உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓய்வூதிய இயக்குனரகம் உள்ளிட்ட 3 துறைகளை மூடியது தமிழக அரசு

ஓய்வூதிய இயக்குனரகம் உள்ளிட்ட 3 துறைகளை மூடியது தமிழக அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு தகவல் தொகுப்பு விபர மையம், ஓய்வூதிய இயக்குனரகம், சிறு சேமிப்பு இயக்குனரகம் ஆகியவை, கருவூலங்கள் கணக்கு துறையுடன் இணைக்கப்பட்டதற்கு, தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை, அரசு தகவல் தொகுப்பு விபர மையம், ஓய்வூதிய இயக்குனரகம், சிறு சேமிப்பு இயக்குனரகம் போன்றவற்றின் செயல் திறனை மேம்படுத்த, அத்துறைகள் சீரமைக்கப்படும் என, 2022ல் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

பதவிகள் ஒழிப்பு

அதன்படி, ஓய்வூதிய இயக்குனரகம், தகவல் தொகுப்பு விபர மையம் போன்றவை, கருவூலங்கள் கணக்கு துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஓய்வூதிய இயக்குனர், தகவல் தொகுப்பு மைய கமிஷனர் பதவிகள் ஒழிக்கப்பட்டு உள்ளன. அதேபோல, சிறு சேமிப்பு துறையும், கருவூலங்கள் கணக்கு துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான அரசாணைகளை, நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் வெளியிட்டு உள்ளார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமை செயலக சங்க தலைவர் வெங்கடேசன், செயலர் ஹரிசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசு ஓய்வூதியர் இயக்குனரகத்தை, அரசு ஒழித்துக் கட்டியுள்ளது. ஓய்வூதியர்களின் குறைகளை தீர்க்க, ஓய்வூதிய இயக்குனரால் மாவட்டந் தோறும் நடத்தப்படும் குறை தீர் கூட்டம், இனி கருவூல கணக்குத்துறை ஆணையரால் கூடுதலாக நிர்வகிக்கப்படும் என, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை, தி.மு.க., அரசு நிறைவேற்றாது என்பதற்கு கட்டியம் கூறும் வகையில், ஓய்வூதிய இயக்குனரகத்தை, கருவூலங்கள் கணக்கு துறையுடன் இணைத்திருக்கும் நடவடிக்கை உள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை பொறுத்தவரை, வாக்குறுதிகள் எள்ளளவும் நிறைவேற்றப்படவில்லை. தற்போதைய ஓய்வூதிய இயக்குனரகம் இணைப்பு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ளோருக்கு, இனிமேல் ஓய்வூதியம் என்பது கானல் நீர்தான் என்பதை, தமிழக அரசு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. இதற்கு மேல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தமிழக அரசின் ஊழியர் விரோத போக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டர் என்பது திண்ணம்.ஏழு லட்சம் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளில், 90 சதவீதம் கருவூலங்கள் கணக்குத் துறையின் செயல்பாடுகளால்தான் ஏற்படுகின்றன.

ஏற்புடையதல்ல

இவற்றுக்கு தீர்வு காண, தனி இயக்குனர் இல்லாமல், கருவூலங்கள் கணக்குத் துறை தலைவரே, ஏற்கனவே உள்ள பொறுப்புகளோடு, இதையும் சேர்த்து கவனிப்பார் என்பது ஏற்புடையதல்ல.அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குறித்து, எந்த வாக்குறுதியையும் வழங்காததற்கும், தி.மு.க., அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதற்கும், எந்த வேறுபாடும் இல்லை. முதல்வர் உடனடியாக, நிதித்துறை வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து, ஓய்வூதிய இயக்குனரகம் பழைய நிலையிலேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

vairamuthu muthu
நவ 18, 2024 09:19

புதிய ஓய்வூதியத்தில் குறைந்தபட்சம் 10000 கொடுக்கிறார்களே இதனால் எத்தனை பகுதிநேர அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்பதை அரசு ஓய்வூதியதாரர்கள் உணர வேண்டும்.


Ethiraj
நவ 18, 2024 07:00

From 1967 till date there are more than 50 Undertakings,corporations ,boards d to accomodate politicians and public servants. To reduce expenditure and better managements all of them without exception to be closed removing at least 50% of staff. Merge them with govt departments. Several politicians cannot waste public funds as Director, chairman etc


Barakat Ali
நவ 17, 2024 14:10

திவால் ஆகிவிட்டதன் அறிகுறி..... ஊழல், வீண் ஆடம்பரம், ஊதாரித்தன செலவுகள், வாக்குவங்கிக்காக இலவச அறிவிப்புகள் ..... இவற்றால் வீழ்ந்தது தமிழனின் தமிழகம் ....... வீழ்த்தியது மோசம் செய்யும் திராவிடம் ......


