உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோசமான சூழலில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் வேதனை

மோசமான சூழலில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் வேதனை

சென்னை:'தமிழ் சினிமாவில் இந்தாண்டு வெளியான, 72 படங்களில், ஐந்து மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. மெகா பட்ஜெட் உட்பட மற்ற படங்கள் தோல்வி அடைந்துள்ள நிலையில், இரு தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து செயல்பட வேண்டும்' என, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில், அதன் செயல் தலைவர் தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் சினிமா கடந்த மூன்று மாதங்களில், 72 திரைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில், ஐந்து படங்கள் தவிர, மற்ற அனைத்தும் தோல்விப் படங்களே. பல திரைப்படத் தயாரிப்பாளர்கள், அவர்களின் மொத்த முதலீட்டையும் இழந்து, அவர்களுக்கு யாருடைய ஆதரவும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்த கடுமையான சூழலில், தயாரிப்பாளர்கள் சங்கம் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்.அதன்படி, தமிழ் சினிமா மறுசீரமைப்பு திட்டங்களை முடிவு செய்து, நடிகர் சங்கம் உட்பட அனைத்து சங்கங்களுடன் இணைந்து அமல்படுத்துதல் அவசியம். இதனால், தயாரிப்பாளர்களின் செலவு குறையும். மலையாள சினிமா துறைபோல, வி.பி.எப்., கட்டணங்களை கணிசமாக குறைக்க முயற்சி எடுக்க வேண்டும். திரைப்பட வெளியீட்டில் ஒழுங்கு முறையை கொண்டு வந்து, சிறு பட்ஜெட் படங்களுக்கும், வருமானம் கிடைக்க வழி செய்ய வேண்டும். சினிமா துறை தற்போது மோசமான சூழ்நிலையில் உள்ளதால், பெரிய முதலீட்டுப் படங்கள் மட்டுமல்லாது, சிறு முதலீட்டுப் படங்களும் பயனடையும் வகையில், நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.'பெப்சி'யுடன் இணைந்து, கூட்டுக்குழுவை அமைத்து, அனைத்து சங்கங்களின் ஒத்துழைப்புடன், தமிழ் சினிமாவில் தற்போது தேவைப்படும் மாற்றங்களை கொண்டு வருவது மிகவும் அவசியம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை