்கள் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றன. இவற்றில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 30 மாதங்களாகவும், கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 29 மாதங்களாகவும், நிரப்பப்படாமல் காலியாக கிடக்கின்றன. தமிழகம் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி ஏப்ரல் மாதத்தில் முடிவுக்கு வருகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் வரும் மே 19ம் தேதி நிறைவடைகிறது. துணைவேந்தர்கள் இல்லாததால் பல்கலைக்கழகங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி, பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களில் நிலையான பதிவாளர்கள், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், நிதி அலுவலர்களும் இல்லாததால் அவை முடங்கிக் கிடக்கின்றன. பல்கலைக்கழங்கள் எதிர்கொண்டு வரும் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம். பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில் யு.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை சேர்க்க வேண்டுமா? வேண்டாமா? என்பது தொடர்பாக அரசுக்கும், கவர்னருக்கும் இடையிலான மோதல் தான். பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு, ஏற்கனவே கவர்னருக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான மோதல் தொடர்பான வழக்குகளுடன் இணைத்து உச்சநீதிமன்றத்தில் வேகமாக விசாரிக்கப்பட்டாலும் கடந்த ஒரு மாதமாக அந்த வழக்குகளின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் இடைக்காலத் தீர்ப்பைப் பெறுவது அல்லது வேறு ஆக்கப்பூர்வமான முயற்சிகளின் மூலம் அரசுக்கும், கவர்னருக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வந்து காலியாக உள்ள 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ray
ஏப் 09, 2025 02:06

அதனாலதானே நம்ம பிரதமர் பற்பல வெளிநாடுகளிலும் போயி வாங்கிட்டு வரார்.


Mr Krish Tamilnadu
மார் 24, 2025 21:04

நமது கல்வியை மறைமுகமாக அனைத்து வழிகளிலும் முடக்கி, எதை சாதிக்க ஆசைப்படுகிறது மத்திய அரசு. தேசிய கல்வி என கூறும் மத்திய அரசுக்கு பல்கலைகழகங்கள் முடக்கி கிடப்பது தெரியவில்லையா? கண்ணை மூடி நடிக்கிறாதா?.


Padmasridharan
மார் 24, 2025 16:41

"மதிப்பில்லாத பட்டங்களுடன் துயரப்படும் மாணவர்கள்" பணத்துக்காக எவ்வளவோ courses ஆரம்பிக்கப்படுகின்றன. இதில் மாற்றுத் திறனாளிகளின் courses உம் அடங்கும். முன்னர் இருந்தது தற்பொழுது இல்லை, தற்பொழுது இருப்பது, பின்னர் இருப்பதில்லை. பட்டங்கள் இருக்கின்றது, ஆனால் அதற்குத் தக்க வேலை இருப்பதில்லை. Employment Office இல் பதியச்சென்றால் அங்கு மதிப்பதே இல்லை. Online இல் பட்டங்கள் Register/Renewal செய்ய முடியவில்லை. அதைக்கூட பெட்டிக்கடையில் பணமாக்கின்றனர்.


sankar
மார் 24, 2025 15:44

திராவிட மாடலின் சாதனை சார் இது


Sekhar
மார் 24, 2025 15:39

நாம் தான் நீட் எதிர்ப்போம், lot of compromise in quality of education. we focus only quantity not quality. Stop ing new colleges and focus on quality. Teachers/professors quality, make education more high quality. if some one says exam is tough political people should not involve in education methods and syllabus level or tough entrance model.


அப்பாவி
மார் 24, 2025 14:18

துணைவேந்தர்கள் இந்தி பண்டிட்களாக இருக்கணும்னு கெவுனர் ஆசைப்படறாரு. வடக்கேருந்து நாலு பேரை நியமிக்கிறோம்னு சொன்பா உடனே நியமிச்சுருவாரு. இந்தி திணிப்பும் நடக்கும். இது மருத்துவருக்கு தெரிய வாய்ப்பில்லை.


Rangarajan Cv
மார் 24, 2025 15:50

Lack of knowledge. Better to know little bit on UGC guidelines.


panneer selvam
மார் 24, 2025 16:07

Do not spit poison in public . The only contention is that governor insists to follow UGC guidelines on ion of VC of the universities , ie , adding one more member nominated by UGC in the ion committee . So where is the problem ? It is nothing but egoism of Tamil Nādu government . They want money from UGC but not to follow their guidelines as Dravidian Parties could auction the VC post to highest bidder . So try to understand the core issue instead of writing nonsense in public


ஆரூர் ரங்
மார் 24, 2025 14:12

முதல்வரே எல்லாப் பல்கலைக்கும் வேந்தர் என்ற சட்டத்தை கருணாநிதியே எதிர்த்து அப்போதைய கவர்னரிடம் கையெழுத்திடவே கூடாது என வாதாடி நிறுத்தினார். இப்போது அதே சட்டத்தை ஸ்டாலின் கொண்டு வந்து கவர்னரின் ஒப்புதலை எதிர்பார்க்கிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை