வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கொஞ்சநாளில் சென்னையின் சில பகுதிகளே காணாமப் போயிரும். ஏன்னா அவனவன் 600, 700 அடிக்கு கீழே போர் போட்டு தண்ணியை உறிஞ்சிடுறான். மேல் மண்ணு உள்ளே வாங்கிடப் போகுது.
ஆம்
சென்னை: சென்னையில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த கார் அந்தப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சென்னை தரமணி - திருவான்மியூர் சாலையில் உள்ள யூ-டர்ன் பாலம் அருகே சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. அப்போது, அந்த சாலையில சென்று கொண்டிருந்த கார், அந்தப் பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yjv7x4fs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனிடையே, மெட்ரோ ரயில் பணிகளால் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் வெளியாகியது. ஆனால், இதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், விபத்து நடந்த பகுதியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் தான் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதாகவும், பள்ளம் ஏற்பட்ட பகுதியில் கழிவுநீர் கால்வாய் தான் இருப்பதாக விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்ட சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
கொஞ்சநாளில் சென்னையின் சில பகுதிகளே காணாமப் போயிரும். ஏன்னா அவனவன் 600, 700 அடிக்கு கீழே போர் போட்டு தண்ணியை உறிஞ்சிடுறான். மேல் மண்ணு உள்ளே வாங்கிடப் போகுது.
ஆம்