RAMAKRISHNAN NATESAN
நவ 17, 2024 14:01

நிதிச்சுமையைக் குறைக்க மத்திய அரசின் அறிவுறுத்தலாக இருக்கலாம் ......


sundaram
நவ 17, 2024 10:03

"புதிய ஓய்வூதியத்தில்" உள்ள சாதகமான விஷயங்களை ஓய்வூதியதாரர்களுக்கு எடுத்துச் சொல்லி அரசுடன் பயணிப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன். மீண்டும் மீண்டும் "பழைய ஓய்வூதியம் "பற்றி கேட்பதால் எந்தவொரு பலனும் கிடைக்கப் போவதில்லை என்று தோன்றுகிறது. ஓய்வூதியர்கள் படிப்பிலும் அனுபவத்திலும் உயர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. நன்றி


manivannan
நவ 17, 2024 08:30

அவுட்சோர்சிங் முறையில் ஆட்களை எடுக்கும் இந்த தமிழக அரசு தமிழக மக்களுக்கு அரசு வேலை என்பது கானல் நேராக ஆகிவிட்டது ஆகையால் ஆந்திராவுடன் இணைக்க வேண்டாம் அதானி அம்பானி போன்றவர்களிடம் தமிழக அரசையும் அவுட்சோர்சிங் முறையில் விற்று விடலாம் இவர்கள் நமக்கு தேவை இல்லை


Kasimani Baskaran
நவ 17, 2024 07:08

தமிழக அரசை ஆந்திராவுடன் இணைக்காமல் இருந்தால் சரிதான்...


sethu
நவ 17, 2024 09:29

என்ன நண்பா தமிழக அரசு ரோம் நகத்துடன் இணைத்து 4 வருஷம் ஆச்சே இப்போது ஆந்திராவில் ஜெகன் மோகன் இல்லை சந்திரபாபு நாய்டு இருக்கார் ரொம்ப நல்லதாக போயிந்தி ஹிந்துக்கள் வரவேற்பார்கள் .


Bhaskaran
நவ 17, 2024 06:54

எனக்கு தெரிந்து ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர்300 ரூபாய்கடைசி சம்பளம் வாங்கினதாகவும் இப்போது 8000 ரூபாய் ஓய்வு ஊதியம் பெறுவதாகவும் சொன்னார் ஆசிரியர்களுக்குநல்ல ஓய்வு ஊதியம் தரவேண்டியதுதான் இப்போ சரிவர வேலை செய்யாமல் வட்டி தொழிலை பிரதான வேலையாக செய்யும் கிராமப்புற ஆசிரியர்கள் ஊதிய மே லட்சம் வாங்குவதாக கேள்வி மேலும் பணிக்காலத்தில் கோடி வரை லஞ்சம் சேர்க்கும் அரசு அதிகாரிகள் பழைய ஓய்வு ஊதியம் கேட்பதுநியாயமாஎன்றுஅவரவர்‌மனசாட்சிதான் பதிலளிக்க வேண்டும்


visu
நவ 17, 2024 11:05

நீங்கள் சொல்வது எந்த காலம் அடிப்படை ஊதியத்தில் 50% ஓய்வூதியம் இன்று ஊதியம் மிகவும் அதிகரிக்க பட்டு விட்டது


Paramasivam
நவ 17, 2024 13:38

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. ஆனால் ஐஏஎஸ், ஐபிஎஸ், எம்பி,எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் உண்டு. இது எப்படி???? அவர்கள் அவர்களது பதவிக்காலத்தில் மிகமிகக் குறைவாக சம்பளம் வாங்குகிறார்களோ????


Rajarajan
நவ 17, 2024 06:18

வெரி குட். இப்போதான் இந்த அரசு, நிர்வாக மற்றும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை எடுத்திருக்கு. பாராட்டுக்கள். இதுவே முதலா இருந்து, முடிவா பல தேவையற்ற / நஷ்டத்தில் இயங்கர துறைகளை இழுத்து மூடி / தனியாருக்கு தந்தா, அரசின் நிதி தலைவலி தீரும். அரசு ஊழியறே மற்றும் சங்க அமைப்புகளே, கிளம்புங்க காத்து வரட்டும்.


Mani . V
நவ 17, 2024 05:18

எங்களுக்கு டாஸ்மாக்கில் எப்படி புதுமையை புகுத்தலாம்? எப்படி சரக்கு விற்பனையைப் அதிகரிக்கலாம்? என்று சொல்லும் துறை மட்டும் போதும். மற்றவைகள் தேவையற்றவைகள்.


சமீபத்திய செய்தி