உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்விக்கி, ஜொமாட்டோ கூடுதல் கமிஷன்; நாமக்கல்லில் உணவு சப்ளை நிறுத்தம்

ஸ்விக்கி, ஜொமாட்டோ கூடுதல் கமிஷன்; நாமக்கல்லில் உணவு சப்ளை நிறுத்தம்

நாமக்கல்: கூடுதல் கமிஷன் வசூலிக்கும், 'ஸ்விக்கி, ஜொமாட்டோ' ஆன்லைன் நிறுவனங்களுக்கு, நேற்று முதல் உணவு சப்ளை நிறுத்தப்பட்டதால், நாமக்கல் தாலுகாவில் 8 லட்சம் ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.நாமக்கல் நகரம் மற்றும் தாலுகாவில், 100க்கும் மேற்பட்ட ேஹாட்டல்கள், பேக்கரிகளில், ஸ்விக்கி, ஜொமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள், பொதுமக்களுக்கு உணவு சப்ளை செய்து வந்தன.

பல்வேறு கட்டணம்

அந்நிறுவனத்தினர், ேஹாட்டல் உரிமையாளர்களிடம், குறைந்த தொகை கமிஷன் கொடுத்தால் போதும் என, கூறினர்.ஆனால், விளம்பர செலவு, டெலிவரி செலவு, ஜி.எஸ்.டி., என பல்வேறு கட்டணங்களை பிடித்தம் செய்து, குறைந்த தொகையை ேஹாட்டல் உரிமையாளர்களுக்கு வழங்குகின்றனர்.ஒவ்வொரு கடைக்கும் வெவ்வேறு விதமான கமிஷன் வழங்குகின்றனர். குறிப்பாக, 10,000 ரூபாய் மதிப்புள்ள உணவு வியாபாரத்தில், 4,000 ரூபாய் வரை கமிஷனாக பிடித்துக் கொள்வதால், ேஹாட்டல் உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. அதனால், 'கமிஷன் தொகையை ஒழுங்குப்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், ஜூலை, 1 முதல், ஆன்லைன் நிறுவனங்களுக்கு உணவு சப்ளை முழுதுமாக நிறுத்துவோம்' என, கெடு விதிக்கப்பட்டது.இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஸ்விக்கி, ஜொமாட்டோ நிறுவனத்தினர், நாமக்கல் நகர ேஹாட்டல், பேக்கரி உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தி, கமிஷன் தொகை குறைப்பது, மறைமுக கட்டணம் நிறுத்துவது குறித்து விவாதிக்கப் பட்டது.ஆனால், ேஹாட்டல் உரிமையாளர்கள் கோரிக்கையை, உணவு டெலிவரி நிறுவனங்கள் ஏற்க மறுத்தன.

வர்த்தகம் பாதிப்பு

இதையடுத்து, திட்டமிட்டபடி ஸ்விக்கி, ஜொமாட்டோவுக்கு, நாமக்கல் நகரம் மற்றும் தாலுகாவில் உள்ள அனைத்து ஹோட்டல்கள், பேக்கரிகளில் இருந்து உணவு பொருட்கள் சப்ளை நேற்று முதல் நிறுத்தப்பட்டது.நாமக்கல் நகரம் மற்றும் தாலுகா ஓட்டல், பேக்கரி உரிமையாளர்கள் சங்க செயலர் அருள்குமரன் கூறுகையில், ''நாங்கள் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கு சப்ளையை நிறுத்தியதால், நாள் ஒன்றுக்கு, 8 லட்சம் ரூபாய் வர்த்தகம் பாதிக்கும். எப்போதும் போல வாடிக்கையாளர்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பெரிய குத்தூசி
ஜூலை 02, 2025 08:13

ஸ்விக்கி, சோமோட்டோ, செப்டோ ஆன்லைன் நிறுவனங்கள் கொள்ளை கமிசன் அடிக்கிறது. பொதுவாக 100 ருபாய் பொருளை அல்லது உணவை ஐபோன் மூலம் உணவு அல்லது பொருட்களை ஆர்டர் செய்தால் ருபாய் 170 முதல் 200 வரை என விற்று அதிக கமிஷன் சம்பாதிக்கிறார்கள். அதுவே சாம்சங் ஆன்றாய்டு போன் மூலம் ஆர்டர் செய்தால் ருபாய் 100 மட்டுமே. ஐபோன் வைத்திருப்பவர்கள் பணக்காரர்கள் என ஸ்விக்கி, சோமோட்டோ, செப்டோ ஆன்லைன் நிறுவனங்கள் கொள்ளை அடிப்பது கண்டிக்க தக்கது. நானும் இந்த ஸ்விக்கி, சோமோட்டோ, செப்டோ நிறுவனங்களை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டேன். கார் புக்கிங் ஓலா ஆப் னு ஒரு மகா திருடன் இருக்கான். ஓலா பயன்படுத்தி கார் புக் பண்ண ருபாய் 500, GPAY மூலம் ஓட்டுனரிடம் பணம் செலுத்தியாகிவிட்டது. அனால் கொள்ளை நிறுவனமான ஓலா, அவனுகளே wallet னு ஓலா ஆப் ல் பண்ணி நாம் GPAY மூலம் செலுத்தி அதே சவாரிக்கு ஓலா தனியே அவனுக wallet பணத்தை செலுத்துனது போல் ரெகார்ட் பண்ணி நான்கு , 5 சவாரி க்கு பின் நம்மிடம் ஓலா உங்களுக்காக வாடகையை செலுத்தியுள்ளது என ருபாய் 2000, 3000 ஓலா க்கு பணம் செலுத்துங்கள் என தொந்தரவு செய்து மிரட்டிக்கிறார்கள். ஒவொரு சவாரிக்கு நாம் டாக்ஸி ஓட்டுனரிடம் செலுத்திய GPAY payment ஆதாரத்தை அனுப்பி காண்பித்தும் ஓலா கொள்ளை அடிக்கும் நிறுவனம் ஒத்துக்கொள்ள மறுகிறது. அவர்கள் சொல்லும் wallet வசதியை நாம் பயன்படுத்தாமலே நம்ம பணம் செலுத்த வில்லையென்றால் சிபில் ஸ்கோர் ல் remark அடிப்போம் என ஓலா ஆப் திருடர்கள் போன் செய்து மிரட்டுகிறார்கள். சைபர் காவல்துறையில் புகார் அளித்தபின் ஓலா ஆப் டாக்ஸி புக்கிங் நிறுவனம் அடங்கி இருக்கிறார்கள். மக்களே ஓலா டாக்ஸி புக்கிங் செய்யாதீர்கள். ஓலா டாக்ஸி ஆப் ஒரு மோசடி நிறுவனம் ஆகும். .


ديفيد رافائيل
ஜூலை 02, 2025 09:06

Ola booking COD பண்ணிட்டு போகலாமே. Online payment எல்லா இடத்திலும் fraud நடக்குது. Credit card amount transfer நம்பிக்கையான இடங்களில் மட்டும் use பண்ணலாமே...


பெரிய குத்தூசி
ஜூலை 02, 2025 10:12

COD கேஷ் payment செய்த இரண்டு சவாரிக்கும் சேர்த்துதான் ஓலா இந்த மோசடிகளை அரங்கேற்றுகிறது. ஓலா என்ன செய்கிறார்கள் என்றால் வாடிக்கையாளர்கள் knowledge அல்லாமல் ஓலா ஆப் ல் வாலட் மணி என ஒரு feature ஆப் ல் வைத்து ஓலா வே wallet ல் பணம் போடுவது போல் போட்டு ஆப் ல் மோசடியாக நாம் GPAY பயன்படுத்தியோ அல்லது கேஷ் கட்டணம் செலுத்தினாலும், ஓலா வும் ஓட்டுனருக்கு பணம் செலுத்தியதுபோல் ரெகார்ட் ஆப் ல் செய்து மோசடிகளை அரங்கேற்றுகிறார்கள். இதற்க்கு போன் போட்டு மிரட்ட வேலை வெட்டி இல்லாத ஏகப்பட்ட இளைஞர்களை கமிஷன் அடிப்படையில் நியமித்து உள்ளார்கள். இந்த ஓலா மோசடி பற்றி கூகுளை தேடி பார்த்ததில் இந்திய முழுவதும் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. ஆகவே ஓலா ஆப் பயன்படுத்துபவர்கள் உஷார். ஓலா வாழ் பதித்த வாடிக்கையாளர்களின் அனுபவங்கள் இந்த லிங்க் கய் s://www.reddit.com/r/mumbai/comments/187cwqj/ola_cab_booking_scam_beware_we_got_saved_by/கிளிக் செய்து பார்த்தல் ரத்த கணீர் வருகிறது.


Saamaanyan
ஜூலை 02, 2025 06:57

நான் ஸ்விக்கி ஸ்மோடோ உபயோகிப்பதை எப்போதோ விட்டுவிட்டேன்.... பயங்கர கொள்ளை நேரடியாக சென்று வாங்குகிறேன் ...நிறைய பணம் மிச்சம்


ديفيد رافائيل
ஜூலை 02, 2025 09:09

நான் swiggy and zomato Food order பண்றேன் daily. எனக்கு இந்த மாதிரி fraud நடக்குற மாதிரி தெரியல. எப்பவுமே swiggy, zomato, rapido, ola cash on delivery மட்டுமே use பண்ணனும். இது மட்டுமே சிறந்தது.


புதிய வீடியோ