உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.70 ஆயிரம் லஞ்சம்: மதுரையில் தாசில்தார் கைது

ரூ.70 ஆயிரம் லஞ்சம்: மதுரையில் தாசில்தார் கைது

மதுரை: கிரஷர் அமைக்க அனுமதி வழங்க ரூ. 70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மதுரை தெற்கு தாசில்தார் ராஜபாண்டியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த டிரைவரும் கைது செய்யப்பட்டார்.மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம். இவர் குசவபட்டியில் கிரஷர் வைக்க மதுரை தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதற்கு அனுமதி வழங்க தாசில்தார் ராஜபாண்டி (45) ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டார். பேரம் பேசியதில் லஞ்சம் ரூ.70 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இன்று டிரைவர் ராம்கே(32) மூலம் லஞ்சம் கொடுக்கப்பட்டது. அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவல்படி தாசில்தார் ராஜபாண்டியையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Deva Rajalu
செப் 11, 2025 18:47

எல்லாம் சரிதான் அந்த உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 45 நாட்களுக்கு மேல் ஆகியும் ஒன்னும் நடக்கல. அதுக்கு என்னசெய்யறதுக்கு தெரியல. ஏதும் வழி இருந்தா சொல்லுங்க. 1100–க்கு போன் செய்தால் ரெஸ்பான்ஸ் இல்லை.


NSRamesh
செப் 11, 2025 07:29

நண்பா, தகுதி இல்லாத இடத்திற்கு கொடுத்த விண்ணப்பத்தை காரணத்துடன் நிராகரிக்க வேண்டியது தானே தாசில்தாரின் கடமை. எப்படி லஞ்சம் கொடுத்தாக விண்ணப்பதாரர் மீது நடவடிக்கை மேற்கொள்ள முடியும். லஞ்சம் கொடுக்க கூடாது என்பதால் மாட்டி விட்டுட்டாரு.


velmurugan R
செப் 10, 2025 18:38

கிரஷர் வைக்க தகுதி இல்லாத இடத்தில் கிரசர் வைக்க லஞ்சம் கொடுத்த அந்த நபர்களையும் கைது செய்து விசாரிக்க வேண்டும்


சிந்தனை
செப் 10, 2025 16:52

படித்தவர்கள் படித்தவர்கள் என்று அரசு சான்றிதழ் பெற்றவர்கள் அரசு பதவிகளில் இருந்து கொண்டு மக்கள் வரிகளை சம்பளமாக அனுபவித்தவர்கள் மக்களுக்கு சேவை செய்வேன் என்று வாக்கு கொடுத்தவர்கள் இப்படி லஞ்சம் வாங்கினால் அவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுப்பதை விட்டுவிட்டு வைத்துக்கொண்டு விசாரணை என்ற பெயரில் மக்களின் பணத்தை வீணடித்துக் கொண்டு பிறகு அவரை அவர்களை விடுவித்துக் கொண்டும் இருந்தால் திருட்டு அதிகமாக தானே ஆகும் இது கூட தெரியாத அளவுக்கு இவ்வளவு அறிவு கெட்ட நிர்வாகமா நடக்கிறது நாட்டில்...


Madurai Madurai
செப் 10, 2025 15:19

அவ்வப்போது அரசுத்துறை அலுவலர்களின்செல் பேசிகளை லஞ்ச ஒழிப்பு துறை திடீரென்று போய் யார் யாரிடம் என்ன உரையாடல் நடந்தது என்பதை சோதித்தாலே போதுமே கேஸ் நிறைய சிக்குமே போக்குவரத்து துறை, வருவாய் துறை, காவல் துறை, பத்திர பதிவு துறை சுகாதார துறை, மாவட்ட கல்வித்துறை என்று சொல்லி கொண்டே போகலாம் ஒரு எதிர்பார்த்து செல்வதை விட அவர்கள் செல் ரெவெர்சே சர்ச் செய்து கையும் களவுமாக பிடிக்கலாம்


sasikumaren
செப் 10, 2025 14:44

பெரும் கொள்ளைகாரன் சர்வாதிகாரி ...கைது செய்ய முடியுமா


Suresh Sivakumar
செப் 10, 2025 12:23

அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி


Joe Rathinam
செப் 10, 2025 10:54

ஜனநாயக நாட்டில் இலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் யாராலும் தடுக்க முடியாது ஏனெனில் திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. தைரியமானவர்கள் புகார் அளிக்கின்றனர் மற்றவர்கள் வேறு வழியின்றி இலஞ்சம் கொடுக்கிறார்கள். அதேபோல இலஞ்சம் வாங்குவது குற்றம் என்று தெரிந்தும் தைரியமாக வாங்குகிறார்கள். இது தான் ஜனநாயகம். இது தேர்தலில் நிற்பதற்கு சீட்டு வழங்க கட்சியினர் பணம் வாங்கும்போது ஆரம்பிக்கிறது. ஜனநாயக நாட்டில் அந்தந்த தொகுதி மக்கள் மட்டுமே தாங்களே தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்வு செய்ய முடியாத பட்சத்தில் கட்சியின் செயற்குழு முடிவு செய்ய வேண்டும். அப்போது தான் இலஞ்சம் குறைய வாய்ப்புள்ளது


ramesh
செப் 10, 2025 06:25

2026ல் கழக ஆட்சி அமைந்ததும் நிச்சயமாக துணை ஆட்சியராக பணி உயர்வு வழங்கப்படும் , ஏனென்றால் அவர் ஒரு பொக்கிஷம்


Ramesh Sargam
செப் 10, 2025 01:43

லஞ்சம் வாங்கும் குற்றங்களை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும். அதுதான் இல்லை நம்நாட்டில். முதலில் கைது, பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவது, அங்குள்ள நீதிமான்கள், குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்கள் கேற்காமலேயே ஜாமீன் கொடுத்து அவர்களை வெளியில் அனுப்பி, வழக்குகளை நிலுவையில் வைத்து... பிறகு ஒரு நாள் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், இந்த நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்கிறது என்று தீர்ப்பு அறிவிக்கும். இப்படி இருந்தால் எந்த குற்றம் புரிபவன்தான் திருந்துவான்? இதெல்லாம் நமது நீதிமன்றங்களின் அவலங்கள். வெட்கம். வேதனை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை