மேலும் செய்திகள்
பட்ஜெட் குறித்து முதல்வர் ஆலோசனை
08-Feb-2025
சென்னை:“மாநில அரசுகளின் நிதிநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஓய்வூதியத் திட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களை ஆய்வு செய்து வருகிறோம்,” என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.முதல்வர் ஸ்டாலின் தலைமையில், பொருளாதார ஆலோசனைக் குழு கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், பொருளாதார வல்லுநர்கள் ரகுராம் ராஜன், எஸ்தர் டப்லோ, ழான் த்ரேஸ், அரவிந்த் சுப்பிரமணியன், நாராயண், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:மூன்று ஆண்டுகளாக அரசின் பொருளாதார கொள்கைகளையும், முன்னோடி நலத் திட்டங்களையும் வடிவமைத்து செயல்படுத்துவதில், பல்வேறு ஆலோசனை வழங்கியதற்காக, பொருளாதார ஆலோசனைக் குழுவினருக்கு நன்றி. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தி, 2030ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் இலக்கை அடைய வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறோம். நான்கு ஆண்டுகளில், 40 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.மோட்டார் வாகனம், ஜவுளி, தோல் பொருட்கள், தோல் அல்லாத காலணி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை பொருட்கள் உற்பத்தி வாயிலாக, அதிக முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். நலத்திட்டங்களையும், கட்டமைப்பு மேம்படுத்துதலையும் ஒரே நேரத்தில் செய்வதற்கு தேவையான ஆதாரங்களை உருவாக்கி இருக்கிறோம்.மத்திய அரசின் 16வது நிதிக்குழுவிடம், வளர்ச்சியடைந்த மாநிலங்களின் நிதி பகிர்வு குறித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஒரு முற்போக்கான அணுகு முறையை, இந்த நிதிக்குழு கடைபிடிக்கும் என, எதிர்நோக்கியுள்ளோம்.மாநில அரசுகளின் நிதிநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஓய்வூதியத் திட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களை ஆய்வு செய்து வருகிறோம்.தமிழகத்தின் முன்னேற்றத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் எதிர்நோக்கிஉள்ளேன்.மூன்றரை ஆண்டு களில், இந்த அரசு எடுத்த பல்வேறு முன் முயற்சிகளின் பயன்களை நிலைக்க செய்யவும், வரும் ஆண்டுகளில் மக்களின் எதிர்காலத்தை மேலும் வளமிக்கதாக மாற்றவும், தேவையான பயனுள்ள ஆலோசனைகளை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
08-Feb-2025