உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுப்ரீம் கோர்ட் உத்தரவால் தெரு நாய்களை கட்டுப்படுத்துவதில் சிக்கல்: அமைச்சர் நேரு

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் தெரு நாய்களை கட்டுப்படுத்துவதில் சிக்கல்: அமைச்சர் நேரு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்: கொ.ம.தே.க., - ஈஸ்வரன்: ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில், தெருநாய்களின் தொந்தரவு அதிகரித்துள்ளது. தெருநாய்கள், ஆடு, கோழிகளை கடிப்பதால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதற்கு, அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.அமைச்சர் நேரு: இது தீர்க்க முடியாத பிரச்னை. தெருநாய்களை பிடித்தால், கருத்தடை செய்து மீண்டும் அதே இடத்தில் விட வேண்டும்.அப்படி விடும் நாய்கள் உயிரோடு இருக்க வேண்டும். இல்லையென்றால், சிறை தண்டனை வழங்கப்படும் என, உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ளது. இதனால், தெரு நாய்களை பிடிக்க, அதிகாரிகள் பயப்படுகின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காண, பார்லிமென்டில் தனிநபர் தீர்மானம் கொண்டு வருமாறு, தி.மு.க., - எம்.பி.,க்களிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். சட்டத்தில் இடமில்லை. இல்லையெனில், ஒரே நாளில் இப்பிரச்னையை முடிக்க முடியும்.அமைச்சர் முத்துசாமி: தெருநாய்களால் கோழி, ஆடுகளை இழக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து, முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

balakrishnankalpana
மார் 19, 2025 17:14

அய்யோ அயயோ அவர்களை காரிலிருந்து இறங்கி நடக்கசொல்ல்லுங்கள், அப்ப தெரியும் சாமானிய மக்களின் நிலை


Bhaskaran
மார் 19, 2025 07:29

தெரு நாய்க்கு ஆபரேஷன் செய்து விட்டுடனுமாம் விலங்கு நல ஆர்வலர்களை நாய்கள் கடித்தால் அப்பத்தான் மற்றவர்கள் கஷ்டம் தெரியும் 80 களில் பல்லாவரத்தில் நான் குடியிருந்த போது ஷிப்ட் முடிந்து வருபவர்களை நாய்கள் துரத்தும் புகார் அளித்தவுடன் ஒரேநாளில் 50 கற்கும் மேற்பட்ட தெருநாய்களை பிடித்து கொண்டு போனார்கள்.இப்போ எங்கு பார்த்தாலும் தெருநாய் தொந்தரவு தான் இன்றுகூட நம் நாளிதழில் இரு சிறுவர்களை நாய்கடித்ததாக செய்தி இதில் பாவ புண்ணியம் பார்க்காமல் தெருநாய்களை பிடித்து முடிவு கட்டவேண்டும்


अप्पावी
மார் 18, 2025 21:22

சுப்ரிம் கோர்ட் ஊழல் செய்யாதேன்னா இவிங்க செய்யமாட்டாங்க. அவ்ளோ நல்லவய்ங்க.


Anand
மார் 18, 2025 15:28

கையாலாகாத தனத்தை எப்படி சமாளிக்கிறான் இந்த கேடுகெட்ட பிறவி.. இதே சுப்ரீம் கோர்ட் திருட்டு, பொய் புரட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஊழல், சமூக விரோத செயல், ரவுடியிசம், போன்றவற்றையும் ஒழிக்க பலமுறை ஆணையிட்டது, அது நடந்ததா? திருடன் கையில் சாவி இருப்பது போலல்லவா உங்களோட கேடுகெட்ட ஆட்சி...


Veeraputhiran Balasubramoniam
மார் 18, 2025 13:49

குழந்தைகள் , முதியோ , மனிதர்கள் இவர்களை ப்பற்றிய கவலை இல்லையாம் கோழி, ஆடு நாய் கடித்தால் இழப்பீடாம்..... கள்ள சாராய யுஇர் இழப்புக்கு ....இழப்பீடுகொடுப்பது போல் உள்ளது


Nagarajan S
மார் 18, 2025 12:31

ஆஹா என்ன ஓரு பயம் சுப்ரீம் கோர்ட்க்கு ? சுப்ரீம் கோர்ட் ஜாமினில் விடுதலை செய்த செந்தில் பாலாஜிக்கு எப்படி அமைச்சர் பதவி கொடுத்தீர்கள் என்று சுப்ரீம் கோர்ட் கேட்டதிற்கு இதுவரை நீங்கள் பதில் அளிக்கவில்லையே?


Ramesh Sargam
மார் 18, 2025 12:26

திமுகவினர் என்னமோ நீதிமன்ற தீர்ப்புகளுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பதைப்போல இவர் பேசுகிறார். அட சென்னை விமான நிலையத்தில் டஜன் கணக்கான நாய்கள் சுற்றித்திரிகின்றன. அங்கிருந்து பயணிக்கும் பயணியர் உயிரை கையில் பிடித்து விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். அதையாவது பிடித்து கூண்டில் அடைப்பார்களா அல்லது நீதிமன்ற தீர்ப்பை காட்டி தப்பித்துக் கொள்வார்களா இந்த திருட்டு திமுக...


ராமகிருஷ்ணன்
மார் 18, 2025 12:25

ஹி ஹி ஹி ஹி


Ramalingam Shanmugam
மார் 18, 2025 10:42

அமைதி பார்ட்டி க்கு ஆகாது டூல் kit இது


Barakat Ali
மார் 18, 2025 10:19

உச்சத்தால் தெருநாய்களை மட்டுமல்ல ..... முந்திரிகளையும் கட்டுப்படுத்த முடியல .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை