உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிலத்தை அளக்க ரூ.6 ஆயிரம் லஞ்சம்: சர்வேயர், வி.ஏ.ஓ., கைது

நிலத்தை அளக்க ரூ.6 ஆயிரம் லஞ்சம்: சர்வேயர், வி.ஏ.ஓ., கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கிருஷ்ணகிரி : நிலத்தை அளந்து கொடுக்க, 6,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர், வி.ஏ.ஓ.,வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பந்தாரப்பள்ளியை சேர்ந்தவர் முருகன்,56; விவசாயி. இவர் தன் காலி வீட்டுமனையை அளந்து, தனி பட்டா வழங்க கடந்த மாதம் 8ல், ஆன்லைனில் விண்ணப்பித்தார். இது குறித்து குருபரப்பள்ளி வி.ஏ.ஓ., ராமச்சந்திரன், சர்வேயர் வளையாபதி ஆகியோரை கடந்த, 4ல், சந்தித்து பேசினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xp6ys5yt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது வி.ஏ.ஓ., ராமச்சந்திரன், முருகனிடம், 6,000 ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே, தானும், சர்வேயர் வளையாபதியும் சேர்ந்து நிலத்தை அளந்து கொடுப்போம் என தெரிவித்தார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகன், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பொடி தடவப்பட்ட, 6,000 ரூபாயை முருகனிடம் கொடுத்து அனுப்பினர். அவர் அந்த பணத்தை, வி.ஏ.ஓ., ராமச்சந்திரன், சர்வேயர் வளையாபதி ஆகியோரிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

V. MANI
நவ 09, 2025 08:37

தண்டனைகள் என்பது பெரியதாக இல்லாமல் இருக்கும்போது ஏன் கைது நடவடிக்கை. நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன். நீ அழுவது போல் அழு என்கிற கதையா....


Thiunniyam Dewakar
நவ 08, 2025 16:12

மதராஸ் மாகாணத்தில் வஞ்சம் வாங்குவது சட்ட முறைமைக்கு உட்படுத்த ஆகி விட்டது. அதனால் லஞ்சம் வாங்குவது தவறல்ல.


S.L.Narasimman
நவ 08, 2025 07:32

அடப்பாவிகளா. ஆயிரக்கணக்கான கோடிகளில்அடிச்சி கொண்டருக்காங்கே. அதை எல்லாம் விட்டுட்டு அஞ்சு பத்தை பிடித்ததை பீத்தி கொள்கிறார்கள்.


Krishna
நவ 08, 2025 07:10

Give FastTrack Punishments Within 01Month. No Mercy to Dreaded PowerMisusing& MegaLooting RulingAlliancePartyMen, OverFattened Stooge Officials & Groups /Gangs


Kasimani Baskaran
நவ 08, 2025 06:53

ஞாயமான தொகை. எங்களிடம் 10000 க்கு மேல் கேட்கிறார்கள்.


Mani . V
நவ 08, 2025 04:04

பிளடி இடியட்ஸ். கோடிகளில் லஞ்சம் வாங்கும் திமுக வின் கொள்கைக்கு எதிராக பிச்சைக்காரத்தனமாக ஆயிரங்களில் லஞ்சம் வாங்கும் இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். ஐந்து கட்சி அமாவாசை, கோணல் ஸாரி நேரு இவர்களைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் எப்படி லஞ்சம் வாங்க வேண்டும் என்று.


Kasimani Baskaran
நவ 08, 2025 06:53

தீம்க்காவில் சேர்த்து விடலாம் என்கிறீரா? உள்எதிர்ப்பு வராதா? திறமையில்லாத தீம்க்காவினர்களிடம் இவர்கள் போட்டியிலிட்டால் தீம்க்கா அழிந்து விடாதா... என்னையா நீர். திராவிடம் அழிய யோசனை சொல்கிறேன்.. வெறியில் இருக்கும் உடன்பிறப்புக்கள் கொதறி விடுவார்கள் கொதறி. ஜாக்கிரதை.


Senthamizhsudar
நவ 07, 2025 21:44

மாவட்டத்தை தவறாக ஆட்சி செய்யும் ஆட்சியரையும் கைது செப்ய வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை