சென்னை: தி.மு.க.,வில் கட்சியின் நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் சிறப்பாக நடக்கவும், வேலுார் மாவட்டம், வேலுார் வடக்கு, வேலுார் தெற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. வேலுார் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நந்தகுமார் எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டு உள்ளார். இவருக் கு வேலுார், அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. வேலுார் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்.பி., நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு காட்பாடி, கே.வி.குப்பம் ஆகிய இரு சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். வேலுார் மாவட்டத்தில் வன்னியர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்ற குறையை போக்கவும், வரும் சட்டசபை தேர்தல் செலவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வகையிலும், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த கதிர் ஆனந்திற்கு, மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப் பட்டுள்ளது. ஏற்கனவே, வேலுார் மாவட்ட தி.மு.க.,வில் ஐந்து சட்டசபை தொகுதிகளை வைத்திருந்த நந்தகுமார், நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், துரைமுருகனின் சிஷ்யராக கடந்த 30 ஆண்டுகளாக இருக்கிறார். எனவே, அவருக்கு மூன்று சட்டசபை தொகுதிக ளை ஒதுக்கி, மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதில், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும், தி.மு.க.,வில் வாரிசு அரசியல் தொடரலாமா? என சமூக வலைதளங் களில் கொந்தளிக்கத் துவங்கி உள்ளனர். அதேபோல மாவட்டத் தில் அதிகமாக உள்ள முதலியார் இனத்தைச் சேர்ந்தோருக்கு பிரதிநிதித் துவம் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் தொண்டர்களால் வைக்கப் படுகிறது.