மேலும் செய்திகள்
அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா...
30-Sep-2025
'சிங்கிள் ரூமுக்குள் செயற்குழு கூட்டம் நடத்தும் கட்சி' என, த.மா.கா.,வை, அமைச்சர் துரைமுருகன் விமர்சித்ததால், அவரது வீட்டை முற்றுகையிட அக்கட்சியினர் திட்டமிட்டனர். சமீபத்தில் பேட்டியளித்த வாசன், 'தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கி விட்டது' என்றார். இதற்கு பதிலளித்த துரைமுருகன், 'சிங்கிள் ரூமிற்குள் கட்சி செயற்குழு கூட்டத்தை நடத்துபவர்களுக்கு எல்லாம் பதிலளிக்க விரும்பவில்லை' என, கிண்டலடித்தார். இதனால், கோபமடைந்த த.மா.கா.,வினர், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள துரைமுருகன் வீடு முன் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர். இது, வாசனுக்கு தெரிந்ததும், தன் கட்சி நிர்வாகிகளை கண்டித்து போராட்டத்தை தடுத்து விட்டார். த.மா.கா., பொதுச்செயலர் விடியல் சேகர் கூறுகையில், “துரைமுருகன் விமர்சனம் கடும் கண்டனத்துக்குரியது. தி.மு.க.,வின் மூத்த தலைவர், அரசியலில் முதிர்ச்சி பெற்ற அவர், இதுபோன்று பேசுவது, அவரது அரசியல் அனுபவத்திற்கு உகந்தது அல்ல,” என்றார். - நமது நிருபர் -
30-Sep-2025