உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருட்டு புகாரில் சிக்கிய செயல் அலுவலருக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் கண்காணிப்பாளர் பொறுப்பு

திருட்டு புகாரில் சிக்கிய செயல் அலுவலருக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் கண்காணிப்பாளர் பொறுப்பு

திருச்சி:திண்டுக்கல், காளகஸ்தீஸ்வரர் கோவில் திருப்பணியின் போது, குற்றச்சாட்டுக்கு உள்ளான நபருக்கு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கண்காணிப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து, ஹிந்து தமிழர் கட்சி சார்பில், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ரவிக்குமார் கூறியதாவது:

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கண்காணிப்பாளராக பணிபுரியும் வேல்முருகன் என்பவர், 2013 -- 14ம் ஆண்டுகளில், திண்டுக்கல், காளகஸ்தீஸ்வரர் கோவிலில், செயல் அலுவலராக பணிபுரிந்தார். அப்போது, பழமையான அந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன.அப்போது, பழமையான சிலைகள், மயில் மண்டப துாண்கள், தெய்வத்திருமேனிகள் களவாடப்பட்டு, அந்தக் கோவிலின் அடையாளங்களை முற்றிலுமாக அழிப்பதற்கு காரணமாக இருந்தவர் தான் வேல்முருகன். இது தொடர்பான வழக்கு, திண்டுக்கல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரை, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், நகைகளை பராமரிக்கும் பொறுப்பாளராக நியமித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது; கண்காணிக்கப்பட வேண்டும்.ஆண்டவனின் அடையாளத்தை அழித்து துரோகம் செய்தவர், திருக்கோவில் பணியில் இருக்கக் கூடாது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Bhaskaran
ஜூன் 13, 2025 13:00

நேற்று சங்கரன்கோவில் சென்றிருந்தேன் அர்ச்சனை செய்தபின் குருக்கள் தட்டில் பத்து ரூபாய் போட்டேன் மினிமம் சார்ஜ் 20 ரூபாய் போட வேண்டுமாம் காணிக்கை நாம் இஷ்டப்பட்டு தருவது இதில் என்ன கண்டிஷன்


Chandrasekaran
ஜூன் 12, 2025 18:55

அறநிலையத்துறை பிடியிலிருந்து ஆலயங்கள் விடுபட்டாலன்றி இதுபோன்ற நடவடிக்கைககளை மாற்ற முடியாது. தினம் ஒரு வழக்கில் குட்டுப்பட்டுக் கொண்டிருக்கிறது. எத்தனையோ சட்டங்களுக்கு சவால் விடும் நீதிமன்றங்கள் இதில் மட்டும் தலையிடுவதில்லை. மாற்றாக மக்கள் உண்டியல் காணிக்கையை கைவிட்டால் அரசு தானாகவே விலகி விடும்.


vijai hindu
ஜூன் 12, 2025 11:17

திருடனுக்கு திருடன் துணை திருடர்கள் ஆட்சியில் சகஜம்


Rangarajan Cv
ஜூன் 12, 2025 11:02

When a minister despite court indictments, continuing as minister ( big shame), no wonder other thieves can focus on temples- property. Disgusting. TN people please wake up. By not resisting, the people are becoming party to this crime.


Muralidharan S
ஜூன் 12, 2025 10:16

கோவில் சொத்துக்களை திருடுபவன் நிச்சயம் கடவுள் நம்பிக்கை இல்லாத / கடவுள் நம்பிக்கை இருப்பவன் போல வேஷம் போடும் போலி கபட வேஷதாரியாகத்தான் இருப்பான்.. உண்மையான கடவுள் பக்தி இருப்பவனுக்கு எந்த கெட்ட எண்ணமும் இருக்காது. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படமாட்டான். அதிலும் கோவில் சொத்துக்கு ஆசைப்படமாட்டான். அடுத்தவனுக்கு துரோகம் இழைக்கமாட்டான்.. 99 சதவிகிதம் இன்று போலி பக்தி, போலி பக்த நாஸ்தீக கூட்டம்தான்.... இல்லை என்றால் கடவுள் நம்பிக்கை / பக்தி இருக்கும் ஹிந்துக்கள் திராவிஷ கட்சிக்கு ஒட்டு போடுவானா ???.. சிவன் சொத்து குலநாசம் என்பார்கள்.. திராவிஷத்திற்கு போடும் ஒட்டு, கடவுளுக்கும் / கோவிலுக்கும் இழைக்கும் தீங்கு.... எல்லா பாவங்களையும் / அக்கிரமங்களையும் பண்ணிவிட்டு கோவிலுக்கு போவதால் செய்வினை தீரப்போவது இல்லை.. இன்னும் அதிகமாகும்.. கடைசியில் குலநாசத்தில் முடியும்..


Thravisham
ஜூன் 12, 2025 08:38

முன்னாள் ஆட்டோ ரவுடி இந்நாள் அறமில்லா துறையின் அமைச்சர் புடை நாற்றமெடுக்கும் திருட்டு த்ரவிஷன்கள் ஆட்சி. அண்ணாமலையாரின் ஆட்சி காண்பதெப்போ?


V RAMASWAMY
ஜூன் 12, 2025 08:36

ஒத்த கருத்தும் செயல்பாடுமுள்ளவர்களை நியமிப்பது கைவந்த கலை, இது மாடல் நிர்வாகம். இப்படித்தானிருக்கும். நீங்கள் திருங்துங்கள் மக்களே, மற்ற எல்லாம் திருந்திவிடும்.


Ram
ஜூன் 12, 2025 08:20

திராவிட ஆட்சி என்றாலே திருடர்களின் ஆட்சிதானே .... நாசமாய் போகட்டும்


அம்பி ஐயர்
ஜூன் 12, 2025 07:33

இதென்ன பிரமாதம்.. முன்னாள் ரவுடி ஒருவன் அற நிலையத் துறை அமைச்சராவே இருக்கும்போது..... இதெல்லாம் சாதாரணம்....


அப்பாவி
ஜூன் 12, 2025 07:15

நம்ம நீதித்துறையின் லட்சணம். 2013 ல் துவங்கிய வழக்கை இன்னும் நாபது, அம்பது வருஷம் நடத்துவாங்க.


முக்கிய வீடியோ