உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியலமைப்பு சட்டத்தை சுப்ரீம் கோர்ட் பாதுகாக்கும்: வக்ப் சட்ட திருத்தம் குறித்து தீர்ப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு

அரசியலமைப்பு சட்டத்தை சுப்ரீம் கோர்ட் பாதுகாக்கும்: வக்ப் சட்ட திருத்தம் குறித்து தீர்ப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: வக்ப் சட்டத்திருத்தம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பினை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.அவரது அறிக்கை: திமுகவும் மற்ற மனுதாரர்களும் வக்ப் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில், மத்திய பாஜ அரசு கொண்டு வந்துள்ள முக்கியத் திருத்தங்களுக்குத் தடை விதித்து சுப்ரீம்கோர்ட் இன்று உத்தரவிட்டு உள்ளது.வக்ப்க்குச் சொத்தை அளிக்க, 5 ஆண்டு இஸ்லாத்தைக் கட்டாயமாக நடைமுறையில் கடைப்பிடித்திருக்க வேண்டும் எனும் விதிக்குத் தடை. வக்ப் நிலத்தை அரசு நிலம் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தாலே, உரிய அதிகாரி அறிக்கை அளிக்கும்வரை அல்லது அரசு முடிவெடுக்கும் வரை அச்சொத்தைப் பறிக்கும் அதிகாரத்துக்குத் தடை. 'வக்ப் பயனர்' என்பதை நீக்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கான அதிகாரத்துக்குத் தடை (நீண்டகால மதப் பயன்பாட்டின் அடிப்படையில் வக்ப் சொத்துகளாகக் கருதப்படும் சொத்து). மத்திய வக்ப் வாரியத்தில் நான்குக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரை சேர்ப்பது, மாநில வக்ப் வாரியங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரைச் சேர்ப்பதற்குத் தடை. இதனால், இந்த வாரியங்களில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருப்பது உறுதிசெய்யப்படும். பாஜ அரசு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக, சட்டவிரோதமாகச் செய்துள்ள திருத்தங்களை நீக்குவதை நோக்கிய முக்கிய நகர்வாக இன்றைய நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது.இந்த சட்டத்திருத்த முன்வரைவு பார்லிமென்டில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, திமுக இதனைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள பலரோடு சேர்ந்து வெற்றியும் கண்டுள்ளது. திமுக தலைமையிலான தமிழக அரசும் மத்திய அரசு வக்ப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்திச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பாஜ வின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.இந்நிலையில், இன்றைய உத்தரவு இஸ்லாமியர்களின் மத உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் சுப்ரீம் கோர்ட் பாதுகாக்கும் என மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

மாடல் மாதவன்
செப் 16, 2025 08:00

இஸ்ரேல் பாணி ட்ரீட்மெண்ட் குடுக்கணும். சாது மிராண்டா காடு கொள்ளாது. வெகு விரைவில் இதுபோன்ற நடவடிக்கை உலகம் பூராவும் நடக்கும்


சண்முகம்
செப் 16, 2025 01:22

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக இல்லாத எந்த சட்டமும் மக்களவையில் இயற்றப்பட்டால் எந்த நீதி மன்றமும் தடை விதிக்க முடியாது. இதை ஸ்டாலின் அறியார்.


கல்யாணராமன் சு.
செப் 15, 2025 22:06

முதல்வருக்கு தெரியுமோ , தெரியாதோ தெரியலே , ஆனா , அவருக்கு எழுதிக் கொடுத்தவருக்கு தெரியாது


Sun
செப் 15, 2025 20:56

எந்த ஒரு சட்டமும் பார்லிமெண்ட் இயற்றும் போது அதை சுப்ரீம் கோர்ட் நிராகரிக்க முடியாது இதைத்தான் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் கூறியுள்ளது. தீர்ப்பினை வரவேற்பதாக மத்திய அமைச்சர் கிரன் ரிஜ்ஜீ கூறியுள்ளாரே? இது மாண்புமிகு முதல்வருக்கு தெரியுமா?


GMM
செப் 15, 2025 20:32

வக்பு சொத்தை அளிக்க, 5 ஆண்டு இஸ்லாத்தைக் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்ற விதிக்கு தடை. எத்தனை ஆண்டு என்று நீதிபதி, கபில் கூற வேண்டும். வக்பு நிலம் யாரிடம் பெற்றது. எப்படி வக்பு நிலமாக மாறியது. வக்பு பயனர் என்பதற்கு பொருள் இல்லை. நில பதிவு கலெக்டர் அதிகாரம். நீதிபதி எடுக்க முடியாது. நில தாவாவை மட்டும் தான் நீதிபதி விசாரிக்க முடியும். மேலும் வக்பு நிலம், பஞ்சமி நிலம் என்று அரசியல் சட்டத்தில் இருக்காது. கிரயம் செய்தால் நில உரிமை. மற்றவை பொது உடமை.


Kalyan Singapore
செப் 15, 2025 20:15

நான் அறிந்தவரை உச்ச நீதின்றம் தடை செய்த மட்டும் செய்யாத வகுப்புகள் இவை தான் : தடை செய்தவை : வகஃ வகுப்பில் தகராறில் உள்ள சொத்துக்களின் தீர்ப்பை வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுக்க முடியாது . அதற்கு ஒரு குழு அமைக்கப்படும் மாநில அல்லது மத்திய வகஃ குழுவில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் இருந்தாலும் அவர்கள் அதிகபட்சமான வர்களாக இருக்க முடியாது மாநிலத்தில் அதிகபட்சம் 10 க்கு 3 நபர்களும் மத்திய குழுவில் அதிகபட்சமாக 10 க்கு 4 பேர் மட்டுமே இருக்கலாம் ஒருவர் வகஃ செய்வதற்கு 5 வருடம் இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்ற வகுப்புக்கு தடை விதிக்கிறது தடை செய்யாத முக்கிய வகுப்புகள் : ஒரு தனி மனிதர் மட்டுமே தனது சொத்தை வகஃ செய்யமுடியும் . ஒரு துறையோ ஒரு ஸ்தாபனமோ உதாரணம் பொது நிறுவனங்ள் அல்லது ஒரு கூட்டுறவு சங்கமோ தனது சொத்துக்களை வகஃ செய்ய முடியாது . இதனால் வகஃ போர்டு கைய்யகப்படுத்த முயற்சிக்கும் பல கோவில்களும் கிராமங்களும் அதன் உரிமையாளர்கள் கைக்கு வந்துவிடும் வகஃ குழு உரிமை கோரும் சொத்துக்கள் அது உரிமை கோரும் நாளிலிருந்து வகஃ குழு அனுபவிக்க முடியாது . அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த நாளிலிருந்தே அவர்கள் கைக்கு வந்து சேரும் எந்த ஒரு சொத்தையும் உரிமையாளர் மட்டுமே வகஃ செய்ய முடியும் உபயோகிப்பவர்கள் உரிமையாளராக இல்லாவிட்டால் -உதாரணம் குத்தகைக்கு அல்லது வாடகைக்கு எடுத்தவர்கள் வகஃ செய்யமுடியாது பொது வாக : தடை செய்யப்படாத வகுப்புகள் மத்திய அரசுக்கு பெரும் வெற்றி இதை எதிர்கட்சிகளோ தமிழக அரசோ ஒருநாளும் ஓப்புக்கொள்ளது ஏனெனில் வாக்கு வங்கிக்காக இஸ்லாமியர்களை ஏமாற்றுவதே அவர்கள் வழக்கம்


கடல் நண்டு
செப் 15, 2025 19:42

முக்கா தீர்ப்பை தெரியாமல் கால் பங்கு தீர்ப்பை வெட்டி வைத்து நமது முதல்வர் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்.


Kjp
செப் 15, 2025 19:38

என்னத்த சொல்றது. முதல்வருக்கு தெரிந்ததும் புரிந்ததும் அவ்வளவுதான். எப்படியோ முஸ்லிம்களை ஏமாற்றி போட்டு வாங்க வேண்டும் அவ்வளவே.


kumz rocks
செப் 15, 2025 19:37

ஹாஹாஹா தலீபான் நாட்டு டலீவர் சூடாலின் பக்கிரிக்கு வீட்டோ பவர் இருக்குனு யாருக்குமே தெரியாதுங்கோ


srinivasan
செப் 15, 2025 19:15

அப்போது இந்து கோயில்களை நிர்வகிக்க திமுக அரசுக்கு தடை என்று இந்து மக்கள் சொல்லலாமா? நாத்திகள் எதற்கு கோவில் நிர்வகிக்க வேண்டும். எங்களுக்கு அறநிலையத்துறையே வேண்டாம்.


புதிய வீடியோ