உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.16 கோடியில் கட்டிய பாலம் 3 மாதத்தில் இடிந்து விழுந்தது; மக்கள் அதிர்ச்சி!

ரூ.16 கோடியில் கட்டிய பாலம் 3 மாதத்தில் இடிந்து விழுந்தது; மக்கள் அதிர்ச்சி!

திருவண்ணாமலை: தென் பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, திருவண்ணாமலையில் ரூ.16 கோடியில் கட்டப்பட்டு செப்., மாதம் திறக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சாத்தனூர் அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் போது, தண்டராம்பட்டை அடுத்த அகரம்பள்ளிப்பட்டு பகுதி மக்கள் தென்பெண்ணை ஆற்றை கடந்து செல்வதில் சிக்கல் நிலவியது. சுமார் 15 கி.மீ., தூரம் அவர்கள் சுற்றி, வேறு ஊர்களுக்கு சென்றனர்.இதனையடுத்து, அகரம்பள்ளிப்பட்டு மற்றம் தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.16 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் இந்த பாலம் கட்டப்பட்டது. செப்., 2ம் தேதி தமிழக அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர அணை, பெஞ்சல் புயல் காரணமாக வேகமாக நிரம்பியது. இதனையடுத்து அந்த அணைக்கு வந்த சுமார் 1.68 லட்சம் கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால், பல இடங்களை தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது.இதில், அகரம்பள்ளிப்பட்டு மற்றம் தொண்டமானூரை இணைக்கும் பாலமும் தப்பவில்லை. ரூ.16 கோடியில் கட்டப்பட்ட பாலம் இந்த வெள்ளத்திற்கு அடித்துச் செல்லப்பட்டது சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வெள்ளத்தை தாங்க முடியாத வகையில் தரம் குறைந்த பாலம் கட்டப்பட்டது எப்படி? தரத்தை அதிகாரிகள் பரிசோதனை செய்யவில்லையா என கிராம மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கண்டனம்

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தி.மு.க., அரசால் கட்டப்பட்ட 16 கோடி மதிப்பிலான பாலம் வெறும் 90 நாட்களில் ஒரே வெள்ளத்தில் ,அடித்துச் செல்லப்பட்டு,மொத்தமாக உடைந்துள்ளது . இந்த தி.மு.க., ஆட்சியில் கட்டப்படுகிற பாலங்கள் எவ்வளவு தரமற்று கட்டப்படுகிறது என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி. பொதுமக்கள் பயணப்பட, ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலங்கள் வலுவாக இருப்பதை உறுதி செய்யாத தி.மு.க., அரசுக்கு கடும் கண்டனம். மறுபடியும் கலெக்ஷன்-கமிஷன்-கரப்ஷன் எனும் தங்கள் தாரக மந்திரப்படியே செயல்படாமல், இந்த பாலத்தை படிப்பினையாக கொண்டு இனி கட்டபடுகிற பாலங்களை , மக்களின் உயிரோடு விளையாடாமல் தரமான பாலங்களாக கட்டுமாறு விடியா தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 78 )

ramesh
டிச 11, 2024 10:54

எடப்பாடி அவர்களே ரொம்ப கூவாதிங்க .தங்கள் ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் கடந்த ஆண்டு மழையில் 3 ஆண்டு உழைப்புக்கும் முன்பாக அடித்து செல்ல பட்டு விட்டது . இன்றும் சரி செய்யும் பனி நடக்கிறது . அருகில் காமராஜர் காலத்தில் 70 ஆண்டுக்கும் முன்பாக கட்ட பட்ட பாலம் இன்னும் கம்பீரமாக உருதியுடன் புது பாலத்தை பார்த்து சிரித்து கொண்டு இருக்கிறது


ramesh
டிச 11, 2024 10:47

அணைத்து டெண்டர் களிலும் நாற்பது சதவீதம் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் வாங்க பட்டால் எப்படி தரமான பாலம் கட்ட முடியும் .இது ஒரு நாளும் திருந்த போவது இல்லை .


xyzabc
டிச 10, 2024 12:43

அதிர்ச்சியை கொடுப்பதில் தி மு க விற்கு நிகர் யாரும் இல்லை.


krishnan
டிச 09, 2024 21:37

DEAR SIR THEIR IS MINIMUM GUARANTEE PERIOD IS THEIR SO ONLY 3 MONTHS OILD FLY OVER SO , THE CONSORN CONTRACT SHOULD PAY AND MINISTER ALSO GIVE COMPONSATION . THEIR IS NO SINGLE RUPEES FROM THE GOVT MONEY.


Bhaskaran
டிச 04, 2024 21:13

சிமிண்ட் சேர்ந்தார்களா இல்லையா


Ramamurthy Srinivasan
டிச 19, 2024 10:27

சிமெண்ட் நா என்ன?


Ibrahim Ali A
டிச 04, 2024 20:13

பாலம் கட்டும் வேலை தொடங்கும்போதே கவனமாக இருக்க வேண்டும் பாலம் என்பது மனிதனுக்கு வாழ்வாதாரம் மக்கள் வரிப்பணம் 16 கோடி நீரில் போய்விட்டது இனி செய்யும் கட்டுமான வேலையில் கவனத்தோடு செய்ய வேண்டும் அரசுக்கு எச்சரிக்கை


aaruthirumalai
டிச 04, 2024 14:11

ஒரேயடியாக கட்டாமல் சுருட்டியிருக்கலாம். கனமழையில் காணாமல் போனதாக கணக்கு காட்டியிருக்கலாம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 04, 2024 14:04

சாண்டில்யன் - இது அநேகமாக இங்கே நான்காவதாக உருமாறிய பெயர் - என்கிற பெயரில் ஒரு மூர்க்கஜிகாதி .....


Mubarak
டிச 04, 2024 13:23

சுமார் 45 ஆண்டுகளுக்கும் முன்பு அமைக்கப்பட்ட பாலம் இன்னமும் கம்பிரமாக இருக்கும் அதே மூங்கில்துறைப்பட்டு பகுதில் அதே 1.68 லட்சம் கன அடி தண்ணீரையும் உள் வாங்கிக்கொண்டு எந்த சேதாரமும் ஆகாமல் பயன்பாட்டில் உள்ளது.


baala
டிச 04, 2024 10:21

முதலில் எல்லா மக்களையும் வாக்களிக்க செய்ய வேண்டும். படித்த முட்டாள்கள் எவ்வளவு பேர் வாக்களிப்பதில்லை ஏன் அப்படி


புதிய வீடியோ