உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாயில் சுருட்டு உடன் சூர்யா... சமூக அக்கறை இது தானா: ரசிகர்கள் அதிர்ச்சி

வாயில் சுருட்டு உடன் சூர்யா... சமூக அக்கறை இது தானா: ரசிகர்கள் அதிர்ச்சி

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையமைப்பில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் 'கருப்பு'. இன்று (ஜூலை 23) சூர்யாவின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதற்காக நேற்று இரவு படத்தின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டார்கள். அதில் 'சுருட்டு' பிடித்துக் கொண்டு சூர்யா நடக்க, சுற்றிலும் கிராமத்து தெய்வங்களின் தோற்றத்தில் கையில் அரிவாளுடன் சிலர் நின்றிருக்கும் வகையில் போஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை கிராமத்துத் தெய்வங்களின் கதைக்களமாகக் கொண்டு உருவாக்கி வருவதாகச் சொல்கிறார்கள்.சினிமாவில் அதிகமான புகை பிடிக்கும் காட்சிகளில் நடித்த ரஜினிகாந்த் கூட இப்போதெல்லாம் அம்மாதிரியான காட்சிகளில் நடிப்பதைத் தவிர்த்துவிட்டார். இடையில் 'ஜெயிலர்' படத்தில் அப்படி ஒரு காட்சி வந்ததற்கும் எதிர்ப்பு கிளம்பியது. விஜய் நடித்து வெளிவந்த 'லியோ' படத்தில் 'நான் ரெடிதான்' பாடலில் விஜய் புகை பிடித்தபடியே நடனமாடியதும், பாடலில் மது அருந்துவது குறித்த வரிகள் இடம் பெற்றதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. தனுஷும் அவரது பட போஸ்டர்களில் புகை பிடிப்பதை வைத்து வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.https://www.youtube.com/embed/Llss1aRo8tw?list=PLnO8uDr9uT6FzDR7lwU3kzwGIRZD5Yl-Cஆனால் சூர்யா கதை வேறு. இவர் எப்போதும் தன்னை சமூக அக்கறை கொண்ட ஒருவராக காட்டிக் கொள்பவர். அவரது மனைவி ஜோதிகா சில வருடங்களுக்கு முன்பு கோவில்களையும், மருத்துவமனைகளையும் ஒப்பிட்டுப் பேசியதும் சர்ச்சை ஆனது. அதன்பின் சூர்யா, ஜோதிகா தங்களது பக்தியை வெளிப்படுத்தும் விதமாக சிலவற்றைச் செய்தார்கள். பிறந்தநாள் அதுவுமாக, குறிப்பாக 50வது பிறந்தநாளில் 'சுருட்டு' பிடிக்கும் போஸ்டர் ஒன்று வெளியாகப் போகிறது என்பது சூர்யாவுக்குத் தெரியாமல் இருக்காது. அப்படி ஒரு போஸ்டரை அவர் வெளியிட அனுமதித்தது ஏன் என்று சமூக வலைத்தளங்களில் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்படியான போஸ்டர்களுக்கு எதிர்ப்பைப் பதிவு செய்யும் பாமக அன்புமணி ராமதாஸ் கூட அமைதியாக இருக்கிறாரே என ரசிகர்கள் கேட்கிறார்கள்.சில நடிகர்கள் இப்படி சர்ச்சை வரும் விதத்தில் வேண்டுமென்றே புகைப்பது, குடிப்பது போன்றவற்றை தங்கள் பட 'புரமோஷனுக்கு' பயன்படுத்துவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.சமூகத்தின் மீது உண்மையான அக்கறை இருந்தால் இந்த 'சுருட்டு' போஸ்டரை உடனடியாக நீக்கச் சொல்வாரா சூர்யா ?, அதோடு அப்படி ஒரு போஸ்டர் வெளியானதற்கு வருத்தம் தெரிவிப்பாரா ?. அல்லது, படத்தின் கதைப்படி, காட்சிப்படி அது தேவையானதாக உள்ளது என்று சமாளிப்பாரா ?.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

kamal 00
ஜூலை 23, 2025 20:32

இன்னொரு கங்குவா சிக்கிருக்கு.... அதுல முக்கியம் பாவாடை பாலாஜி இயக்குறான்.., வெயிட்டிங்..... அதிமுக ஆட்சில இவனுங்க சுத்துன கம்பு க்கு இப்போ பச்சை மட்டய வச்சு சாத்தலம்


Senthoora
ஜூலை 23, 2025 18:10

நான் ஆன்மிகவாதி என்று சொல்லும் ராஜினி சிகரெட் பற்ற வைப்பார் , அதைப்பார்த்து பள்ளி மாணவர்கள் சிகரெட் பிடித்தார்கள், அப்போ எங்கே போனது, உங்க ஞான உபதேசம்.


kamal 00
ஜூலை 23, 2025 20:28

வெயிட் for பாயசம்


Rajalakshmi
ஜூலை 23, 2025 16:55

சினிமா கூத்தாடிகளை ஒருநாளும் role models ஆக ஏற்றுக்கொள்ளலாகாது. இந்த கூத்தாடிகளை பார்ப்பதை அறவே தவிர்த்து சத்சங்கத்தை நாடவேண்டும். தமிழ் நாட்டில் என்றுமே ஆன்மிக ப்ரவசனங்கள் நடக்கின்றன. பணமும் விரயமாகாது. அறிவும் கெட்டுப்போகாது . நாம் மிகவுமே உருப்படுவோம் . கூத்தாடிகளையும் அரசியல்வாதிகளையும் உதாசீனப்படுத்துதல் மிக மிக அவசியம்.


