உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அஞ்சாமல் லஞ்சம் வாங்கிய கண்காணிப்பாளர் கணேசன் கைது

அஞ்சாமல் லஞ்சம் வாங்கிய கண்காணிப்பாளர் கணேசன் கைது

கடலுார்:இலவச கட்டாய கல்வி திட்ட தொகை விடுவிக்க 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.கடலுார் முதுநகரை சேர்ந்தவர் பாலசண்முகம்; அதே பகுதியில் தனியார் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி நடத்தி வருகிறார். இவர், தனது பள்ளியில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணம் 14 லட்சத்து 57 ஆயிரத்து 56 ரூபாயை விடுவிக்கக்கோரி, கடலூர் மஞ்சக்குப்பத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கணேசன், 50; என்பவரை அணுகினார். அதற்கு, கண்காணிப்பாளர் கணேசன், 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இது குறித்து கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் பாலசண்முகம், புகார் அளித்தார்.இதை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின்படி, பாலசண்முகம் ரசாயன பொடி தடவிய பணத்தை எடுத்துக் கொண்டு நேற்று மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பாலசண்முகத்திடம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை வாங்கிய கணேசனை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.இது குறித்து கடலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து கணேசனிடம் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் கடலுாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சம்பர
அக் 19, 2024 04:36

என்னமோ இவர் மட்டும் வாங்குறமாதிரி


Vijay D Ratnam
அக் 18, 2024 23:03

இப்போ என்ன அஞ்சாமல் லஞ்சம் வாங்கிய அந்த கண்காணிப்பாளர் கணேசனை தூக்கிலா போடப்போறாய்ங்க. அல்லது சாகும் அரை சிறைத்தண்டனை கொடுக்க போறாய்ங்களா. அல்லது அவரது மொத்த சொத்தையும் பறிமுதல் செய்யப்போறாய்ங்களா.


.Dr.A.Joseph
அக் 18, 2024 22:09

மக்களின் ஒட்டு மொத்த வரிப்பணத்தையும் அரசு ஊழியர்கள் மட்டுமே தின்று தீர்க்கிறார்கள் .அது போக இது வேற


Ramesh Sargam
அக் 18, 2024 20:00

எப்பொழுதுமே லஞ்சம் வாங்குபவர்கள் அஞ்சாமல்தான் லஞ்சம் கேட்பார்கள். லஞ்சம் கொடுப்பவர்கள்தான் லஞ்சம் கொடுத்தபின்னும் அஞ்சி எங்கே அவர்கள் வேலை நடக்குமோ அல்லது லஞ்சம் வாங்கிய அதிகாரி ஏமாற்றிவிடுவாரோ என்கிற அச்சத்தில் இருப்பார்கள்.


அப்பாவி
அக் 18, 2024 19:33

அஞ்சா நெஞ்சன். திருட்டு திராவிடன் கணேசன் வாழ்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை