உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர்களுடன் நடந்த பேச்சு தோல்வி: ஜன., 6 முதல் அரசு ஊழியர், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

அமைச்சர்களுடன் நடந்த பேச்சு தோல்வி: ஜன., 6 முதல் அரசு ஊழியர், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், வரும் ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசு ஊழியர், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

தொடர் போராட்டம்

'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்; அரசு துறைகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்; ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படும்' என, கடந்த சட்டசபை தேர்தலின் போது, தற்போதைய ஆளுங்கட்சி தரப்பில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இவற்றை நம்பி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள், தி.மு.க., வுக்கு ஆதரவு அளித்தன. ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிய உள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nwfrvyb6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சட்டசபை தேர்தல் நெருங்குவதால், அரசு ஊழியர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், தற்செயல் விடுப்பு என்று தொடர் போராட்டத்தை ஆசிரியர் சங்கத்தினர் செயல்படுத்தி வருகின்றனர்.

தோல்வி

இந்நிலையில் இன்று (டிசம்பர் 22) சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் ஆகிய 3 பேர் கொண்ட குழுவினர், ஜாக்டோ ஜியோ எனப்படும் அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் தோல்வியில் முடிந்தது.இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வரும் ஜனவரி 6 ம் தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

ஏமாற்றம்

இது தொடர்பாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் கூறியதாவது: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த பேச்சுவார்த்தை ஏமாற்றம் அளித்துள்ளது. திட்டமிட்டபடி ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் துவங்கும். லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த பேச்சுவார்த்தை ஏமாற்றம் அளிக்கிறது.அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையை கருத்து கேட்பு கூட்டமாக மாற்றியது கண்டிக்கத்தக்கது. கடந்த காலங்களில் தீபாவளி பண்டிகை அன்று சிறையில் இருந்த வரலாறு அரசு ஊழியர்களுக்கு உண்டு. பொங்கல் பண்டிகை நெருங்கும்போது கைது செய்தாலும் பரவாயில்லை. கடந்த 4 முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது கூறியதையே தற்போதும் அமைச்சர் வேலு கூறுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

தாமரை மலர்கிறது
டிச 23, 2025 01:11

பழைய ஓய்வூதியத்தை கொண்டுவந்தால், தமிழகம் அடுத்த நாளே திவாலாகிவிடும். வேலை நிறுத்தம் செய்பவர்களை உடனடியாக சஸ்பெண்ட் இல்லை, டிஸ்மிஸ் செய்வது நல்லது.


Kannan
டிச 22, 2025 21:37

போராட்டம் நடத்த மாட்டார்கள் இந்த திமுக ஆதரவு சங்கங்கள்


சந்திரன்
டிச 22, 2025 21:07

ஆசிரியர்கள் மெத்த படித்தவர்கள்தானே. நீங்களே அறிவில்லாமல் மதி கெட்டு விக் தல சொல்றத நம்பி ஆராயாமல் ஓட்டு போட்டுவிட்டு புலம்பினா நீங்க எல்லாம் பாடம் நடத்த லாயக்கில்லாதவனுங்கனு அர்த்தம் முதல்ல உங்களுக்கு பாடம் எடுக்கனும் போல


Kannan Chandran
டிச 22, 2025 20:54

மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் நேரத்தில் அவர்களை போராட்டம் செய்ய தூண்டுவது கருணாநிதியின் தொன்றுதொட்ட வழக்கம் அதுவே தற்பொழுது எதிராக மாறியுள்ளது..


தமிழ்வேள்
டிச 22, 2025 20:42

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அவசியம்/ கடப்பாடு ஏதுவும் இல்லை


தமிழ்வேள்
டிச 22, 2025 22:58

அப்படி ன்னு சொல்லித் திரிகிற திமுக ஜெயிக்க வேண்டும் ன்னு தான் இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேர்தலிலும், திமுகவுக்கு ஓட்டுச் சாவடிகளில், விதிகளை மீறி காவடி எடுத்து ஆடுகிறார்கள்.. அப்புறம் குத்துதே..குடையுதே ன்னா எப்படி?


nagendhiran
டிச 22, 2025 19:53

தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக நாடகமும் அதை தொடர்ந்த்து கோரிக்கை நிறைவேறுவதும்? பின் அதை நம்பி வாக்கு போடுவதும்? அரசு ஊழியர்களின் சாபம் இது?


Ganesh
டிச 22, 2025 20:22

இது தான் உண்மை...


S.L.Narasimman
டிச 22, 2025 19:34

இவர்கள் எல்லாம் விடியல் ஆதரவாளர்களே. அதனால பயப்பட தேவையில்லை.


Venkatesan Srinivasan
டிச 22, 2025 22:08

தண்ட கூட்டம். மக்களை பிடித்த ஒட்டுண்ணிகள். ஊழல் லஞ்சம் திறமையின் மை இவற்றின் மொத்த உருவம்.


G Mahalingam
டிச 22, 2025 19:34

தமிழக அரசு கோர்ட்டுக்கு போகும். அப்போது நீதிமன்றம் அடிகாகிற அளவுக்கு கேள்வி கேட்கும். எதற்காக வாக்குறுதிகள் கொடுத்தீர்கள் என்று கேட்பார்கள். திமுக ஆட்சிக்கு வெட்கம் மானம் சூடு இருக்காது.


Barakat Ali
டிச 22, 2025 19:28

இதன்மூலம் மக்களுக்கு அரசு ஊழியர்கள், அரசு மேல கோபம் வருமே ???? இதையும் திசை திருப்பணுமே ???? ஹிந்திக்காரங்க மேல அவதூறு செய்வோம் .... ஹிந்திகாரங்க மேல அவதூறு பரப்புவோம் ..... நமக்கு இதெல்லாம் புதுசா என்ன ????


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 22, 2025 21:58

அதைவிட பழைய பார்முலா ஒண்ணு இருக்குங்க. ஊழியர் சங்கத்துல இருக்குற கறுப்பு ஆடுங்களை நல்ல பெரிய சூட் கேசா கவனிச்சு சங்கத்தை உடைக்கறது .


G Mahalingam
டிச 22, 2025 19:27

ஆட்சிக்கு வர போவதில்லை. இன்னும் 5 லட்சம் கடன் வாங்கி எல்லோரும் உள்ள நிலுவை தொகையை கொடுங்கள். அடுத்த அதிமுக ஆட்சியை திவாலா நிலைக்கு கொண்டு வையுங்கள்.


Santhakumar Srinivasalu
டிச 22, 2025 21:40

சொன்னாலும் சொல்லா விட்டாலும் இந்த அரசு அதான் செய்யும்!


முக்கிய வீடியோ