உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.5 லட்சம் லஞ்சம்; ரூ.10 ஆயிரம் அட்வான்ஸ் வாங்கிய தாசில்தார் கைது

ரூ.5 லட்சம் லஞ்சம்; ரூ.10 ஆயிரம் அட்வான்ஸ் வாங்கிய தாசில்தார் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக, ரூ.5 லட்சம் லஞ்ச பணத்திற்கு, ரூ.10 ஆயிரம் முன்பணம் வாங்கிய தாசில்தாரை சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவர், நில அளவீடு செய்து நீரோடை ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக , கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணனை அணுகியுள்ளார். அப்போது, நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற, தாசில்தார் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். முன்பணமாக தை அமாவாசை தினமான இன்று ஜன.,29ம் தேதி 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bgydr6p4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதிர்ச்சியடைந்த மஞ்சுளா, இது சம்பந்தமாக சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் ரு.10 ஆயிரத்தை முன்பணமாக தாசில்தார் பாலகிருஷ்ணனிடம் மஞ்சுளா கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் லஞ்ச பணத்துடன் தாசில்தாரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

RAINBOW
ஜன 31, 2025 13:37

வருவாய் துறையில் மிக மோசம் சர்வேயர்கள் தான். இவர்கள் நிலத்தை அளப்பதும் இல்லை. அஎதாவது குத்து மதிப்பாக புள்ளி வைத்து வித்து ஒரு நாளைக்கு 10 முதல் 25 ஆயிரம் வரை ஆட்டைய போட்டு விடுவானுஙக. அரசும் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. தற்போது gps சர்வே முறயில் ஒரு செ.மி பிசகாமல் அளக்க இயலும். ஆனால் அரசு அதில் கவனம் செலுத்தாமல் மக்களை சிரமப் படுத்துகிறது


Raghu Raman
ஜன 30, 2025 17:33

இதற்கு பதில் பிச்சை எடுத்து வாழலாம்


anantharaman
ஜன 30, 2025 11:20

லஞ்சம் வாங்குபவர்கள், அது 10 ரூபாயாக இருந்தாலும், மரண தண்டனை வழங்கச் சட்டம் வந்தாலகன்றி இது ஒழிய வாய்ப்பில்லை.


Kanns
ஜன 30, 2025 07:00

Encountet Such Corrupt Govt Officials


நிக்கோல்தாம்சன்
ஜன 30, 2025 05:28

பணம் பணம், அதற்காக பிணமாய் போன பாழும் மனித ஜாதி


.Dr.A.Joseph
ஜன 30, 2025 04:39

லஞ்சத்தை கற்பழிப்பு குற்றத்துக்கு இணையாக கருதி தண்டனை வாங்கணும். இவன் தாசில்தாராக இருப்பதால் சொத்துக்களை முடக்க வேண்டும்.


ஆனந்தன் ஆனந்தன்
ஜன 29, 2025 23:07

திட்டம் போட்டு திருடும் கூட்டம் திருடிக்கொண்டுடே இருகுது அதை சட்டம் போட்டு தடுக்குறக்கூட்டம் தடுத்து கொண்டே இருக்குது திருடனா பார்த்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது


Ramesh Kumar
ஜன 29, 2025 22:57

Dismiss him immediately without any delay


Ramesh Kumar
ஜன 29, 2025 22:56

Happy news given by Dinamalar


முருகன்
ஜன 29, 2025 22:26

கை நிறைய சம்பளம் வாங்கும் போது ஏன் இந்த வேலை இவர்களை வேலையை விட்டு நிரந்தரமாக நீக்க வேண்டும்


சமீபத்திய செய்தி