உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெப்பத்தை தணிக்க வருகிறது கோடை மழை: வானிலை மையம் அறிக்கை

வெப்பத்தை தணிக்க வருகிறது கோடை மழை: வானிலை மையம் அறிக்கை

சென்னை: தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் வரும் மார்ச் 20ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி மற்றும காரைக்கால் பகுதிகளில் இன்று (மார்ச் 17) முதல் மார்ச் 19ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் மார்ச் 20ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதுதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஒரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

N Annamalai
மார் 17, 2024 22:07

இருகரம் கூப்பி வரவேற்போம் மாரிமழையை


THINAKAREN KARAMANI
மார் 17, 2024 22:06

மண்ணையும் மனதையும் குளிர வைக்கப் போகும் கோடை மழையே வருக வருக THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.


Ramesh Sargam
மார் 17, 2024 21:32

தமிழகம் மட்டும் பெங்களூரில் ஒரு சில நல்ல மழை பெய்தால் மக்களின் தண்ணீர் பிரச்சினை ஓரளவுக்கு சமாளிக்கமுடியும்.


மேலும் செய்திகள்