உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓரணியில் தமிழகம் பிரசாரம் எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

ஓரணியில் தமிழகம் பிரசாரம் எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

மதுரை:'மக்களிடம் தி.மு.க.,வினர் 'ஓரணியில் தமிழகம்' என்ற பெயரில் ஆதார் விபரங்களை சேகரிக்க தடை விதிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:தமிழகத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க., 'ஓரணி யில் தமிழகம்' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறது. இதற்காக, மக்களிடம் இருந்து ஆதார் விபரங்களை பெறுகின்றனர். கொடுக்க மறுப்பவர்களிடம், 'உங்கள் வீட்டு மகளிருக்கு வழங்கப்படும் உரிமைத் தொகை நிறுத்தப்படும்' என மிரட்டுகின்றனர். விபரம் இல்லாதோரிடம் இருந்து பெறப்படும் ஆதார் அட்டையை வைத்து, மொபைல் போன் எண்களுக்கு ஓ.டி.பி., பெறுகின்றனர். பின், தி.மு.க.,வில் உறுப்பினராக்கப்பட்டதாக தகவல் வருகிறது. அரசியல் நோக்கத்துக்காக, தனிப்பட்ட தகவல்களை பெறுவது தவறு. ஏற்கனவே பெறப்பட்ட விபரங்களையும் அழிக்க வேண்டும். தி.மு.க., பொதுச்செயலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை