உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பரபரப்பான அரசியல் சூழலில் கூடியது தமிழக சட்டசபை; மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம்

பரபரப்பான அரசியல் சூழலில் கூடியது தமிழக சட்டசபை; மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று (டிச.,09) காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடியது. மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழக சட்டசபை இன்று (டிச.,09) காலை 9.30 மணிக்கு கூடியது. சட்டசபை துவங்கியதும், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, ராணுவ முன்னாள் தலைமை தளபதி பத்மநாபன், ரத்தன் டாடா, சீதாராம் யெச்சூரி உட்பட பலரின் மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.பின்னர் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்பு, சாத்தனுார் அணை திறப்பு சர்ச்சை, சென்னையில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் இருவர் உயிர் இழந்தது, சட்டம் ஒழுங்கு, உள்ளாட்சிகள் இணைப்பு, உள்ளாட்சி தேர்தல் உட்பட பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்பதால், விவாதத்தில் அனல் பறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

xyzabc
டிச 09, 2024 13:12

234 ம் நம்ம கைக்கு வந்து விட்டால் எதிர் கட்சி பிரச்சனை இல்லை.


N.Purushothaman
டிச 09, 2024 12:27

மானங்கெட்டவங்க எல்லாம் ஒன்னு சேர்ந்து தலைமை மானங்கெட்டவருக்கும் அவரது துணைக்கும் துதிபாடுவாங்க ....இதுல என்ன பரபரப்பு இருக்கு ?


sankaranarayanan
டிச 09, 2024 11:50

திராவிட அரசு இன்று திங்கட்கிழமை ராகுகாலம் முடிந்துதம் 91/2 மணிக்கு பார்த்துதான் சட்டசபை கூட்டியிருக்கிறார்கள் இதில் சனாதன தர்மத்தை தவறாமல் காடை பிடிக்கிறார்கள் நன்றி உரித்தாகுக


sankar
டிச 09, 2024 11:43

பல்லிளித்துப்போன, அவமானமான டங்ஸ்டன் சுரங்க விவகாரம்


sundarsvpr
டிச 09, 2024 11:34

சட்ட மன்ற நிகழ்ச்சிகள் மன நிறைவை தரவில்லை. தலைமை அமைச்சர் மட்டும்தான் அதிகம் பேசுகிறார். சென்னையில் சாக்கடைகள் சரியில்லையென்றால் சுகாதார அமைச்சரோ அல்லது உள்ளாட்சி துறை அமைச்சர் பதில் கூறவேண்டும். ஏன் அவர்கள் பதில்கூறவில்லை? தலைமைஅமைச்சர் ஏன்பதில் கூறவேண்டும். இதுதான் மக்களுக்கு புரியவில்லை.


Barakat Ali
டிச 09, 2024 09:53

பலபேரு நிக்க முடியாமே பப்லிக் வெஸ்டர்ன் Tலெட் பொசிஷன்ல இருப்பதை பார்க்க முடியுது ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை