மேலும் செய்திகள்
சென்னை – ரேணிகுண்டாவுக்கு முன்பதிவு இல்லாத ரயில்
18-Sep-2026
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு, முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: * தாம்பரத்தில் இருந்து இன்று மாலை 5:00 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 2:20 மணிக்கு மதுரை செல்லும் * மதுரையில் இருந்து நாளை மதியம் 2:00 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், அதேநாளில் இரவு 9:45 மணிக்கு தாம்பரம் வரும். இந்த ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலுார், திருச்சி, திண்டுக்கல் வழியாக இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
18-Sep-2026