உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒவ்வொரு நாட்டிலும் சுதேசி வருகிறது: ஸ்ரீதர் வேம்பு

ஒவ்வொரு நாட்டிலும் சுதேசி வருகிறது: ஸ்ரீதர் வேம்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' இந்தியாவில் மட்டும் சுதேசி வரவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் வருகிறது. இதில் முதலில் விழித்துக் கொண்டது சீனா தான்,'' என ஸோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: எவ்வளவு காசு கொடுத்தாலும் முக்கிய தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம் என்ற நிலை உள்ளது. அதனால் அந்த தொழில்நுட்பத்தை நாம் உருவாக்க வேண்டும். நமக்கு மூளை இருக்கிறது. அதை ஏன் உருவாக்கக்கூடாது. அரட்டை செயலியை அதிகம் பயன்படுத்துவது கிராமப் பகுதியினர் தான்.நம்மிடம் திறமை உள்ளது . இந்தியாவில் அதிகளவு குழந்தைகள் பிறக்கின்றன.சீனா, அமெரிக்காவை விட அதிகம். இவர்களுக்கு எல்லாம் வேலைவாயப்பு என்றால் தொழில்நுட்பத்தை உருவாக்குவது தான் வேலை.நம்மிடம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான நிதி குறைவாக உள்ளது. அதில் ஜிடிபியில் 0.7 சதவீதம் உள்ளது. ஆனால் சீனாவில் அதிகம். வளர்ச்சியடைந்த நாடுகளில் 4 சதவீதம் இருக்கும். இதை தனியார் நிறுவனங்கள் செய்ய வேண்டும். அரட்டை போன்ற செயலியை அரசு உருவாக்க முடியாது. தனியார் தான் செய்ய வேண்டும். அதற்கு ஆராய்ச்சி தேவை.அமித்ஷா உள்ளிட்டவர்கள் இணைந்தது அங்கீகாரமாக பார்க்கிறோம். அரட்டைக்கு வரும் அதிகளவு டிராபிக்கை தாங்க வேண்டும். அதனை சரி செய்துவிட்டோம். 5 கோடி 10 கோடி வந்தால் கூட தாங்கும் அளவுக்கு சரி செய்துள்ளோம்.பயனர்கள் வர வர பிரச்னைகளை சரி செய்து வருகிறோம். இந்தியாவில் மட்டும் சுதேசி வரவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் வருகிறது. இதில் முதலில் விழித்துக் கொண்டது சீனா தான்.அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு வரும் நாடாக மாறியுள்ளது. அதை நாமும் செய்ய வேண்டும். சீனா போன்ற நிலையை அடைய 10 ஆண்டுகள் ஆகும். சில தொழில்நுட்பத்தை அடைய 15 ஆண்டுகள் ஆகும். நாம் தவறான பொருளாதார வல்லுநர்கள் பேச்சை கேட்டோம். சீனா கேட்கவில்லை. தொழில்நுட்பம் வரும் போது விலை குறையும். யுடியூபர்கள் இன்று அதிகம். 30 ஆண்டுக்கு முன்பு யாரும் எப்படி எதிர்பார்க்கவில்லை. ஏஐ தொழில்நுட்பத்தால் வேறு வகையான மாற்றம் ஏற்படும். புது விதமான வேலைகள் உருவாகும். இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
அக் 21, 2025 04:14

எண்ணங்களை சந்தைப்படுத்துதலின் முக்கிய காரணி சமூக வலைத்தளங்கள். அது வெளிநாட்டினரின் கைகளுக்கு போகவில்லை என்றால் அவர்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது. அதன் அடிப்படையில்த்தான் சீனாவில் சமூக வலைத்தளங்களை முழுவதுமாக கட்டுப்படுத்துகிறார்கள்.


கோபாலன்
அக் 21, 2025 03:47

இன, மொழி, ஊழல், சாராயம், அரசியல் வாரிசு முறை, பிரிவினை, திசை திருப்ப அரசியல், பண அரசியல், ஜாதி பாகுபாடு ஆகியவை நம் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது. இந்த அரசியல் கட்சிகளை அடையாளம் கண்டு ஒதுங்கி வைக்க வேண்டும். அப்போது தான் அறிவுசார் இளைஞர்கள் நம் நாட்டில் இருந்து கொண்டு சாதனைகள் செய்வீர் முடியும்


தாமரை மலர்கிறது
அக் 20, 2025 23:26

மிகச்சரியாக கூறியுள்ளார். இந்தியாவிற்கென தனியாக கூகிள், மெட்டா, ட்விட்டர் வேண்டும். இந்தியாவிற்கென தனி வலைத்தளங்கள் வந்தால், அமெரிக்கா வலைத்தளங்களை மக்கள் புறக்கணிப்பார்கள். இல்லாதபட்சத்தில் தான் அமெரிக்கா வலைத்தளங்கள் மேலோங்கி நிற்கின்றன.


Ramesh Sargam
அக் 20, 2025 22:55

வொவொரு நாட்டிலும் சுதேசி வரவேண்டும். மிக மிக அவசியம் சுதேசி. ஆனால் திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்ஸ் ஆட்சிக்கு வரக்கூடாது.


சமீபத்திய செய்தி