நடிகர் விஜய்க்கு ஓட்டுகள் விழாது என்கிறார் சுமன்
தஞ்சாவூர்: பா.ஜ., நட்சத்திர பேச்சாளரும் திரைப்பட நடிகருமான சுமன் அளித்த பேட்டி: நடிகர் விஜய், அரசியல் கட்சி துவங்கி, கூட்டம் கூட்டுவது, ஓட்டுகளாக மாறாது. நடிகரின் மீது உள்ள ஒரு பிம்பத்தால் தான் கூட்டம் கூடுகிறது. குறிப்பாக, இளைஞர்கள் கூட்டம் கூடத்தான் செய்யும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y50izplr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திரையில் வெளியிடப்படும் திரைப்படத்திற்கு மட்டும் தான் சென்சார் சான்று வழங்கப்படுகிறது. ஆனால், ஓ.டி.டி.,களில், வெளியாகும் சினிமாக்களில், ஆபாச காட்சிகள், வன்முறை காட்சிகள் இடம் பெறுகின்றன. இதற்கு, 'சென்சார்' சான்று வழங்கப்படுவதில்லை. அதை முறையாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.