அப்பாவி
ஜூலை 23, 2025 15:58

சுருட்டு இல்லாத கருப்பா? எங்க ஊர் கருப்புசாமி கோவிலில் சுருட்டு கட்டுக்கட்டாக கொளுத்திதான் கும்புடறாங்க. ஒரு மைல் தூரத்துக்கு சுருட்டு ஸ்மெல்தான். சுருட்டு யாவாரிகளும். பொழக்கணும்லா.


S Ramkumar
ஜூலை 23, 2025 15:06

திமுக போன்ற கட்சிகள் அனைத்தையும் சேர்த்து சொல்லுங்கள் சார்.


venugopal s
ஜூலை 23, 2025 14:03

ஏன் இந்த பாஜகவினர் அரசியல், ஆன்மீகம் ,மதம்,சினிமா எல்லாவற்றையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள் என்று புரியவில்லை.இவைகளை தனித்தனியாக பார்க்க பழகிக் கொண்டால் நல்லது.


Ganesun Iyer
ஜூலை 23, 2025 15:05

எப்படி, மாரியம்மன் கோவிலுக்கு காவடி , தீ சட்டி, பாதயாத்ரை போவது மூட நம்பிக்கைன்னு சொல்லிட்டு மதம்மாத்தி வேளாங்கண்ணி சர்ச்க்கு அதே மூடநம்பிக்கையை தெடர்வது போலாவா?


Yaro Oruvan
ஜூலை 23, 2025 15:32

வேணு.. உப்பிஸ் முட்டு கொடுத்து முட்டு கொடுத்து சூர்யாவ மொத்தமா முடிச்சிட்டீங்க ஹா ஹா .. அஞ்சான் நோஞ்சான் கங்குவா தொங்கவா ரெட்ரோ கதம் கதம்.. ET கோட்டி மாசு தூசு NGK என்ன எழவுன்னே தெரியல சிங்கம் 3 அசிங்கம்... இப்போ கருப்பு பருப்பு ... மொதல்ல சினிமாவுல இருக்குறவன அரசியல் பேசக்கூடாதுன்னு சொல்லு .. ஊளை இட்ட ஒரு பயலும் தீயமுக ஆட்சில நவதுவாரங்களையும் பஞ்சு வச்சிகிட்டானுவ.. இந்த லட்சணத்துல நீ பாஜகவுக்கு அட்வைஸ் விடியல் அஸ்தமனம் வேணு


vivek
ஜூலை 23, 2025 18:24

இவர் ஒரு மறை கழன்ற வீணா போன வேணு...வேற என்னத்த சொல்ல.....


இளந்திரயன், வேலந்தாவளம்
ஜூலை 23, 2025 13:55

காசு பணம் துட்டு மணி மணி...


ரங்ஸ்
ஜூலை 23, 2025 13:46

"சுருட்டு" என பெயரை மாற்றினால் சர்ச்சை முடிந்துவிடும்.


Ravi
ஜூலை 23, 2025 13:23

For him, social responsibilities only for stage dialogue.


மூர்க்கன்
ஜூலை 23, 2025 17:11

நீ என்னத்த கிழிச்ச ரவி?? முதல்ல சூர்யாவை விமர்ச்சிக்கும் தகுதி உனக்கு இருக்கா என்று பார்?? சாதி ,மத சாக்கடையில் நெளியும் புழுக்கள் சொல்லும் விமர்சனங்களை துடைத்தெறிந்து விட்டு கருப்பு வருகிறது நெருப்பு மாதிரி??


Karthik Madeshwaran
ஜூலை 23, 2025 12:30

புகை மது பிடிப்பது உடல்நலத்திற்கு கேடு என்று பலமுறை விளம்பரம் செய்கிறார்கள், அதை எல்லாம் தெரிந்தே தான் சில மக்களும் செய்கிறார்கள். எதோ இந்த போஸ்டரால் தான் மக்களை தவறான பாதைக்கு சூர்யா தூண்டுகிறார் என்பது எல்லாம் செம்ம காமெடி.


பிரேம்ஜி
ஜூலை 23, 2025 12:54

உண்மைதான்!


vivek
ஜூலை 23, 2025 18:26

மகேஷ், நீங்க கருத்து போடாமலேயே இருநூறு உபீஸ் என்று எங்களுக்கு தெரியும்


vivek
ஜூலை 23, 2025 19:53

முட்டு ரமேஷ், நீங்க உங்க பிள்ளைகளை இப்படியா வளர்ப்பீர்கள்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை